Expected Archives - Oruvan.com

பல பகுதிகளில் நாளை பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பல பகுதிகளில் நாளை பலத்த மழை appeared first on Oruvan.com.

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்திம்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்திம் appeared first on Oruvan.com.

நாளை முதல் மீண்டும் மழையுடனான வானிலை
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நாளை (10.06) முதல் மழையுடனான வானிலை மீண்டும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post நாளை முதல் மீண்டும் மழையுடனான வானிலை appeared first on Oruvan.com.

மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பு
எதிர்வரும் காலங்களில் விவசாயிகளிடமிருந்து மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

அரிசி சந்தைப்படுத்தல் சபையானது சுமார் 02 இலட்சம் மெட்றிக் தொன் அரிசியை சேமித்து வைக்கக்கூடிய சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளதாகவும், உணவுத் திணைக்களம், ச.தொ.ச ஆகிய நிறுவனங்களில் நிலவும் நெல் களஞ்சியங்களையும் பயன்படுத்தி மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல் இலக்கை எட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் வாரத்தினுள் நெல் கிலோ ஒன்றின் உறுதியான விலையை அறிவிக்க எதிர்ப்பார்ப்பதாக கூறிய நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர், உலர் அரிசி மற்றும் ஈர அரிசியை உரிய தரத்திற்கு ஏற்ப கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையில் ஈரநெல் உலர்த்துவதற்கு தேவையான வசதிகள் இல்லாததால் சிறு மற்றும் நடுத்தர ஆலைகளின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு ஈரநெல்லை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்தார் .

The post மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பு appeared first on Oruvan.com.