generation Archives - Oruvan.com

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு
இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார் .

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எதிர்வரும் ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா எரிபொருள் வராது.

அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த நெருக்கடியால் இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும். பொதுமக்கள் இதில் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.

The post மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு appeared first on Oruvan.com.

அனல் மின் உற்பத்தியால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழப்பு
இலங்கை மின்சார சபையானது, எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யும் அனல் மின் உற்பத்திற்காக சில்லறை விலையில் எரிபொருளை வாங்குவதால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்தார்.

அனல் மின் உற்பத்திக்காக சலுகை விலையில் எரிபொருள் கிடைக்குமாக இருந்தால் மின்சாரக் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும் எனவும் குறித்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆறு மாதங்களுக்கு 28 பில்லியன் ரூபாய் எனும் அடிப்படையில் 56 பில்லியன் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை அறிக்கையொன்றின் மூலம் மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அதற்கு இது வரையில் எதுவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

அனல் மின் உற்பத்திக்காக டீசல், நெப்தா மற்றும் எரிபொருள் எண்ணெயை பயன்படுத்துவதாக கூறிய அதிகாரி மின் உற்பத்திக்காக அதிகளவிலான டீசல் தொகையை பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் பெற்றுக் கொள்ளும் விலைக்கு மின்சார சபை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் , மின்சார உற்பத்திக்கான எரிபொருளை செலவுகளை ஈடுசெய்யும் விலையில் வழங்கினால் மின்சார சபைக்கு ஆண்டுதோறும் 56 பில்லியன் ரூபாயை சேமிக்க வாய்ப்பு உள்ளது என்றும், இது நாட்டின் மின்சார நுகர்வோருக்கு வழங்கப்படலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

The post அனல் மின் உற்பத்தியால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழப்பு appeared first on Oruvan.com.