Gaza War Archives - Oruvan.com

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள விமானத் தாக்குதல்களில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரம், பெய்ட் லாஹியா, அல்-புரைஜ், நுசைரத் மற்றும் கான் யூனிஸ் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புத் தொகுதிகள் இவ்வாறு தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், செவ்வாயன்று காசாவில் இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கியதாகவும், இறந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அனுப்புவதற்கான விதிமுறைகளை மீறியதாகவும் ஹமாஸ் மீது குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும்,  இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் “எந்தத் தொடர்பும்” இல்லை என்றும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் ஹமாஸ் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, “தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும்  மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருவதாக” காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“காணாமல் போனவர்களில் சிலர் இன்னும் இடிபாடுகளுக்குள் உள்ளனர் எனவும், இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “பலமான தாக்குதல்களுக்கு” உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாக்குதல் உத்தரவிற்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை.

எவ்வாறாயினும், செவ்வாயன்று காசாவில் இஸ்ரேலிய வீரர்கள் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் ஹமாஸ் “எச்சரிக்கை எல்லையை” கடந்து விட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டம் – டிரம்பின் யோசனையை ஏற்றுக்கொண்டார் நெதன்யாகு
காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டத்தை செயல்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார்.

20 அம்சத் திட்டம் வெளியிடப்பட்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதியுடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவை எட்டியுள்ளார்.

அதன்படி, புதிய அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் உடன்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி, ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இஸ்ரேல் எடுக்கும் இராணுவ நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாகக் கூறியுள்ளார்.

காசா பகுதிக்கான அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்த புதிய அமைதித் திட்டத்தில் காசா பகுதியில் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல் மற்றும் ஹமாஸால் பிடிக்கப்பட்ட 20 பணயக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல் உள்ளிட்ட 20 அம்சங்கள் உள்ளடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

The post காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டம் – டிரம்பின் யோசனையை ஏற்றுக்கொண்டார் நெதன்யாகு appeared first on Oruvan.com.

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
காசாவில் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உண்மையான பட்டினியின் அறிகுறிகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

காசா பகுதியில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இரு குழந்தைகள் உட்பட 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2023 ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல், காசா மீது போரைத் தொடங்கியதிலிருந்து, ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவற்றில் 88 குழந்தைகளும் உள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, அண்மைய வாரங்களில் பசியால் பெரும்பாலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக  கூறப்படுகிறது

The post காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பட்டினியின் விளிம்பில் காசா – பசியால் அழும் குழந்தைகள்
பாலஸ்தீனியர்களை பட்டினியால் கொல்லும் இஸ்ரேலின் கொடூரத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. வியாழக்கிழமை மேலும் இரண்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. பல பிரபலங்கள் மெலிந்த பாலஸ்தீன குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இஸ்ரேல் அனுமதி கோரியதைத் தொடர்ந்து, காசாவிற்கு உதவிப் பொருட்கள் ரஃபா எல்லைக் கடவையில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2.4 மில்லியன் மக்கள் வசிக்கும் காசாவிற்கு, பட்டினியைத் தடுக்க வாரத்திற்கு குறைந்தது 500,000 பைகள் தானியங்கள் தேவைப்படுகின்றன.

டெய்ர் அல்-பலாவைச் சேர்ந்த அல் ஜசீரா செய்தியாளர் ஒருவர், பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால், குழந்தைகளின் பசி தாங்க முடியாததாக இருந்தனர் என எழுதினார்.

இதற்கு முன்பு பசியுடன் இருந்தபோதிலும், இவ்வளவு பயங்கரமான சூழ்நிலையை அவர்கள் அனுபவித்ததில்லை என்று பாலஸ்தீனியர்கள் பதிலளித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் மேலும் 17 காசா மக்கள் கொல்லப்பட்டனர். இதுவரை காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 59,219 ஐ எட்டியுள்ளது. 1,43,045 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள மருத்துவர்களின் அமைப்பான இஸ்ரேலிய மருத்துவ சங்கம் ( IMA), இறுதியாக இந்த கொடூரத்தை எதிர்த்துக் களமிறங்கியது.

மருத்துவமனைகளை அழிப்பது, மருந்து மற்றும் உயிர்காக்கும் உபகரணங்களை மறுப்பது, உணவு தேடுபவர்களைச் சுட்டுக் கொல்வது ஆகியவை மருத்துவ நெறிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள் என்று சுட்டிக்காட்டியது.

இதேவேளை, 60க்கும் மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது தடை விதிக்கவும், ஆயுத ஏற்றுமதியை நிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

The post பட்டினியின் விளிம்பில் காசா – பசியால் அழும் குழந்தைகள் appeared first on Oruvan.com.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பிரேரணைக்கு சபையில் ஏகமனதாக அங்கீகாரம்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் நேற்று இடம்பெற்றபோது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான அவசர பிரேரணையை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் சமர்ப்பித்தார்.

இந்தப் பிரேரணை தொடர்பில் பல உறுப்பினர்களும் உரையாற்றியதுடன் ஏகமனதான தீர்மானத்தையும் நிறைவேற்றினர். இப்பிரேரணையில் உள்ளதாவது

“1948 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத இஸ்ரேலிய அரசினால் பாலஸ்தீன மக்கள் தங்களது சொந்த நிலம், அடையாளம் மற்றும் சுயராஜ்யத்தை இழந்து, தொடர் துன்பங்களுக்குள்ளாகி வருகின்றனர். ஏராளமான குடும்பங்கள் அகதிகளாக மாற்றப்பட்டு, பாலஸ்தீனத் தீவிர முறைகள், இடம்பெயர்வுகள் மற்றும் கட்டாயக் குடியேற்றங்களின் மூலம் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் ஒழுக்கமின்றி மீறப்பட்டு வருகின்றன.”

“அண்மைக்காலமாக, பாலஸ்தீனத்தில், குறிப்பாக காஸா மற்றும் வெஸ்ட் பாங்க் பகுதிகளில் இடம்பெறும் வன்முறை நடவடிக்கைகள் பல இலட்சம் மக்கள், சிறுவர்களின் உயிரைப் பறித்துள்ளன. அப்பாவி மக்கள், சிறுவர்கள் பள்ளிகளில், மருத்துவமனைகளில், மற்றும் குடியிருப்புகளில் கூட பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது அனைத்தும் ஐ.நா. மனித உரிமைச் சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானவை.”

பொது மக்கள், சிறுவர்கள் எந்தவொரு போரிலும் இலக்காகக் கருதப்படக் கூடாது. அவர்களின் பாதுகாப்பு என்பது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

சட்ட விரோத இஸ்ரேல் அரசின் தாக்குதல்களால் பாதிக்கப்படும் பாலஸ்தீன மக்களின் நிலைமைகள் குறித்து இப்பிரதேச சபை ஆழ்ந்த கவலையுடன் தனது கருத்தை வெளியிடுகிறது.

“எனவே, இப்பிரேரணை மூலம் இப்பிரதேச சபைக்கு நான்கு முன்மொழிவுகளை பாலஸ்தீன மக்களுக்கும் சிறுவர்களுக்கும் எமது முழுமையான ஆதரவை தெரிவித்துக் சமர்ப்பிக்கிறோம்.

1. பாலஸ்தீன மக்களுக்கும் சிறுவர்களுக்கும் எமது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்வதோடு, பாலஸ்தீன் நாட்டை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதையும், இவர்களின் மனித உரிமைகள், நில உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்டுள்ள நிலைமைக்கு நியாயமும் தீர்வும் தேவை. மனிதாபிமானமும் நீதியும் நிலைநிறுத்தப்படும் வரை, நாங்கள் ஒட்டுமொத்தமாக பாலஸ்தீன மக்களின் பக்கமாக இருக்கிறோம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

2. பாலஸ்தீனத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை வலியுறுத்தி சர்வதேச சமுதாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

3. சட்டவிரோத இஸ்ரேலிய அரசினால் ஈரானை நோக்கி மேற்கொண்ட சமீபத்திய தாக்குதல்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு மட்டுமல்லாது உலக அமைதிக்கும் பெரும் சவாலாக உள்ளன. இந்தக் கடுமையான நடவடிக்கைகள், பிராந்திய போர்க்கலத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதுடன், அமைதிப் பேசுவார்த்தைகளை பாதிக்கின்றன. இவ்வாறான உரிமை மீறல்களை வலியுறுத்தி சர்வதேச சமுதாயம் எதிர்காலத்தில்

நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

4. இலங்கை அரசுக்கும் இந்த நிலையை மனிதாபிமான அடிப்படையில் மதித்து சரியான முடிவுகள் எடுக்க அரசியல் நெறிப்பாதை வகுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

“இந்த பிரேரணை, மனித உரிமையும், சமாதானமும் சார்ந்த நமது சபையின் உறுதியான குரலாகும்.” இந்த பிரேரணை ஏகமனதாக சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுப்பினர் எஸ்.ஐ.எம். ரியாஸ் பிரேரித்து உறுப்பினர் ஏ. பாயிஸ் ஆமோதித்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

The post பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பிரேரணைக்கு சபையில் ஏகமனதாக அங்கீகாரம் appeared first on Oruvan.com.

இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது – 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி
காசாவில் இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது. உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். கடந்த 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உணவு விநியோக பாதைகள் மூடப்பட்ட பின்னர், உணவுப் பரவலைக் கட்டுப்படுத்தும் சாக்குப்போக்காக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு விநியோக மையங்களில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

கடுமையான பசி காரணமாக அவை மரணப் பொறிகள் என்பதை அறியாது, மக்கள் கூட்டம் கூட்டமாக விநியோக மையங்களுக்கு வருகிறார்கள். துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்-மவாசியில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த குண்டுவெடிப்பில் 15 பேரும், காசா நகரில் அகதிகள் தங்கியிருந்த பள்ளியில் மேலும் 15 பேரும் கொல்லப்பட்டனர்.

காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,033 ஆக உயர்ந்துள்ளதுடன், 1,34,611 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததிலிருந்து இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்ந்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலிய அமைச்சரவையில் உள்ள கடும்போக்கு அமைச்சர்கள் மேற்குக் கரையை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை கவலையையும் எதிர்ப்புகளையும் தூண்டியுள்ளது.

நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தலைமையில், 14 அமைச்சர்கள் ஜூலை 27 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்குள் மேற்குக் கரையை முழுமையாக இணைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

The post இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது – 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி appeared first on Oruvan.com.

காசாவுக்கு உதவிக்காக சென்ற கப்பலை இஸ்ரேல் கைப்பற்றியது
மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின் என்ற கப்பலை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.

அந்தக் கப்பல் இஸ்ரேலின் ஆஷ்டோட் துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுதந்திர புளோட்டிலா இயக்கத்தின் ஒரு பகுதியாக, காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் தலைமையிலான 12 தன்னார்வலர்களை அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது.

இஸ்ரேல் முற்றுகையை நீக்கி காசாவிற்கு ஒரு மனிதாபிமான வழித்தடத்தைத் திறக்கும் என்று துன்பெர்க் கூறியிருந்தார். மேடலின் கப்பல் காசா கடற்கரையை அடைவதைத் தடுக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்திருந்தது.

கப்பலைக் கைப்பற்றி அதைத் திருப்பிய இஸ்ரேல், அந்தப் பயணத்தை ‘பிரபல செல்ஃபி கப்பல்’ என்று கேலி செய்துள்ளது.

கப்பலில் உள்ள பயணிகள் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன், நடிகை லியான் கன்னிங்ஹாம் மற்றும் ஜெர்மன் மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் அகார் ஆகியோரும் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இணைந்துள்ளனர்.

சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேலிய முற்றுகையை உடைக்கும் அதே வேளையில், இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.

இந்த பயணத்தை ஃப்ரீ காசா இயக்கத்தின் காசா ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா ஏற்பாடு செய்துள்ளது. ஜூன் முதலாம் திகதி இத்தாலியின் மத்திய தரைக்கடல் தீவுப் பகுதியான சிசிலியிலிருந்து கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் காசாவில் தனது படுகொலைகளை நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், காசாவில் 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உணவு தேடிய மக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எரிபொருள் துண்டிக்கப்பட்டால் மீதமுள்ள காசாவின் மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. கான் யூனிஸில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் எட்டு குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

ரஃபாவில் உள்ள இரண்டு காசா மனிதாபிமான அறக்கட்டளை உணவு விநியோக மையங்கள் மீது நடத்தப்பட்ட புதிய ஷெல் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் சுகாதார அமைப்பு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவி அதிகாரிகள் காசா இனப்படுகொலையின் மிக மோசமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக எச்சரித்தனர்.

The post காசாவுக்கு உதவிக்காக சென்ற கப்பலை இஸ்ரேல் கைப்பற்றியது appeared first on Oruvan.com.

கல்லறைகளாக மாறும் காசா வைத்தியசாலைகள்
முழுமையான எரிபொருள் துண்டிப்பு தொடர்ந்தால் காசாவில் உள்ள வைத்தியசாலைகள் கல்லறைகளாக மாறும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

அவசர அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற சிகிச்சைகளைச் செய்ய மின் பிறப்பாக்கிகளை இயக்கத் தேவையான எரிபொருளை இஸ்ரேல் துண்டித்து வருகிறது.

மின்வெட்டும் கடுமையாக உள்ளது, மேலும் மின் பிறப்பாக்கிகள் இயக்கப்படாவிட்டால் வைத்தியசாலைகள் முழுமையாக இருளில் மூழ்கும். அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களுக்கும் பற்றாக்குறை உள்ளது.

இதற்கிடையில், உணவு விநியோக மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய இராணுவ பாதுகாப்பின் கீழ் அமெரிக்காவை தளமாகக் கொண்ட காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் ரஃபா உணவு விநியோக மையத்திற்கு வந்த மக்களை மீண்டும் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடுமையான பசியால் வாடிய மக்கள் உணவு தேடி வந்திருந்தனர். மையத்தில் காலை ஆறு மணிக்கு உணவு விநியோகம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

வந்தவர்களுக்கு உணவு வழங்குவதற்கு பதிலாக, அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அருகில் நிறுத்தப்பட்டிருந்த டாங்கிகளிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கல்லறைகளாக மாறும் காசா வைத்தியசாலைகள் appeared first on Oruvan.com.

காசா உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – சுயாதீன விசாரணை நடத்த ஐ.நா. கோரிக்கை
உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் நடத்திய படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குட்டெரெஸின் அறிக்கையைத் தொடர்ந்து, இஸ்ரேலும் விமர்சனங்களை முன்வைத்தது.

ஹமாஸ் குறித்து அன்டோனியோ குட்டெரெஸ் ஏன் அமைதியாக இருந்தார் என்பது இஸ்ரேலின் கேள்வி. காசாவில் மோதல் தீவிரமடைந்தாலும், சர்வதேச ஊடகங்களை அந்தப் பகுதிக்குள் அனுமதிக்க இஸ்ரேல் இன்னும் தயாராக இல்லை.

காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலில் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள், தொடர்ந்து சித்திரவதை முகாம்களாக மாறி வருகின்றன.

மே 27 அன்று தொடங்கிய காசா மனிதாபிமான அறக்கட்டளை மையங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

காசாவில் எஞ்சியிருந்த ஒரே டயாலிசிஸ் மையம், இஸ்ரேலிய குண்டுவீச்சில் நேற்று அழிக்கப்பட்டது.

காசாவை முழுமையாக சுற்றி வளைக்கும் இலக்கின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அனைத்து முனைகளிலும் இராணுவ முன்னேற்றத்திற்கு பதிலளித்துள்ளார்.

இதற்கிடையில், காசாவிற்கு உதவிக்காக புறப்பட்ட சர்வதேச குழுவில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கும் ஒருவர்.

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நடிகர் லியாம் கன்னிங்ஹாம் அடங்கிய குழு, ஞாயிற்றுக்கிழமை இத்தாலிய துறைமுகமான கட்டானியாவிலிருந்து புறப்பட்டது.

The post காசா உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – சுயாதீன விசாரணை நடத்த ஐ.நா. கோரிக்கை appeared first on Oruvan.com.

காசாவில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் குண்டு வீசியது; குழந்தைகள் உட்பட 25 பேர் பலி
அகதிகள் மையமாகச் செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பாடசாலை மீது இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் காசாவின் இளைய செல்வாக்கு மிக்க யாகீன் ஹமாத் உட்பட பல குழந்தைகள், இரண்டு செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உட்பட பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இஸ்ரேல் தொடர்ந்து பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அவை தங்குமிடங்களாகும். காசாவில் உள்ள 95 சதவீத பாடசாலைகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து பாடசாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக” காசா சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

13 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு ஒரு டெலிகிராம் புதுப்பிப்பில் அறிவித்தது. 21 பேர் காயமடைந்தனர்.

குண்டுவெடிப்பில் பாடசாலையில் பாதி பகுதி அழிக்கப்பட்டது. பெரும் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முந்தைய நாள், காசாவில் ஒரு பாலஸ்தீனிய பெண் வைத்தியரின் ஒன்பது குழந்தைகளை இஸ்ரேலியப் படைகள் கொன்றன.

நாசர் மருத்துவ வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் மருத்துவமனை குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் அலா அல்-நஜ்ஜாரின் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

கான் யூனிஸில் உள்ள வைத்தியரின் வீட்டை இஸ்ரேல் தாக்கியது. இந்த நேரத்தில் வைத்தியர் பணியில் இருந்தார். கணவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களின் மீதமுள்ள மகன் ஆபத்தான நிலையில் உள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இதற்கிடையில், காசா மீதான மனிதாபிமானமற்ற தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ஸ்பெயின் அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளுடனான சந்திப்பிற்குப் பின்னர் ஸ்பெயினின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

The post காசாவில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் குண்டு வீசியது; குழந்தைகள் உட்பட 25 பேர் பலி appeared first on Oruvan.com.