Gajendrakumar Ponnambalam Archives - Oruvan.com

இந்தியா செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு
இலங்கைத் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வினை வலியுறுத்துவதற்காகவும், அதற்குத் தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு இவ்வாரம் சென்னை செல்லவுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது ‘ஏக்கியராஜ்ய’ அதாவது ஒற்றையாட்சி அரசியல் யாப்பைத் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஒற்றையாட்சி முறைமையை தடுத்து நிறுத்தி, உண்மையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டுவர சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, பிராந்திய வல்லரசான இந்தியா, இலங்கை அரசுக்குத் தேவையான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான சூழலை உருவாக்க தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்திற்காகச் சென்னை செல்லவுள்ள உயர்மட்டக் குழுவில்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தலைவர்)

பொ. ஐங்கரநேசன் (தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர்)

செல்வராஜா கஜேந்திரன் (செயலாளர்)

T. சுரேஸ் (தேசிய அமைப்பாளர்)

K. சுகாஷ் (சிரேஷ்ட சட்டத்தரணி மற்றும் உத்தியோகபூர்வ பேச்சாளர்)

N. காண்டீபன் (சிரேஷ்ட சட்டத்தரணி மற்றும் பிரசாரச் செயலாளர்)

ஆகிய பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஈழத் தமிழர்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து இவர்கள் விரிவாக விளக்கமளிக்கவுள்ளனர்

The post இந்தியா செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு appeared first on Oruvan.com.

தமிழின படுகொலைக்கு பொறுக்கூறல் முற்று முழுதாக இல்லாமல் போகும் அபாயம் – கஜேந்திரகுமார் எச்சரிக்கை
ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன் வைப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் செயல் வடிவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழின படுகொலைக்கு பொறுப்பு கூற வைப்பது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் , பொது அமைப்புகள் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தோம்

நாம் அழைப்பு விடுத்தவர்களில் தமிழரசு கட்சியினர் சமூகமளிக்கவில்லை, ஏனைய கட்சியில் இருந்து அவற்றின் பிரதிநிதிகள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் , சிவில் சமூகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன படுகொலைக்கு பொறுப்பு கூற வைத்தல் என்பது ஜெனிவாவுடன் முடக்கப்பட்டு விட கூடாது,பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

அதனை அவ்வாறே விட்டு விட முடியாது. சாட்சியங்களை இழந்து வருகிறோம். இந்த நிலைமை தொடருமாயின் பொறுப்புக்–கூறல் முற்று முழுதாக இல்லாமல் போகும் அபாயம் உண்டு.

அதேவேளை ஐநா அலுவலகம் இந்த அரசாங்கத்திற்கு அங்கீகாரத்தை தேடிக்கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகிறது என்ற பரவலான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் உள்ளது.

அதேவேளை ஐ. நாவை பலவீனப்படுத்தும் , செயற்பாட்டிலும் , பொறுப்பு கூறல் செயற்பாட்டை முடக்கவும் இந்த அரசாங்கம் புதிய யுக்திகளை கையாளுகின்றன.

அதற்கு தெரிந்தோ தெரியாமலோ , தமிழரசு கட்சியும் துணை போகின்றது. அதற்கு செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தமிழரசு கட்சி அனுப்பிய கடிதத்தை கூறலாம்.

இது தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகம் என்பவற்றில் முறைப்பாடுகளை கையளிக்க உள்ளோம்.

இந்த கூட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அனைத்து கட்சிகள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட கடிதத்தில் இருந்து, அதன் முக்கியமான உள்ளடக்கங்களை பெற்று, தற்போதைய கால சூழலுக்கான கோரிக்கைகளையும் உள்ளடக்கி புதிய கடிதத்தை தயாரிக்கவுள்ளோம்.

அதன் மூலம் தமிழ் மக்களின் உண்மையான கோரிக்கை இவை தான் என கூறுவது மாத்திரமின்றி அதற்கு செயல் வடிவத்தை கொடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், மக்களை அணி திரட்டல் செயற்பாடுகளையும் செய்யவுள்ளோம்

புதிதாக நாம் எழுதவுள்ள கடிதம் வெளிவந்த பின்னர் அக்கடிதத்தின் உள்ளடக்கத்தை பார்த்த பின் , இது வரையில் எம்முடன் இணையாதவர்கள் இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

The post தமிழின படுகொலைக்கு பொறுக்கூறல் முற்று முழுதாக இல்லாமல் போகும் அபாயம் – கஜேந்திரகுமார் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்
வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்களுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கைச் சேர்ந்த பொது மக்களே இந்தப் போராட்டம்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம்,

விடுதலைப் புலிகள் இனி ஒருபோதும் வரப்போவதில்லை என கூறும் படையினரிடம், அதி உயர் பாதுகாப்பு வலையங்களை ஏன் வைத்திருக்கின்றீர்கள் என்பதற்கு பதிலில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வடக்கில் உள்ள பொது மக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், அங்குள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிப்படவில்லை.

இது வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்நிலையிலேயே இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றார்.

The post வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் appeared first on Oruvan.com.

17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம் – யாழில் சுமந்திரன் சவால்
யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம்(8) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது பேசிய அவர் ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறுவதில்லை.

சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே எமது கட்சி உருவாக்கப்பட்டது. அதற்காகவே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகின்றோம்.

1956ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழ் மக்கள் பிரதானமாக நம்புவது இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டும்தான். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் மக்களது ஆணைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என வெளிப்படையாக சொன்னேன்.

மக்கள் தவறாக முடிவெடுப்பதில். என்பிபி வாக்களித்த விவகாரத்தில் கூட அது மக்களுடைய தீர்ப்பு. அரசாங்கம் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களது தீர்ப்பினை மதிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் கோரி வருகின்றோம்.

ஒரு குறிப்பிட்ட சபையில், தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் மக்களின் ஆணையை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த சபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டியது உங்களுடைய ஜனநாயகக் கடமை. இதனை நாங்கள் 2018ம் ஆண்டிலேயே சொல்லியிருக்கிறோம்.

சந்திப்புகள் தொடர்பாக சில உணர்வுபூர்வமான விடயங்கள் இருக்கின்றன நாங்கள் அதனை மதிக்கின்றோம். அதனைப் புறம்தள்ளவில்லை. கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவரது வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நானும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அனாலும் அவர் இடையில் தும்புக்கட்டை கதை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் எமது கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாம் சந்திப்புக்கான இடத்தை மாற்றியிருந்தோம்.

எனவே சந்திப்புக்கான இடம் குறித்த விவகாரத்தில் மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தாக்கம் ஏற்பட்டிருந்தால் அத்தனையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தைப் பார்க்கின்றபோது நாங்கள் யாருடனும் கூட்டாட்சி அமைக்கவில்லை.

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தய் கோருகின்ற அரசியற் கட்சி. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கிய பிறகு அதற்கு குறுக்கே எவரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

யாழில் உள்ள 17 சபைகளில் ஒன்றிரண்டு சபைகளில் எமக்கு பெரும்பான்மை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் சொன்ன கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்லிவிட்டு, அதனை மறுதலிப்பதற்காக கபடத்தனமாக பலர் செயற்படும் காரணத்தால், 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

மக்களின் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தீயை விட கூடுதலாக எடுக்கும் வகையில் மக்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஏனையவர்களால் தேசிய மக்கள் சக்தியை மேவி வர முடியவில்லை.

தமிழா மக்களை, தமிழ்த் தேசியத்தை நிமிர வைத்திருக்கிற ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. அவ்வகையிலான மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கான உரித்துடையவர்கள். அதற்கு குறுக்கே எவரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விக்கிறோம் எனத் தெரிவித்தார்.

The post 17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம் – யாழில் சுமந்திரன் சவால் appeared first on Oruvan.com.

திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்!
அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் தயாரித்த நகல் வரைபுகள் மற்றும் 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கம் தயாரித்த வரைபுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்புக்கான நகல் தயாரிக்கப்படவுள்ளன.

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழு புதிய யாப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் பணிகள் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி பிரதமர் தலைமையிலான ஆட்சி முறையை உருவாக்க வேண்டும் என்ற யோசனைகளும் உண்டு.

13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களும் அடுத்த நான்கு வருடங்களுக்கு நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இல்லை.

மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு அவசியமில்லை என ஜனாதிபதி அநுர கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடுதல் மற்றும் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தல் மாத்திரமே தற்போதைய திட்டமாகவுள்ளது.

இப்பின்புலத்தில் புதிய யாப்பு தயாரிப்பு விஷயத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக சுமந்திரன் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும், புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புக்கு அவர் ஒத்தழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாகவும், நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார சக உறுப்பினர் ஒருவரிடம் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எந்த அடிப்படையில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று நீதியமைச்சா் எதுவும் கூறவில்லை. ஆனால், சத்தியலிங்கம் மிக விரைவில் வெளிநாடு செல்லவுள்ளதால், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சுமந்திரன் நியமிக்கப்படலாம் என்று தமிழரசுக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இப்பின்னணியில்தான் உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் விடயத்தில் கஜேந்திரகுமார் அணியுடன் கூட்டு சேராமல், ஈபிடிபியுடன் கூட்டுச் சேர்வதற்கான காய் நகர்த்தல் நடத்திருக்கிறது போல் தெரிகிறது.

அதேநேரம், மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின் பிரகாரமே ஈபிடிபி தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

குறிப்பாக தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஈபிடிபியை ஆட்சி அமைக்குமாறு வலியுறுத்துமாறு, மகிந்த ராஜபக்ச மூத்த பத்திரிகை ஆசிரியர் ஒருவரிடம் கூறியதாகவும், அத் தகவலை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அந்த பத்திரிகை ஆசிரியர் தொலைபேசியில் எடுத்துச் சொன்னதாகவும் கொழும்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

சுமந்திரன் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் ஏற்கனவே நல்ல உறவில் இருக்கும் ஒருவர். அதன் காரண – காரியமாக டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி தமிழரசுக் கட்சியுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதை மகிந்த ராஜபக்ச, கொழும்பு மைய அரசியல் நோக்கில் விரும்பியிருக்கலாம்.

சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, அவர்களிடையே கட்சி அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், வடக்கு கிழக்கு ஈழத்தமிழர்களைக் கையாளும் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று செயற்பட்டு வருகின்றனர் என்பது பொதுவான உண்மை.

அந்த அடிப்படையில் அநுரகுமார திஸாநாயக்க – சுமந்திரன் ஆகியோர் ஊடான தொடர்புகள் – காய்நகர்த்தல்கள் தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியாக தமக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணம் மகிந்த ராஜபக்சவுக்கு இல்லாமலில்லை.

கட்சி அரசியல் வேறுபாடுகள் இன்றி அரசியல் தலைவர்களுக்குரிய சட்ட உதவிகளை சுமந்திரன் கடந்த காலங்களிலும் மேற்கொண்டிருந்தார் என்ற பின்னணியில் இந்த நகர்வையும் அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், கஜேந்திரகுமார் மேற்கொண்ட முயற்சி, எந்தளவு தூரம் நிலையாக இருக்கும் என்ற கேள்விகள் உண்டு.

ஆனாலும், 13 பற்றிய பேச்சுக்கள் தற்போதைக்கு எழக் கூடிய நிலைமை இல்லாத ஒரு பின்னணியில், முழுமையான சுயாட்சிக் கட்டமைப்புக்கான ஏற்பாடுகளை, புதிதாக அமைத்த கூட்டின் மூலம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. குறிப்பாக இன அழிப்பு பற்றிய சர்வதேச நீதிக்குரிய ஏற்பாடுகளையும் துரிதமாகக் கையாள வேண்டிய காலம் இது.

ஆகவே, கஜேந்திரகுமாரின் அடுத்த கட்ட செயல்பாடு இந்த அடிப்படையில் அமையுமா அல்லது வெறுமனே உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான ஒரு கூட்டா என்பதை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஏனெனில், சங்கு அணி உறுப்பினர்கள் சிலரின் கடந்த கால செயற்பாடுகள் கொழும்பு மைய அரசியலுக்குள் பழக்கப்பட்டவை. 13 இல்லாவிட்டாலும், ஒற்றையாட்சியை ஏற்கும் பண்பு சங்கு அணியில் சிலரிடம் தொடர்ச்சியாக நிலவுகின்றது.

இப் பின்புலத்தில் மிக இறுக்கமான ஏற்க முடியாத மனக் கசப்புகளோடுதான் கஜேந்திரகுமார், சங்கு அணியுடன் ஒப்பந்தம் செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை.

இருந்தாலும் கசப்புகள் – சகிப்புத் தன்மைகள் – நெருக்கடிகள் – கடும் விமர்சனங்கள் போன்றவற்றை கஜேந்திரகுமார் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தலைமை ஒன்றிடம் இருக்க வேண்டிய பண்பு இதுதான். அதேநேரம், யாழ்ப்பாணத்தைக் கடந்து வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்ற இயங்கு நிலைக்கு கஜேந்திரகுமார் புத்துயிர் கொடுக்கவும் வேண்டும்.

சங்கு அணியுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலத்துக்குப் பொருத்தம் என்று கூறினாலும், ”சுயநிர்ணய உரிமை” – ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை” என்ற பிரதான இரு உள்ளடக்கங்கள், வெறுமனே பேச்சுடன் மாத்திரம் நின்றுவிடுகின்றதா என்ற கேள்விகள் இல்லாமலில்லை.

ஆகவே, இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய அல்லது மேலும் செய்து காண்பிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு உரியது. அது இலகுவான காரியம் அல்ல.

ஆனாலும், 2009 இற்குப் பின்னர், அதாவது கடந்த பதினைந்து வருடங்களின் பின்னரான சூழலில், தேர்தல் அரசியலை இடது கையாளும் விடுதலைச் செயற்பாட்டு அரசியலை வலது கையாளும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு உண்டு.

ஏனெனில், புதிய அரசியல் யாப்பு என்ற கோசத்துடன் ஈழத் தமிழர் விவகாரம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து அடுத்த ஆண்டு முற்றாக நீக்கம் செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் கசிந்துள்ளன.

சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது கட்சி அரசியலுக்கு அப்பால் ஈழத்தமிழர் விவகாரத்தை ஒரு புள்ளியில் நின்று சர்வதேச அரங்கில் கையாண்ட பயன்கள் தான் இவை.

கட்சி அரசியலைக் கடந்து தமிழர் விவகாரத்தைக் கையாள ”வெளியுறவுக் கொள்கை” – ”சர்வதேச இராஜதந்திர சேவை” என்ற இரு பிரதான மையங்களையும் சிங்கள தலைவர்கள் வகுத்திருக்கின்றனர். அவர்களின் பிரதான வகிபாகம் அதுதான்.

ஆகவே அரசு அற்ற சமூகம் என்ற நிலையில், ”வலுவான கட்டமைப்புடன் கூடிய வெளியுறவுக் கொள்கை” – சர்வதேச இராஜதந்திர சேவை” என்ற இரு பிரதான மையங்களைத் தமிழ்த் தரப்பு உருவாக்க வேண்டும்.

இப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு மாத்திரமல்ல, அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள அணிக்கும் உண்டு.

கடந்த கால கொழும்பு மைய அரசியலை கைவிட்டு, அதாவது இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட அரசியல் வழி முறைகளில் கவனம் செலுத்தாமல், 1985 ஆம் ஆண்டு திம்புக் கோட்பாட்டு அடிப்படையிலான கட்டமைப்புக்கு வழி சமைக்க வேண்டும்.

பூட்டான் (Bhutan) தலைநகர் திம்புவில் இடம்பெற்ற பேச்சில் விடுதலைப் புலிகள், ஈபிஆர்எல்எப். புளொட் ரெலோ உள்ளிட்ட இயக்கங்கள் பங்குபற்றியிருந்தன. அங்கு ஏற்பட்ட இணக்கத்துக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்திருந்தது.

ஆகவே சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பகிரங்கமாகத் தங்கள் நிலைப்பபாட்டை அறிவிக்க வேண்டும்.

அருந்தவபாலன், ஐங்கரநேசன் ஆகியோர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கனவே தமிழ்த் தேசியப் பேரவையாக ஒன்றிணைந்துள்ள பின்னணியில், இச் செயற்பாட்டை நகர்த்த முடியும் என்ற நம்பிக்கைகள் மக்களிடம் உண்டு.

அ.நிக்ஸன்-

The post திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்! appeared first on Oruvan.com.

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் கைச்சாத்திடப்பட்டது.

யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர்.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன், க.நாவலனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலையே காணப்பட்டது.

தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களை தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

The post தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து appeared first on Oruvan.com.

சுமந்திரன், கஜேந்திரகுமார் இன்று சந்திப்பு
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகளவான வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு தவிசாளர் பதவி வகிப்பதற்கான ஆதரவினை ஏனைய கட்சிகள் வழங்க வேண்டுமென்ற கோட்பாட்டினை இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்கணவே தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் எம்.ஏ.சுமந்திரனின் அதே கருத்திற்கு அமைவான கருத்தொன்றினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு மேலதிகமாக எம்.ஏ.சுமந்திரன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு அடுத்ததாக கணிசமான வாக்குகளைப் பெற்ற கட்சி, உபதவிசாளர் பதவியை வகிக்க முடியும் என்ற கோட்பாட்டினையும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே குறித்த விடயங்கள் தொடர்பாக உள்ளூராட்சி மன்றில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மாத்திரமே நாளைய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

The post சுமந்திரன், கஜேந்திரகுமார் இன்று சந்திப்பு appeared first on Oruvan.com.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம் – கஜேந்திரகுமார்
பெரும்பாண்மையை பெறாத உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய பேரவையின் நிலைப்பாடுகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது குறிப்பிட்ட அவர், ‘ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கடந்த உள்ளுராட்சித் தேர்தலை தம் தனியே சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்தார்கள்.

தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழ்த் தேசிய பேரவையுடன் தேர்தலுக்குப் பின்னர் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து கூறியிருந்தார்கள்.

அந்தப் பின்னணியில் நாம் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடன் பேசி கொள்கையளவில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவதன் ஊடாக அதன் பின்னர் தமிழரசுக் கட்சியுடனும் பேசும் நோக்குடன் அவர்களை அணுகியிருந்தோம்.

இந்நிலையில் தாம் தமது பங்காளிக் கட்சிகளுடன் பேசி ஒரு முடிவை அறிவிப்பதாக சொன்ன போதும் எமக்கு ஒரு முடிவும் அறிவிக்கப்படவில்லை.

தமிழ்த் தேசிய பேரவை இத்தேர்தலில் பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகிய மூன்று சபைகளில் அதிகூடிய வாக்குகளுடன் வென்றிருக்கிறோம்.

ஊர்காவற்றுறையில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் தமிழ்த் தேசிய பேரவை முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் இந்த நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறோம்.

ஏனைய சபைகள் குறித்து இதுவரை மற்ற கட்சிகளுடன் எவ்வித புரிந்துணர்வும் எட்டப்படாத நிலையில், குறித்த சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களை எடுத்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு கோரப்படும் சபைகளில் ஆதரவு வழங்குவது எனவும், ஆதரவு கோரப்படாத இடங்களில் தமிழ்த் தேசியக் கட்சிக்கலுக்கு எதிராக போட்டியிடாமல் இருப்பது எனவும் தீர்மானித்திருக்கின்றோம்.

இதேவேளை, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவை ஆகிய கட்சிகளுக்கு இடையில் கொள்கை ரீதியாக ஓர் இணக்கப்பாடு எட்டினால் ஒற்றுமை முயற்சியை ஒருதலைப் பட்சமாக முறித்துக்கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும்’ எனத் தெரிவித்தார்.

The post தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம் – கஜேந்திரகுமார் appeared first on Oruvan.com.

கஜேந்திரகுமாருடன் இணைந்தார் சரவணபவன்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சில விடயங்களுக்காக நான் காத்திருந்தேன். நான் ஏற்கனவே ஒரு கட்சியின் இருந்தேன், அங்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று எதிர்ப்பார்த்திருந்தேன். அவர்கள் என்னை தொடர்புகொள்வார்கள் என்று பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை.

இந்நிலையில், எனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து பல்வேறு தரப்பினர்கள் தன்னுடன் பேசியிருந்தனர். மிகத் தெளிவாக அவர்களின் கொள்கைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள்.

ஆனால் எவ்வித சலனமும் இல்லாமல் தமிழ் தேசியத்தை கையிலெடுத்து அதை மிக காத்திரமாக கொண்டுச் செல்பவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர்.

இந்நிலையில் அவர்களுக்கு எனது முழு ஆதரவையும் வழங்க முடிவெடுத்துவிட்டேன்.

இலங்கை தமிழரசு கட்சியினர் என்னை விலக்கி வைத்தனர். அந்த கட்சியில் ஒரு தனி நபர் முழு ஆதிக்கத்தையும் செலுத்திக்கொண்டிருக்கின்றார்.

அந்த ஆதிக்கத்திற்கு சார்பாக சில செயற்பாடுகளும் நடந்துவிட்டன.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post கஜேந்திரகுமாருடன் இணைந்தார் சரவணபவன் appeared first on Oruvan.com.

தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சிக்கு ஆதரவு – அர்ச்சுனா எம்.பி
உள்ளூராட்சி சபைதேர்தலில் பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் திருகோணமலை நகரசபைக்கும் போட்டியிடும் இரு சுயேட்சைக்குழுக்களை தமது கட்சியுடன் இணைப்பது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று குறித்த இரு சுயேட்சைக்குழுக்களையும் சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமது கட்சியானது வட கிழக்கில் இணைந்த கட்சியாக விஸ்தரிக்கப்பட்டு அதனை பதிவு செய்தல் தொடர்பாக வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியம் தொடர்பில் கருத்து வெளியிடும் கட்சிகளை தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சிக்கு முன்னுரிமை வழங்கி ஆதரிக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏனைய தமிழ் கட்சிகளை ஆதரிப்பது தொடர்பில் ஒரு பொது முடிவுக்கு வர உத்தேசித்திருப்பதாகவும், எக்காரணம் கொண்டும் தேசிய மக்கள் சக்தியுடன் போட்டியிடப் போதில்லை எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தன்கு இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே, பிள்ளையானை கைது செய்துள்ளனர். பிள்ளையானின் சாரதியை கைது செய்துள்ளனர்.

அம்பைத்தான் எடுத்துள்ளனர் எனவும் அம்பு எய்தவர்களை பிடிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சிக்கு ஆதரவு – அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.