fuel Archives - Oruvan.com

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணம் என சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த முறைமையினால் ஊழியர்கள் கடுமையாக அசெளகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் கூறினார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் 6% இலாபத்தைப் பெற்றுக்கொள்வதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் அது வெட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், முன்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் முறையாக வழங்கப்படாததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் டி.வி. சாந்த சில்வா சுட்டிக்காட்டினார்.

The post அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை போராட்டம் appeared first on Oruvan.com.

அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி – விக்டோரியாவில் ஏப்ரல் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து
அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருளின் விலை, விட சுமார் 85% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விக்டோரியா மாநில மக்கள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் மாதம் முழுவதும் பொதுப் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக மக்கள் அதிகமாக பஸ், ரயில், டிராம் போன்றவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்து, எரிபொருள் தேவையை குறைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

மக்கள் தேவையற்ற அளவில் சேமித்து வைத்தமையே எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

ஆனால், விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபோன்றே, குயின்ஸ்லாந்தில் முன்பே குறைந்த கட்டண பொதுப் போக்குவரத்து திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் இந்த இலவச சேவை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்றும், இதற்காக சுமார் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருளின் விலை, விட சுமார் 85% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விக்டோரியா மாநில மக்கள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் மாதம் முழுவதும் பொதுப் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக மக்கள் அதிகமாக பஸ், ரயில், டிராம் போன்றவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்து, எரிபொருள் தேவையை குறைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

மக்கள் தேவையற்ற அளவில் சேமித்து வைத்தமையே எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

ஆனால், விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபோன்றே, குயின்ஸ்லாந்தில் முன்பே குறைந்த கட்டண பொதுப் போக்குவரத்து திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் இந்த இலவச சேவை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்றும், இதற்காக சுமார் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

The post அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி – விக்டோரியாவில் ஏப்ரல் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து appeared first on Oruvan.com.

மார்ச் மாதத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் மார்ச் மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை அறிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு, விலை திருத்தம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் எதிர்காலத்தில் எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, எரிபொருள் ஒதுக்கீடு முறைமை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

The post மார்ச் மாதத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு appeared first on Oruvan.com.

ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் பெற இராஜதந்திர பேச்சுவார்த்தை
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இன்று கருத்து தெரிவித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இதன்போது இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்

இலங்கைக்கான ஈரான் தூதுவர், எரிபொருளை வழங்கத் தயாரென கூறியதை வரவேற்கிறோம். இருப்பினும் கப்பல் வசதிகளைக் கொண்ட நாடுகளே அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும், இலங்கைக்கு தற்போது அந்த வசதி இல்லை.

தற்போது பல எரிபொருள் முன்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் சில எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாட்டை வந்தடையவுள்ளன” என்றார்.

The post ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் பெற இராஜதந்திர பேச்சுவார்த்தை appeared first on Oruvan.com.

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு
இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார் .

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எதிர்வரும் ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா எரிபொருள் வராது.

அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த நெருக்கடியால் இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும். பொதுமக்கள் இதில் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.

The post மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு appeared first on Oruvan.com.

மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது
இலங்கையால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான ‘சீஃபிரண்டியர்’ என்ற எரிபொருள் கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவெல (கெரவலப்பிட்டிய) எரிபொருள் களஞ்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் மற்றுமொரு தொகுதி இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் டொல்பின் இறங்குதுறை ஊடாக கொலன்னாவை களஞ்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இந்தக் கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் 90 ஒக்டேன் பெற்றோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் ஆகிய எரிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

The post மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது appeared first on Oruvan.com.

45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது
ஒன்றரை மாத காலத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் இருப்பு ஒன்பது நாட்களுக்குள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மோதலைத் தொடர்ந்து முதல் 10 நாட்களுக்குள், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள்

மூலம் பொதுமக்களுக்கு 57,000 மெட்ரிக் டொன் டீசல் வழங்கப்பட்டதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதே காலகட்டத்தில், 47,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை கருத்திற்கொண்டு, அரசாங்கம் அனைத்து வாகனங்களுக்கும் QR எரிபொருள் விநியோக முறையை கட்டாயமாக்கியுள்ளது.

QR முறையின் கீழ், ஒவ்வொரு நபரும் வாரத்திற்கு பெறக்கூடிய எரிபொருளின் அளவு ஒரு நிலையான ஒதுக்கீட்டிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட QR எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ், மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு ஐந்து லீற்றர்களுக்கு உரிமை உண்டு. முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள் 15 லீற்றர்களைப் பெறலாம், வேன்கள் மற்றும் சிறப்பு நோக்க வாகனங்கள் 40 லீற்றர்களைப் பெறலாம்.

லொறிகளுக்கு 200 லீற்றர்களுக்கும், பேருந்துகள் 60 லீற்றர்களுக்கும் உரிமை உண்டு.

இதனிடையே, பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை திருத்தியமைக்கவும், நிலையான ஒதுக்கீட்டிலிருந்து விலகி, பயணித்த தூரத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட முறை முழுமையாக செயல்படுத்தப்படும் வரை, பேருந்துகளுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபை மூலம் வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

முன்னர் QR எரிபொருள் அமைப்பின் கீழ் பதிவு செய்த நபர்களுக்கு, வாகன உரிமையில் அல்லது பதிவுசெய்யப்பட்ட கையடக்கத்தொலைபேசி எண்களில் எந்த மாற்றங்களும் இல்லாத பட்சத்தில், fuelpass.gov.lk வலைத்தளம் மூலம் QR ஐ பதிவிறக்கம் செய்யலாம்.

முன்னர் பதிவு செய்யாதவர்களுக்கும், உரிமையாளர் விபரங்கள் அல்லது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை மாற்றிய வாகன உரிமையாளர்களுக்கும், fuelpass.gov.lk வலைத்தளம் புதிதாக பதிவு செய்ய அல்லது மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் அல்லது தொலைபேசி எண்களை மாற்றிய நபர்களையும், புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்தவர்களையும் அதிகாரிகள் அடையாளம் கண்டு வருவதாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விரைவாகக் கண்டறிந்து தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post 45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது appeared first on Oruvan.com.

மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பை வந்தடைந்தது
மற்றுமொரு எரிபொருள் கப்பல் இன்று (16) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

ஊடங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அதிகாரிகள், மாதிரிகளை சோதனை செய்த பின்னர் இன்றைய தினமே எரிபொருளை கப்பலிருந்து இறக்கத் தொடங்குவோம்.

இந்த கொள்கலன்களில் 18,000 மெட்ரிக் டொன் டீசல், 17,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் டொன் சூப்பர் டீசல் உள்ளது.

மேலும், நாங்கள் முன்பதிவு செய்த கப்பல்கள் வழமை போன்று போல் கொழும்பை வந்தடையும்.

பயணிகள் பேருந்துகளுக்கு டிப்போக்களில் இருந்து எரிபொருளை வழங்க தீர்மானிக்கப்பட்டு டிப்போக்களுக்கான எரிபொருள் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்குகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம், மேலும் அந்தக் கணக்குகளிலிருந்து பல்வேறு தரவுகளைச் சேகரிக்க முயற்சிக்கிறோம்.

சிலர் அனைத்து தகவல்களையும் சேகரித்து மற்றவர்களின் பெயர்களில் QR குறியீடுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். fuelpass.gov.lk என்ற வலைத்தளத்தைத் தவிர வேறு எந்த வலைத்தளத்தையும் நாங்கள் வெளியிடவில்லை.

ஆகவே இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும். போலியான வலைத்தளங்களில் தரவுகளை உள்ளிட்டால் QR குறியீட்டை பெறும் வாய்ப்பை இழப்பீர்கள்” என்றும் அவர் எச்சரித்தார்.

The post மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பை வந்தடைந்தது appeared first on Oruvan.com.

QR குறியீட்டைப் பெறுவது எப்படி?
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்

1. புதிய பயனர்கள் பதிவு செய்வது எப்படி?

நீங்கள் புதிய வாகன உரிமையாளர் என்றால் அல்லது இதற்கு முன் பதிவு செய்யவில்லை என்றால்

fuelpass.gov.lk என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

பின்னர் , Register என்பதை அழுத்தவும்

இப்போது உங்களது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் மற்றும்

கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உள்ளிடவும்.

தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு (NIC) பதிலாக கடவுச்சீட்டு (Passport) அல்லது வணிக பதிவு இலக்கத்தைப் (Business Registration Number) பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

பிறகு உங்கள் கையடக்கத்தொலைபேசிக்கு வரும் இரகசிய குறியீட்டை (OTP) உள்ளிட்டு

Verify என்பதை அழுத்தவும்

பின்னர் உங்களது பெயர் மற்றும் முகவரிகளையும் பதிவு செய்து Next என்பதை அழுத்தவும்

இப்போது உங்களுடைய வாகன இலக்கம், Chassis இலக்கம் மற்றும் எரிபொரு வகையை உள்ளிடவும்.

பின்னர் கீழே உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறேன் என்ற பெட்டியை

கிளிக் செய்ய மறக்காதீர்கள்

இப்போது Register என்பதை அழுத்தி QR ஐ பதிவிறக்கம் செய்யலாம்

பதிவு முடிந்ததும் உங்கள் QR குறியீடு திரையில் தோன்றும்.

அதனைத் Screenshot எடுத்துக்கொள்ளவும் அல்லது அச்சிட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில்

காண்பித்து எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்.

2.ஏற்கனவே QR குறியீட்டைப் பதிவுசெய்த பயனர்கள்

வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில், https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.

வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருப்பின், அதே இணையத்தளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

The post QR குறியீட்டைப் பெறுவது எப்படி? appeared first on Oruvan.com.

ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல்
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று  அமைச்சில்  இடம்பெற்றது .

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில்  வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார் .

இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்துக்கு  அறிவிக்கத் தூதுவர் இதன்போது சம்மதம் தெரிவித்துள்ளார் .

அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார் .

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவின் ஆதரவு கிடைக்கும் என ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

இச்சந்திப்பில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post ரஷ்யாவிடம்  எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம்  கலந்துரையாடல் appeared first on Oruvan.com.