German Archives - Oruvan.com

சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யுமாறு ஜேர்மனுக்கு ஜனாதிபதி அழைப்பு
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத் துறைக்காக அரசாங்கம் எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, விசேடமாக சுற்றுலா வசதிகளை அதிகரித்தல், ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, நிலைபேறான சுற்றுலா பொறிமுறைகள் மூலம் இலங்கை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையில் மனித வளங்களை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரித்தல், கலாசார மற்றும் சூழல்சார் சுற்றுலாத்துறையை

ஊக்குவித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ஜெர்மனி தற்போது 04 ஆவது இடத்தில் உள்ளது.

2024 ஆம் ஆண்டில் 136,000 ஜேர்மன் சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், இந்த ஆண்டு மே மாதம் வரை அந்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 69,000 பேர் இங்கு வருகை தந்துள்ளனர்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யுமாறு ஜேர்மனுக்கு ஜனாதிபதி அழைப்பு appeared first on Oruvan.com.

நீரில் மூழ்கி உயிரிழந்த ஜேர்மன் நாட்டவர்
பெந்தொட்ட – வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 83 வயதுடையஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

The post நீரில் மூழ்கி உயிரிழந்த ஜேர்மன் நாட்டவர் appeared first on Oruvan.com.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜேர்மனி பெண்
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

குறித்த பெண் சுயேட்சைக் குழுவிலிருந்து கலேவல பிரதேச சபைக்கு வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

வைப்புத்தொகை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டு வரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக குறித்த பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

The post உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜேர்மனி பெண் appeared first on Oruvan.com.

ஜேர்மனியின் அனைத்து விமான நிலையங்களும் முடங்கும் அபாயம்
ஜேர்மனியின் பிராங்பேர்ட், மியூனிக் மற்றும் பெர்லின் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் நாளை முடங்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாளை திங்கட்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தொழிலாளர் சங்கமான Ver.di, தரைவழி பணியாளர்கள், பொருட்களை கையாளுபவர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் விமான ரத்துகள் உட்பட புறப்பாடு மற்றும் வருகையில் முக்கிய கட்டுப்பாடுகள் எதிர்பார்க்கப்படுவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி 24 மணி நேரத்திற்குப் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவடையும் என்று தொழிற்சங்கம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வேலைநிறுத்தம் காரணமாக ஹாம்பர்க் விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது என்று அதன் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

“வேலைநிறுத்தங்கள் ஒரு முழு நாட்டையும் விமானப் போக்குவரத்திலிருந்து துண்டித்து வருகின்றன” என்று விமான நிலைய சங்கமான ADV இன் நிர்வாக இயக்குனர் ரால்ப் பீசல் கூறினார்.

இந்நிலையில், “பயணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் ஒரு இணக்கமான தீர்வைப் பெறுமாறு Ver.di-இடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post ஜேர்மனியின் அனைத்து விமான நிலையங்களும் முடங்கும் அபாயம் appeared first on Oruvan.com.