FIFA Archives - Oruvan.com

இறுதிப் போட்டியில் தோல்வி – இத்தாலி அணி கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறத் தவறியது
கால்பந்து உலகக் கிண்ண தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய இத்தாலி அணி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறத் தவறியுள்ளது.

ஐரோப்பிய தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில் போஸ்னியா அணிக்கு எதிராக போட்டியில் பெனால்டி முறையில் தோல்வியடைந்ததால், இத்தாலியின் உலகக் கோப்பைக் கனவுகள் தகர்ந்தன.

வழக்கமான நேரத்திலும் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்குச் சென்றது.

முன்னாள் உலக சாம்பியன் அணியான இத்தாலி நான்கிற்கு ஒன்று என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தனர்.

முன்னதாக ரஷ்யாவில் நடைபெற்ற 2018 உலகக் கிண்ண தொடருக்கும், கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ண தொடருக்கு இத்தாலி தகுதி பெற்றிருக்கவில்லை.

நான்கு முறை உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அணி, தொடர்ச்சியாக மூன்று முறை உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறத் தவறியது கால்பந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இத்தாலி 1934, 1938, 1982 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற போஸ்னியா இரண்டாவது முறையாக உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இறுதிப் போட்டியில் தோல்வி – இத்தாலி அணி கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறத் தவறியது appeared first on Oruvan.com.

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில், ஈரான் அணியை அமெரிக்காவிற்கு அனுப்புவது குறித்து அந்நாட்டு நிர்வாகம் தெளிவான முடிவுக்கு வராத நிலையில் உள்ளது.

ஈரானின் கால்பந்துச் சம்மேளனத் தலைவர் மெஹ்டி தாஜ் (Mehdi Taj), உலகக் கிண்ணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். போட்டியைப் புறக்கணிக்கும் விடயம் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் ஆனால், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய மண்டலத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் ஈரான் அணி முதலிடத்தைப் பெற்று உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்றது. போட்டியில் கலந்துகொண்டால் முதற்கட்டத்தில் பெல்ஜியம், எகிப்து மற்றும் நியூஸிலந்து அணிகளுடன் மோத வேண்டியுள்ளது.

ஈரான் விலகும் சூழ்நிலை உருவானால், அதற்குப் பதிலாக வேறு ஒரு நாடு சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இதுகுறித்து அனைத்துலகக் கால்பந்துச் சம்மேளனம் (FIFA) எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுவரை உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் தகுதி பெற்ற பிறகு ஒரு நாடு விலகியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு பதிலாக ஈராக் அல்லது ஐக்கிய அரபுச் சிற்றரசு அணிகள் சேர்க்கப்படலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. இதற்கு முன் 2006 நவம்பரில், அரசாங்க தலையீடு குறித்த பிரச்சினையால் FIFA ஈரானுக்கு அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதித்திருந்தது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அந்தத் தடை நீக்கப்பட்டது.

மேலும், பெண்கள் பொதுவான விளையாட்டரங்கங்களில் போட்டிகளை காணத் தடை விதித்தமை உள்ளிட்ட காரணங்களால், ஈரானுக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சில நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு குறித்த நிலைமை இன்னும் குழப்பமாகவே உள்ளது.

The post உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது? appeared first on Oruvan.com.

2026 உலகக் கிண்ணத்துக்காக புதிய டிக்கெட்டை விலையை நிர்ணயித்த ஃபிஃபா
விலை நிர்ணயம் குறித்த கால்பந்து ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் 104 போட்டிகளுக்கும் மிகவும் மலிவு விலையிலான டிக்கெட்டுகளை ஃபிஃபா (FIFA) அறிவித்துள்ளது.

அதன்படி, ஃபிஃபா ஒவ்வொரு போட்டிக்கும் சம்பந்தப்பட்ட அணிகளின் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஒரு புதிய வரிசை டிக்கெட்டுகளை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது.

இதற்கு அமைவாக, இறுதிப் போட்டி உட்பட சீசனின் ஒவ்வொரு போட்டிக்குமான டிக்கெட்டுக் விலை அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்துக்காக (கனடா, மெக்சிகோ, அமெரிக்கா) டிக்கெட்டுகளின் ஆரம்ப விலைகள் மிக அதிகமாக இருந்ததன் காரணமாக உலகம் முழுவதும் ரசிகர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழும்பியது.

இந்த எதிர்ப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ஃபிஃபா புதிய சலுகை விலையிலான டிக்கெட் பிரிவை அறிவித்தது.

எனினும், இந்த டிக்கெட்டுகள், உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்ற தேசிய அணிகளின் விசுவாசமான ஆதரவாளர்களுக்காக (Loyal Fans) மட்டுமே பிரத்தியேகமாக ஒதுக்கப்படுகின்றன.

டிக்கெட் விநியோகத்தையும், அதற்கான தகுதி அளவுகோலையும் தனித்தனியாக அந்தந்த நாடுகளின் உறுப்பினர் சங்கம் (Participating Member Associations – PMAs) நிர்வகிக்கும்.

The post 2026 உலகக் கிண்ணத்துக்காக புதிய டிக்கெட்டை விலையை நிர்ணயித்த ஃபிஃபா appeared first on Oruvan.com.

கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதி
2026ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளது.

இதன் மூலம் உலகக் கிண்ண கால்​பந்து தொடருக்கு முன்​னேறிய மிகக்​குறைந்த அளவி​லான மக்​கள்​தொகை கொண்ட நாடு​கள் பட்​டியலில் இரண்டாவது இடத்தை கேப் வெர்​டே பிடித்துள்ளது.

இந்த நாட்டில் 5.93 லட்சம் மக்களே வசித்து வருகின்றனர்.

2026ஆம் ஆண்டு பிபா உலகக் கிண்ண கால்​பந்து  தொடரை அமெரிக்​கா, கனடா, மெக்​சிகோ ஆகிய நாடு​கள் இணைந்து நடத்​தவுள்​ளன.

இத்தொடரில் பங்​கேற்​கும் அணி​கள் தகு​திச் சுற்​றுப் போட்​டிகள் மூலம் தேர்வு செய்​யப்​படுகின்றன.

இந்​நிலை​யில் ஆப்​பிரிக்க மண்டல பிரி​வில் தகு​திச் சுற்​றுப் போட்​டிகள் நடை​பெற்​றன. இதில் கேப் வெர்டே அணி​யும், எஸ்​வாட்​டினி அணி​யும் மோதிக்கொண்டன.

இந்தப் போட்டியின் கேப் வெர்டே அணி மூன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் எஸ்​வாட்​டினி அணியை வீழ்த்தி உலகக் கிண்ண தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், உலகக் கிண்ண கால்​பந்து தொடருக்கு தகுதி பெற்று மிகக்​குறைந்த அளவி​லான மக்​கள்​தொகை கொண்ட நாடு என்ற பெரு​மை ஐஸ்​லாந்து வசமுள்ளது.

2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அந்த அணி பங்கேற்றப் போது அந்நாட்டின் மக்கள் தொகை நான்கு லடத்திற்கும் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதி appeared first on Oruvan.com.

2026 கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு அர்ஜென்டினா தகுதி
நடப்பு சம்பியனான அர்ஜென்டினா 2026 கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

உருகுவே-பொலிவியா அணிகளுக்கு இடையிலான போட்டி கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்ததால் அர்ஜென்டினா தகுதி பெற்றது.

இதன்படி, 2026 கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்ற முதல் லத்தீன் அமெரிக்க நாடு என்ற பெருமையையும் அர்ஜென்டினா பெற்றுக்கொண்டுள்ளது.

அர்ஜென்டினா 13 போட்டிகளில் 28 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும் உலகக் கோப்பையை கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா நடத்துகின்றன.

தென் அமெரிக்காவிலிருந்து ஆறு நாடுகள் நேரடியாகத் தகுதி பெறுகின்றன. ஏழாவது இடத்தைப் பிடிக்கும் அணி இன்டர்காண்டினென்டல் பிளேஆஃப்களில் விளையாட வேண்டும்.

உலகக் கிண்ண தொடரை நடத்தும் நாடுகளைத் தவிர, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஏற்கனவே உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post 2026 கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு அர்ஜென்டினா தகுதி appeared first on Oruvan.com.

2024ஆம் ஆண்டின் பிஃபாவின் சிறந்த வீரராக வினிசியஸ் ஜூனியர் தெரிவு
2024ஆம் ஆண்டின் பிஃபாவின் சிறந்த வீரருக்காக விருதை பிரேசில் தேசிய அணியின் வீரரும், ரியல் மெட்ரிடின் அணியின் வீரருமான வினிசியஸ் ஜூனியர் பெற்றுள்ளார்.

வினிசியஸ் தனது விளையாட்டு வாழ்க்கையில் முதல் முறையாக பிஃபா சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

மன்செஸ்டர் சிட்டியின் பலோன் டி’ஓர் விருது வென்ற ரோட்ரி, ரியல் மெட்ரிட் அணியின் கைலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரை பின்தள்ளி வினிசியஸ் ஜூனியர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

இதனிடையே, சிறந்த வீராங்கனைக்கான விருதை பார்சிலோனா அணியின் ஸ்பெயின் நட்சத்திர வீராங்களை அயிட்டனா பொன்மதி இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளார்.

அதேபோல், சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருது மான்செஸ்டர் யுனைடெட்டின் அலெக்ஸாண்ட்ரோ கர்னாசோவவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள் பிரிவில் சிறந்த கோலுக்கான ‘மார்த்தா விருதை’ வென்று மற்றொரு சரித்திரம் படைத்தார் பிரேசில் அணியின் வியரா டா சில்வா பெற்றுக்கொண்டார்.

விருது வழங்கும் நிகழ்வு கத்தாரில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றிருந்தது.

ஏனைய விருதுகள்…

சிறந்த பயிற்சியாளர்: கார்லோஸ் அன்சிலோட்டி (ரியல் மெட்ரிட்)

சிறந்த பெண் பயிற்சியாளர்: எமா ஹெய்ன்ஸ் (செல்சி)

சிறந்த ஆண்கள் கோல்கீப்பர்: எமிலியானோ மார்ட்டினெஸ் (அர்ஜென்டினா, அஸ்டன்வில்லே)

மகளிர் கோல்கீப்பர்: அலிசா நோயர் (அமெரிக்கா)

The post 2024ஆம் ஆண்டின் பிஃபாவின் சிறந்த வீரராக வினிசியஸ் ஜூனியர் தெரிவு appeared first on Oruvan.com.