expresses Archives - Oruvan.com

சமாதான நடைபயணத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்திய ஜனாதிபதி
இலங்கையில் இன்று (21) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் ‘சமாதான நடைபயணம்’ (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவில், “அனைத்து மக்களிடையேயும் ழிப்புணர்வு, கருணை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று ஆரம்பமாகும் ‘சமாதான நடைபயணத்திற்கு’ ஆதரவளிப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன்”

இந்த புனிதமான நடைபயணம் தம்புள்ளையில் ஆரம்பமாகி, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் அரசமரக் கன்றுடன் நாடு முழுவதும் பயணிக்கும் வேளையில், எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சமாதானம் மற்றும் கருணை ஆகிய நித்திய விழுமியங்கள் குறித்து மீண்டும் சிந்திக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

இந்த ஆன்மீக வேலைத்திட்டம் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், உலக சமூகத்திற்கு சமாதானம் குறித்த ஆழமான செய்தியை வழங்கவும் உதவும் என எதிர்பார்ப்பதாகக் கூறி ஜனாதிபதி அநுர திஸாநாயக்க தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இதேவேளை, இந்த சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21) காலை நாட்டை வந்தடைந்தனர். இந்த நடைபயணத்தில் பங்கேற்பதற்காக ‘ஆலோகா’ என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற “Walk For Peace” சமாதான நடைபயணத் திட்டம் இன்று முதல் 28 ஆம் திகதி வரை இலங்கையில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமரக் கன்றுடன் இந்த நடைபயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகம், ‘Clean Sri Lanka’ திட்டம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சமாதான நடைபயணத்திற்கு தமது பங்களிப்பை வழங்குகின்றன.

The post சமாதான நடைபயணத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்திய ஜனாதிபதி appeared first on Oruvan.com.

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தத்தை மீறியமை தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் எனவும் போர் விமானிகளை நாட்டிற்கு திரும்பச் சொல்லுமாறும் இஸ்ரேலுக்கு

ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

“ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல்” என்றும் பதிவிட்டுள்ளார்.

இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாக நான் கருதுகிறேன். போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் செய்த பின்னரும், இஸ்ரேல் ஏராளமான குண்டுகளை வீசியுள்ளது என வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பின் போது ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது நான் இதற்கு முன்பு பார்த்திராத மிகப்பெரிய அளவிலான குண்டு வீச்சு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் தற்போது அமுலில் இருப்பதாகவும் இரு தரப்பினரும் அதை மீற வேண்டாம் என இன்று ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

ஆனாலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தெஹ்ரானில் தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

The post இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தத்தை  மீறியமை தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி appeared first on Oruvan.com.