Foreign Minister Vijitha Herath Archives - Oruvan.com

இந்திய வெளிவிகார அமைச்சருடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் போது இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை இந்தப் பேச்சுவார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் இரு அமைச்சர்களும் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வுக்காக உலகத் தலைவர்கள் அமெரிக்காவில் கூடியிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கருக்கும் இடையே ஒரு சந்திப்பும் நடந்துள்ளது.

The post இந்திய வெளிவிகார அமைச்சருடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு appeared first on Oruvan.com.

ரணிலின் கைதுக்கு இராஜதந்திரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை – அரசாங்கம் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இன்று (27) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து பல்வேறு நபர்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும், அத்தகைய கருத்துக்கள் குறிப்பிடத்தக்க பொருத்தமற்றவை என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் சட்டம் சமமாகவும் நியாயமாகவும் அமல்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் தற்போது கவனித்து வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இலங்கையில் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று முன்னர் கூற்றுக்கள் இருந்தபோதிலும், தற்போதைய சூழலில் அத்தகைய நிலைமை தற்போது தென்படவில்லை என மேலும் கூறியுள்ளார்.

The post ரணிலின் கைதுக்கு இராஜதந்திரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை – அரசாங்கம் அறிவிப்பு appeared first on Oruvan.com.

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுச் சின்னம் – இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்
அடிப்படையற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழினப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிப்பட்டமைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடுமையான ஆட்சேபனை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரை நேற்று புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை எதிர்ப்பதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.

அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இந்தப்பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.

2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாக, 2006 இல் கனடாவானது, தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்க்வகௌசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

பிராம்ப்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது.

இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புவதாக” வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுச் சின்னம் – இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் appeared first on Oruvan.com.

மியான்மரில் சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு
மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் மொத்தம் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட நபர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் அடங்குவர்.

அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாய்லாந்து எல்லையிலிருந்து பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் அவர்கள் இலங்கைக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மேலும் நான்கு இலங்கையர்கள் மியான்மரில் உள்ள தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சமீபத்தில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மற்றும் மியான்மரின் துணைப் பிரதமருடனான கலந்துரையாடல்களின் போது, ​​இந்த சைபர் கிரைம் நடவடிக்கைகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு உதவி கோரியிருந்தார்.

இந்த இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக, மொத்தம் 13 நபர்கள் இப்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மியான்மரில் சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு appeared first on Oruvan.com.