Gautam Gambhir Archives - Oruvan.com

கம்பீர் 2027 வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பார்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் கவுதம் கம்பீர் 2027ஆம் ஆண்டு வரை தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு ஒக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்துள்ளது.

இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.

கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

எவ்வாறாயினும், இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது.

இந்த நிலையில் , எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்க இந்திய கிரிக்கெட் சபை விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீரின் ஒப்பந்தம் 2027ஆம் ஆண்டு வரை உள்ளது .

இதனால் இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீரே தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தோல்வி தொடர்பாக கம்பீரிடம் விளக்கம் கோர இந்திய கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கம்பீர் 2027 வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பார்! appeared first on Oruvan.com.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு, ISIS காஷ்மீர் அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் நடந்த கொடிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஓரிரு நாட்களுக்கு பின்னர் இந்த கொலை மிரடை்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து, கம்பீர் டெல்லியின் ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் ஒரு முறையான முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி கம்பீருக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்தன – ஒன்று மதியம் மற்றும் ஒன்று மாலை – அதில் ‘IKillU’ என்று எழுதப்பட்டிருந்தது, என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கம்பீர் தனது சமூக பக்கமான எக்ஸ் தளத்தில், “இறந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், இதற்குக் காரணமானவர்களை இந்தியா தாக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்திய மண்ணில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றான பஹல்காம் தாக்குதலில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

தாக்குதலுக்குப் பிறகு சந்தேகிக்கப்படும் பயங்கரவாதியின் வரைபடத்தை பாதுகாப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதுடன், இந்திய அரசாங்கமும் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்கதக்து.

The post பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் appeared first on Oruvan.com.

டிரஸ்ஸிங் அறையின் உரையாடல்களை கசியவிட்ட வீரர் – கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு
2024-25 போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் படுதோல்வியடைந்த பிறகு, இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது, அதில் பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தின் போது, ​​இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறை உரையாடல்களை கசியவிட்ட வீரரின் பெயரை கவுதம் கம்பீர் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

சர்பராஸ் கான் டிரஸ்ஸிங் அறை உரையாடல்களை கசியவிட்டதாக கவுதம் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மையில், 2024-25 போர்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன, அதில் இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறையில் எல்லாம் சரியாக நடக்கவில்லை என்று கூறப்பட்டது.

சிட்னி டெஸ்டுக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது கவுதம் கம்பீர் காணப்பட்டார், ஆனால் கேப்டன் ரோகித் அவருடன் காணப்படவில்லை என்றபோது இந்த வதந்திகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன.

நாளை ரோகித் விளையாடுவாரா என்று கம்பீரிடம் கேட்டபோது, நாணய சுழற்சியில் ஈடுபடும் நேரத்தில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை முடிவு செய்வோம் என்று அவர் கூறினார்.

பின்னர் ரோகித்துக்கு விளையாடும் 11 பேர் அணியில் இடம் கிடைக்காதபோது, ​​இந்திய அணியின் டிரஸ்ஸிங் அரையில் சூழல் மோசமாக உள்ளது என்ற செய்தி வலுவடைந்தது.

கம்பீரிடம் இது குறித்து கேட்டபோது, ​​பயிற்சியாளருக்கும் வீரர்களுக்கும் இடையிலான உரையாடல் டிரஸ்ஸிங் அறைக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

கம்பீரின் இந்த அறிக்கைக்குப் பிறகு, இந்த விவாதம் மேலும் சூடுபிடித்தது. இந்த செய்தி பொய்யாக இருக்க வாய்ப்பில்லை என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கினர்.

இந்த தகவலை எந்த வீரர் கசியவிட்டிருக்கலாம் என்று அனைவரும் யூகிக்கத் தொடங்கினர்.

தற்போது மற்றுமொரு அறிக்கை வெளிவந்துள்ளது, அதில் பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தின் போது, ​​ டிரஸ்ஸிங் அறையில் நடந்த விஷயங்களை கசியவிட்ட வீரரின் பெயரை கம்பீர் வெளியிட்டதாக தெரியவந்துள்ளது.

நியூஸ் 24 அறிக்கையின்படி (ரெடிஃப் மேற்கோள் காட்டியபடி), அந்த வீரர் வேறு யாருமல்ல சர்பராஸ் கான் தான். தகவலை கசியவிட்டதற்காக கம்பீர் சர்பராஸ் கானை கண்டித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தின் போது சர்பராஸ் மீது கம்பீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுவரை, இந்த அறிக்கை குறித்து கம்பீரோ அல்லது சர்பராஸ் கானோ எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

The post டிரஸ்ஸிங் அறையின் உரையாடல்களை கசியவிட்ட வீரர் – கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

தலைமைப் பதவியில் ரோஹித் நீடிப்பாரா?
இந்த ஆண்டு இறுதியில் பகுதியில் இடம்பெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக செயற்பட ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் அடுத்த தலைவர் யார் என்பதை பிசிசிஐ தெரிவுசெய்யாவிட்டால் ரோஹித் சர்மா அணியின் தலைவராக தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மும்பையில் நேற்று சனிக்கிழமை நடந்த கூட்டத்திலும் சர்மா பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஒரு நாள் போட்டிகளின் எதிர்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும், 2025ஆம் ஆண்டு ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பின்னர் ஒரு நாள் போட்டிகளுக்கான தலைவர் குறித்து முடிவெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு ரோஹித், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்த ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

பும்ரா புதிய தலைவராக தெரிவுசெய்யப்படுவாரா?

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நியமிப்பது குறித்து நேற்றை கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், இந்திய கிரிக்கெட் பேரவை உறுப்பினர்கள், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா உட்பட அனைவரும் இது குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தலைமைப் பதவிக்கு பும்ரா பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது தனது பணிச்சுமையை நிர்வகிக்கும் அவரது திறன் குறித்கும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் போது, ​​ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவங்களிலும் இந்தியாவை சில முறை வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தலைமைப் பதவியில் ரோஹித் நீடிப்பாரா? appeared first on Oruvan.com.

கோலி மற்றும் சர்மா சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் – கம்பீர் நம்பிக்கை
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்காக சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் இடம்பெற்ற போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக மோசமான பார்மில் இருக்கும் ரோகித் மற்றும் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என்ற வதந்திகளுக்கு மத்தியில் கம்பீரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

கோலியும், ரோகித்தும் ஆர்வத்துடன் விளையாடும் கடினமான வீரர்கள். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள் என்று கம்பீர் கூறியுள்ளார்.

வீரர்கள் தேசிய அணியில் விளையாடினாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் கம்பீர் மேலும் கூறினார்.

“எந்த வீரரின் எதிர்காலம் குறித்தும் நான் பேசவில்லை, அது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தங்கள் அர்ப்பணிப்பையும் உற்சாகத்தையும் அப்படியே வைத்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் அவர்கள்.

இருவரும் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடிந்த அனைத்தையும் செய்வார்கள் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கம்பீர் தலைமையில் இந்திய அணிக்கு இது இரண்டாவது டெஸ்ட் தொடர் தோல்வியாகும். சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முழு தோல்வியை தழுவியது.

ரோகித் மோசமான பார்ம் காரணமாக ஐந்தாவது டெஸ்டில் இருந்து விலகினார். இதனையடுத்து ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தினார்.

அதேபோல் விராட் கோலி இந்த தொடர் முழுவதும் ஆஸி. பந்துவீச்சாளர்களின் ஆப்-சைட் வலையில் சிக்கினார். ஐந்து போட்டிகளில் அவர் 23.72 சராசரியில் வெறும் 190 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டார்.

சிட்னி டெஸ்டில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அவுஸ்திரேலியா, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியையும் உறுதி செய்தது.

The post கோலி மற்றும் சர்மா சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் – கம்பீர் நம்பிக்கை appeared first on Oruvan.com.