February Archives - Oruvan.com

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இந்த மாதம் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையை தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் தற்போதைய விலைக்கே விற்பனை செய்யப்படும்.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், எரிவாயு விலைகளை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக

லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

The post லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை appeared first on Oruvan.com.

கோப் குழுவின் முதற் கூட்டத்திற்கான திகதி அறிவிப்பு
கோப் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி முதன்முறையாக கூடுகிறது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்கள் முதல் நாளே கோப் குழு முன் அழைக்கப்படுவார்கள் என அந்த குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஷாந்த சமரவீர தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கோப் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.

இந்தப் பதவிக்கு இதுவரை எந்த எதிர்க்கட்சி பிரதிநிதியும் பரிந்துரைக்கப்படவில்லை.

The post கோப் குழுவின் முதற் கூட்டத்திற்கான திகதி அறிவிப்பு appeared first on Oruvan.com.

பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி லோஹணதீர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை கையளித்து வருவதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82(ஏ) பிரிவின்படி, அனைத்து எம்.பி.க்களும் பதவிக்கு நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், ஜூன் மாதம் மீண்டும் அந்த அறிக்கைகளை பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் appeared first on Oruvan.com.