export Archives - Oruvan.com

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி துறை பெரும் பாதிப்பு
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் 4.2 லட்சம் கோடி ரூபா மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்படலாம்

இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அமெரிக்கச் சந்தைகளில் இருந்து இந்திய பொருட்கள் வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு சலுகையைப் பெற்ற இந்தியாவின் போட்டியாளர்களான பங்களாதேஷ், வியட்நாம், இலங்கை, கம்போடியா, இந்தோனேஷியா நாடுகளின் பொருட்களுக்கு வரவேற்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாநகரில் இடம்பெறுகிறது

1980 ஆம் அண்டு முதல்1990 ஆம் ஆண்டுகளில் இங்கு வளர்ச்சியடைந்த பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள சந்தைகளுக்கு ஆண்டுக்கு46 ஆயிரம் கோடி ரூபா என்ற அளவில் ஏற்றுமதி நடைபெறுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஏற்றுமதியில் சுமார் 30 சதவீத அளவுக்கான பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரி க்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

அமெரிக்க ஏற்றுமதியை நம்பி பல பின்னலாடை நிறுவனங்கள் உள்ள நிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இங்கு பணி புரிகின்றனர்.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரியா திருப்பூர் பின்னலாடை தொழிலை ஸ்தம்பிக்க காரணம் எனவும்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி துறை பெரும் பாதிப்பு appeared first on Oruvan.com.

ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் இலக்கை அடைவதற்கான சவால்கள் குறித்து கலந்துரையாடல்
2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கான சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சரவையின் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த அமர்வின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தொடர்புடைய திட்டங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி தொடர்பான பல அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரத்தினக்கல் மற்றும் நகைத் துறையின் வளர்ச்சி, சுங்க நடவடிக்கைகளை மிகவும் திறம்படச் செய்ய புதிய ஸ்கேனர் நிறுவுதல், மருந்து ஏற்றுமதித் தொழில், தேயிலை ஏற்றுமதி மேம்பாடு, புதிய கட்டண ஒப்பந்தங்கள்; குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கிராமப்புற மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தா, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர மற்றும் பிற தொடர்புடைய அமைச்சு செயலாளர்கள், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹெராத், இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபை மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் மூத்த அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டனர்.

The post ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் இலக்கை அடைவதற்கான சவால்கள் குறித்து கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 6 ஆயிரத்து 933 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானத்தில் 07 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 2025ஆம் ஆண்டு மே மாதத்தில், பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளின் மொத்த ஏற்றுமதி வருவாய் 1,386 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

ஜனாதிபதி தலைமையில் ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல்
ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் அதேவேளை ஏற்றுமதிக்கு முன்னுரிமையளிக்கும் உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், இதன்போது எழுந்துள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு நீண்டகால கைத்தொழில் அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ஏற்றுமதி துறையை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் திட்டங்களும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு ஆகியோர் உட்பட அரச அதிகாரிகள் பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

The post ஜனாதிபதி தலைமையில் ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து நலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்தது.

இதற்கமைய மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்ட நிலையில் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநில மருந்து உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் டொக்டர் ஜெயசீலன் தெரிவித்திருப்பதாவது,

இந்தியாவின் மருந்து சந்தை மிகப்பெரியது. உலக அளவில் உற்பத்தியாகும் மருந்துகளில் 60 சதவீத பங்களிப்பை இந்தியா கொண்டுள்ளது.

உள்நாட்டு பயன்பாட்டுக்கு மாத்திரமின்றி அமெரிக்கா, பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா, நெதா்லாந்து, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக, ‘ஜெனரிக்’ எனப்படும் மூலப்பெயரிலான மருந்துகள் மற்றும் அதற்கான மூலப்பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வருடந்தோறும் 2.40 லட்சம் கோடி ரூபா மதிப்பிலான மருந்துகள் உலக நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன.

தமிழகத்திலிருந்து மாத்திரம் வருடாந்தம் 8,000 கோடி ரூபாவிலிருந்து 10,000 கோடி ரூபா வரையிலான மதிப்புடைய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உயிா் காக்கும் சில முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன.

அதன் வா்த்தக மதிப்பு 100 கோடி ரூபா வரை உள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியும், தேச நலனைக் கருத்திற் கொண்டும் பாகிஸ்தானுக்கு மருந்து மற்றும் மூலப்பொருள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளோம்.

இதன் காரணமாக 100 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படலாம். அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்நிலை தொடரும்.

அதேவேளையில் பிற நாடுகளுக்கான ஏற்றுமதியில் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தியா – பாகிஸ்தான் போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் முன்கூட்டியே கூடுதலான மருந்துகளை முன்பதிவு செய்துள்ளன.

தமிழகத்துக்கு தேவையான சில மூலப்பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே, போா்ச் சூழல் அதிகரித்தாலும் உள்நாட்டு மருந்துகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படாது” என்றார்.

The post தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் appeared first on Oruvan.com.