found Archives - Oruvan.com

காணாமற்போன மஞ்சள் அனகொண்டா கண்டுப்பிடிக்கப்பட்டது
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமற்போனதாகக் கூறப்பட்ட ‘மஞ்சள் அனகொண்டா’  பாம்பு,  பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி  “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் சிலர் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடளித்திருந்தனர்.

சுமார் ஒன்றரை அடி நீளமுடைய இந்த “மஞ்சள் அனகொண்டா” பாம்பு செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த பாம்பு காணாமற்போயுள்ளது. இது தொடர்பில் மிருகக்காட்சிசாலையின் சேவையாளரிடம் விசாரிக்கையில், பாம்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் கதவு சரியாக மூடப்படவில்லை என்பதால் பாம்பு வெளியே சென்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக ஊழியர்களை ஈடுபடுத்தி மிருகக்காட்சிசாலை முழுவதும் தேடுதல் நடத்திய போதிலும், அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், பராமரிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளை அடுத்து, நேற்று (16) அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார். இத்தகைய பின்னணியிலேயே, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிற்குள் மறைந்திருந்த நிலையில் அனகொண்டா குட்டி இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பராமரிப்பாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள்  இந்தக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post காணாமற்போன மஞ்சள் அனகொண்டா கண்டுப்பிடிக்கப்பட்டது appeared first on Oruvan.com.

கொழும்புத் துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு
கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் கப்பல்துறைக்கு அருகில் கடலில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்புத் துறைமுகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

அவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது. சடலம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும், அவர் நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

The post கொழும்புத் துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு appeared first on Oruvan.com.

ரயிலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் காணாமற்போயுள்ளதாக தகவல்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்றின் உடல் காணாமற் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொடை பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலொன்றின்

கழிப்பறையிலிருந்து கடந்த மாதம் முதலாம் திகதி குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நீதவானின்

உத்தரவின் பேரில், குழந்தையின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டது.

கடந்த 29 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் மரண பரிசோதனை நடத்துவதற்காக தெமட்டகொடை பொலிஸ்நிலைய அதிகாரிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலை பிணவறைக்குச் சென்று,விசாரணை மேற்கொண்ட போது, குறித்த குழந்தையின் உடல் காணாமற் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post ரயிலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் காணாமற்போயுள்ளதாக தகவல் appeared first on Oruvan.com.

பசறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞர்கள்
பதுளை, பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 02 சடலங்கள் இன்று (31) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

28 மற்றும் 33 வயதுகளை மதிக்கத்தக்க இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சடலங்கள் மீது எவ்வித காயங்களும் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post பசறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞர்கள் appeared first on Oruvan.com.

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் – சந்தேநபர்களுக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னர் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இராணுவ சிப்பாய் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

The post முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் – சந்தேநபர்களுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை
தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரபு நாட்டோடு இணைக்கப்பட்ட QR குறியீடு கொண்ட ஒரு பை ஒன்றிற்குள் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

இந்நிலையில் அன்றைய தினம் துறைமுகம் மற்றும் விமான நிலையம் வழியாக நாட்டிற்குள் வந்தவர்கள் தொடர்பில் பொலிசார் தகவல்களை கோரியுள்ளனர்.

புத்தளம் மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான அனைத்து ரயில் நிலையங்களிலிருந்தும் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புத்தளத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயிலின் கழிப்பறையில் பணியாளர் ஒருவரால் அண்மையில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

The post தெமட்டகொடையில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை appeared first on Oruvan.com.

வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்
வெலிக்கடை சிறைச்சாலையின் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அந்த சிறையில் உள்ள கைதிகளில் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கைதிகள் அந்த சிறைச்சாலை வார்டில் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் appeared first on Oruvan.com.

ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு
ஹோமாகம கிளை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள்

காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, பின்னர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இந்த இடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 35 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், ஹோமாகம தலைமையக பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு appeared first on Oruvan.com.

செம்மணியில் இன்றும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள்
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்றும் சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

அதில் ஆடைகளுடன் கூடிய சிறுமி ஒருவரின் எலும்புக்கூடும் இன்று அடையாளம் காணப்பட்டதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்று ஏழு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கமைய, சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 54 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

The post செம்மணியில் இன்றும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் appeared first on Oruvan.com.

மாத்தளையில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்கள் கண்டுப்பிடிப்பு
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுகங்கை காப்புக்காடு பகுதியில் பயணப்பொதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 02 பைகளில் இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்று (29) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் T56 துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியில் செயற்படும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post மாத்தளையில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்கள் கண்டுப்பிடிப்பு appeared first on Oruvan.com.