France Archives - Oruvan.com

பிரித்தானியா-பிரான்ஸ் ஒப்பந்தம் முடிவு!! ஆங்கில கால்வாயை கடக்க முடியாமா?
இங்கிலாந்துக்கும், பிரான்ஸூக்கும் இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், ஆங்கில கால்வாய் ஊடக நாட்டிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே , சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் மூலம் பிரான்சின் வடக்கு எல்லையில் காவல் பணிக்கான செலவில் மூன்றில் இரண்டு பங்கை பிரித்தானியா செலுத்துகிறது.

தற்போதைய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமையும் காலாவதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 37வது பிரித்தானிய-பிரான்ஸ் உச்சிமாநாட்டில் தொடங்கியது.

அத்துடன், மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானிய அதிகாரிகள் கடந்த வாரம் பாரிஸ் சென்றிருந்தனர்.

சட்டவிரோத குடியேறிகள் பயணிக்கும் சிறு படகுகளை இடைமறிப்பதை அதிகரிக்குமாறு உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் பிரான்ஸ் அரசாங்கத்தை கோரிவருகின்றார்.

இதன் காரணமாக பிரான்ஸ் அரசுடனான புதிய ஒப்பந்தம் தாமதமாகியுள்ளதாக தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது.

இந்த ஒப்பந்தத்தில் “நெகிழ்வுத்தன்மையையும் புதுமையையும்” சேர்க்க முயற்சிப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post பிரித்தானியா-பிரான்ஸ் ஒப்பந்தம் முடிவு!! ஆங்கில கால்வாயை கடக்க முடியாமா? appeared first on Oruvan.com.

லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பு – கனடா, பிரான்ஸ் கண்டனம்
தெற்கு லெபனானை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கனடா அதற்கு வலுவான கண்டனம் தெரிவித்துள்ளது.

லெபனானின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கனடா எச்சரித்துள்ளது.

இந்த மாதம் தொடங்கியதிலிருந்து லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 1,072 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல், தனது வட எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு லெபனானின் சுமார் 30 கி.மீ பரப்பளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக மனிதாபிமான நெருக்கடி மோசமடையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கனடா அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களைப் பின்பற்றி, பொதுமக்கள் மற்றும் மருத்துவ அமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, பிரான்ஸும் இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என கோரியுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், லிட்டானி நதி வரை பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படுமென தெரிவித்துள்ளார். அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் உடனடியாக திரும்ப அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தெற்கு லெபனானில் பாலங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தரைவழி படையெடுப்பிற்கான முன்னோட்டமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என லெபனான் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லெபனானிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நடந்த தாக்குதலில் இஸ்ரேலில் ஒரு பெண் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது.

The post லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பு – கனடா, பிரான்ஸ் கண்டனம் appeared first on Oruvan.com.

மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமடையும் – பிரான்ஸ் ஜனாதிபதி
மத்திய கிழக்கில் தற்போது இடம்பெற்று வரும் போரில் எரிசக்தி கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படுவது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிராந்தியம் முழுவதும் உள்ள ஹைட்ரோகார்பன் உற்பத்தித் தளங்களை இந்த மோதல் குறிவைக்கத் தொடங்கியிருப்பது, அபாயகரமான புதிய கட்டத்தைக் குறிக்கிறது என்று மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஈரான் பாதிக்கப்பட்டதைப் போலவே, பல வளைகுடா நாடுகளும் முதல் முறையாகத் தங்களின் உற்பத்தித் திறனில் பாதிப்பைச் சந்தித்துள்ளன,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மேலும், பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்கவும், பிராந்தியத்தை நிலைப்படுத்தவும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நேரடி” பேச்சுவார்த்தை நடத்த மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.

The post மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமடையும் – பிரான்ஸ் ஜனாதிபதி appeared first on Oruvan.com.

உக்ரைனுக்கு ரஃபேல் F4 விமானங்களை வழங்கும் பிரான்ஸ்
ரஷ்ய தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் பாரிய ஒப்பந்தத்தில், 100 ரஃபேல் F4 போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸுக்கு அருகிலுள்ள விமான தளம் ஒன்றில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் , உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த நடவடிக்கையை “வரலாற்று சிறப்பு வாய்ந்தது” என்று பாராட்டினார்.

இருப்பினும், ஒப்பந்தத்தின் நிதி விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அனைத்து ரஃபேல் F4 போர் விமானங்களும் 2035க்குள் வழங்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

The post உக்ரைனுக்கு ரஃபேல் F4 விமானங்களை வழங்கும் பிரான்ஸ் appeared first on Oruvan.com.

காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை
காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது .

பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“காசாவில் போர், படுகொலை மற்றும் மரணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. பாலஸ்தீன மக்களுக்கு நீதியைக் காட்ட வேண்டிய நேரம் இது.

காசா, மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமில் பாலஸ்தீனத்தின் நிலையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்,” என்று ஐ.நா.வில் மக்ரோன் உரையாற்றிய போது தெரிவித்திருந்தார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பாலஸ்தீன அரசுக்கு ஐ.நா.வில் முழு உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

திங்களன்று பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா கூட்டிய ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஆறு நாடுகள் மட்டுமே பாலஸ்தீனத்தை புதிய நாடாக அங்கீகரித்தன, இது இரு நாடுகள் தீர்வில் கவனம் செலுத்தியது.

மொனாக்கோ, பெல்ஜியம், அன்டோரா, மோல்டா மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகள் அனைத்தும் பிரான்ஸூக்கு முழு ஒப்புதலை வழங்கியுள்ளன.

பாலஸ்தீனத்திற்கான மாநில அந்தஸ்து ஒரு வாய்ப்பு, ஒரு பரிசு அல்ல என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார் .

கடந்த வாரம், பெஞ்சமின் நெதன்யாகு, பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தால் மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பதன் மூலம் பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தினார்.

இருப்பினும், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸை நிராயுதபாணியாக்கி ஒழித்து, பாலஸ்தீன அதிகாரசபைக்கு அதிகாரத்தை மாற்றும் திட்டத்தை வெளியிட்டுள்ளன.

பாலஸ்தீன பாதுகாப்புப் படைகளுக்குப் பாதுகாப்பை வழங்கவும் பயிற்சி அளிக்கவும் ஐ.நா. படைகளை அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் அரபு லீக் கூட காசாவில் ஹமாஸ் அல்லாத தலைமையிலான அரசாங்கத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்தது .

The post காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை appeared first on Oruvan.com.

இஸ்ரேலுக்கு பின்னடைவு – பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன
பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன.

பிரான்சைத் தவிர, பெல்ஜியம், லக்சம்பர்க், மோல்டா, மொனாக்கோ, அன்டோரா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன.

முன்னதாக, அவுஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்திருந்தன.

நேரம் வந்துவிட்டதால் நாங்கள் இங்கு கூடியுள்ளோம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எங்கள் குறிக்கோள் என்று மக்ரோன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச சமூகத்தில் 80 சதவீதம் பேர் இப்போது பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர்.

இது காசாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது கடுமையான இராஜதந்திர அழுத்தத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பல நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அறிவித்ததால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அச்சுறுத்தலை முன்வைத்துள்ளார்.

ஜோர்டான் நதிக்கு மேற்கே இனி ஒரு பாலஸ்தீன நாடு இருக்காது என்றும், பாலஸ்தீன அரசை உருவாக்க அழைப்பு விடுப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு சமம் என்றும் நெதன்யாகு தெளிவுபடுத்தினார்.

ஹமாஸை அழிப்பதன் மூலம் போர் இலக்கு அடையப்படும் என்றும் அவர் கூறினார். ஈரானிய அச்சு அழிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் நட்பு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்ததால் நெதன்யாகு ஆத்திரமடைந்துள்ளார்.

இப்போது ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பாதையை எடுக்கத் தொடங்கியுள்ளன.

காசாவில் இஸ்ரேலின் கொடூரமும் படுகொலையும் ஐரோப்பிய நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான பொதுமக்களின் உணர்வை எழுப்பியுள்ளது.

The post இஸ்ரேலுக்கு பின்னடைவு – பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன appeared first on Oruvan.com.

பற்றி எரியும் பிரான்ஸ் – இதுவரை 40,000 ஏக்கர்கள் நாசம்
பிரான்சின் எல்லைக்கு அருகே உள்ள ஆட் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் அளவிலான பகுதிகள் இதுவரை எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த காட்டுத்தீயால் ஒருவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் குறைந்தது 13 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

2000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. 80 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய காட்டுத்தீ இது என அங்குள்ள அதிகாரிகள் விவரிக்கின்றனர்.

மேலும், மோசமான வானிலை காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டுத்தீ ஏற்பட புவி வெப்பமடைதல் மற்றும் வறட்சியே முக்கிய காரணம் என அந்நாட்டின் பிரதமர் பிரான்கோயிஸ் பேய்ரூ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பற்றி எரியும் பிரான்ஸ் – இதுவரை 40,000 ஏக்கர்கள் நாசம் appeared first on Oruvan.com.

போதைப்பொருள் வன்முறை – சிறுவர்களுக்கு ஊரடங்கு உத்தரவை விதித்த பிரான்ஸ் நகரங்கள்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, பல பிரான்ஸ் நகரங்கள் இளைஞர்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன.

இதன்படி, தெற்கில் உள்ள நீம்ஸ் மாகாணம் அண்மையில் இந்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

16 வயதுக்குட்பட்டவர்கள் “வன்முறைக்கு ஆளாகாமல்” தடுப்பதற்கும் “பதட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கும்” இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அந்த மாகாணத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கூடுதல் பொலிஸ் பிரிவுகளும் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் பட்டப்பகலில் நடந்த பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர். மேலும், கடந்த வாரம் நீம்ஸின் புறநகர்ப் பகுதியில் 19 வயது இளைஞனின் உடல் பகுதியளவு எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மேயர் ஜீன்-பால் ஃபோர்னியர் அறிவித்துள்ளார்.

நிலைமை “சகிக்க முடியாததாக” மாறிவிட்டது என்றும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் “பயம் மற்றும் பயங்கரவாதத்தின் சூழலை” உருவாக்கியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடாத சிறார்களைப் பாதுகாக்கும் என துணை மேயர் ரிச்சர்ட் ஷீவன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கில் 120 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பெஜியர்ஸில், கடந்த ஆண்டு முதல் இரவு 11 மணி முதல் காலை 06 மணி வரை 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகின்றது.

மேலும் கடந்த மார்ச் மாதம் சில பகுதிகளில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கும் ஊரடங்கு உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள போதிலும் பெஜியர்ஸ் வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்மேற்கு பிரான்சில் உள்ள லிமோஜஸிலும் இதேபோன்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை நாட்களில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் நீண்டகாலமாக குழு மோதல்களின் மையமாக இருந்த மார்சேய் நகருக்கு அப்பால் போதைப்பொருள் வன்முறை விரிவடைந்து வருவதை சமீபத்திய சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

உள்துறை அமைச்சகத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் போதைப்பொருள் தொடர்பான வன்முறையில் 110 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post போதைப்பொருள் வன்முறை – சிறுவர்களுக்கு ஊரடங்கு உத்தரவை விதித்த பிரான்ஸ் நகரங்கள் appeared first on Oruvan.com.

பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை பிரான்ஸுக்கு அனுப்ப நடவடிக்கை
சிறிய படகுகளினூடாக பிரித்தானியாவுக்கு வருகைத்தரும் புலம்பெயர்ந்தோர் சில வாரங்களுக்குள் பிரான்ஸுக்குத் திருப்பியனுப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் லண்டனில் நேற்று வியாழக்கிழமை இந்த ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார்கள்.

ஆரம்பத் திட்டம் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே உள்ளடக்கியது என்றாலும், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வருகைத்தருவோரை பிரான்ஸுக்குத் திருப்பி அனுப்ப முடியும் என்பதற்கான முன்னுதாரணம் பெரிய திருப்புமுனையொன்றாக இருக்கும் என பிரித்தானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“ஒருவர் உள்ளே, ஒருவர் வெளியே” (one in, one out) என்ற இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிலர் பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள், என்றாலும் இங்கிலாந்தில் புகலிடம் கோருவதற்கு சட்டப்பூர்வமான உரிமைகோரல்கள் இருப்பதாகக் கருதப்படும் சம எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் வாரத்திற்கு 50 பேர் வரை திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

The post பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை பிரான்ஸுக்கு அனுப்ப நடவடிக்கை appeared first on Oruvan.com.

பிரான்ஸில் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை
பிரான்ஸ் நாட்டில் குழந்தைகள் வந்து செல்லும் அனைத்து வெளிப்புற இடங்களிலும் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

கடற்கரைகள், மைதானங்கள், பொது பூங்காக்கள், பாடசாலைகளுக்கு வெளியே, பஸ் நிலையம் மற்றும் விளையாட்டு அரங்குகள் ஆகிய இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரான்ஸில் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை appeared first on Oruvan.com.