exam Archives - Oruvan.com

ஆசிரியர் சேவைத் தேர்வு – பட்டப்படிப்பு தகுதிக்கான காலவகாசம் திருத்தம்
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டித் தேர்வுக்கு முன்நிபந்தனையான பட்டப்படிப்புத் தகுதியை நிறைவு செய்வதற்கான காலவகாசம் திருத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை

பட்டப்படிப்பை நிறைவு செய்த 40 வயதுக்குட்பட்ட நபர்கள் தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னர் வெளியான வர்த்தமானியின் கீழ், 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம்

30 ஆம் திகதி வரை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் பொது சேவையில் பணியாற்றி, முறையான அனுமதியுடன்

ராஜினாமா செய்த நபர்களும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதிக்கு முன் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தால்

விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என புதிய வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஆசிரியர் சேவைத் தேர்வு –  பட்டப்படிப்பு தகுதிக்கான காலவகாசம் திருத்தம் appeared first on Oruvan.com.

உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு
நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பரீட்சைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் தடை மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் காரணமாக இது தொடர்பான முந்தைய அறிவிப்பு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று தேர்வுகள் ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சைகள் தொடர்பான விசாரணைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 1911 என்ற தொலைபேசி எண்ணுக்கு, பரீட்சைகள் தொடர்பான ஏராளமான விசாரணைகள் வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மீண்டும் வலியுறுத்துகிறார்.

The post உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் இரண்டாயிரத்து 787 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 க்குள் அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவர்கள் காலை 09 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கூறியுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதி காலை 9:30 முதல் 10:45 வரை நடைபெறும் எனவும் அதனைத் தொடர்ந்து முதலாம் பகுதி காலை 11:15 முதல் மதியம் 12:15 வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

பரீட்சை இடம்பெறும் சந்தர்ப்பங்களின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு அளிக்க முடியும் எனவும் இதற்காக விசேட திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார்.

The post தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று appeared first on Oruvan.com.

உயர்தர மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, ஒகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

2024 ஆம் ஆண்டு மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மற்றும் 2025 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் எந்தவொரு காரணத்திற்காகவும் மீண்டும் காலம் நீட்டிக்கப்படாது என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உயர்தர மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

உயர்தரப் பரீட்சை இன்றிரவு வெளியாகும்
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை https:/www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதனூடாக  பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்றன.

பரீட்சையில் 333,158 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post உயர்தரப் பரீட்சை இன்றிரவு வெளியாகும் appeared first on Oruvan.com.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக ‘இலவச மதிப்பெண்’ வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த தரம் 05 இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக, பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதனூடாக, தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

The post தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு appeared first on Oruvan.com.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடத்த தீர்மானித்துள்ளதாக

பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை, 1911, 0112784208, 0112784537 மற்றும் 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

The post க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள்  அறிவிப்பு appeared first on Oruvan.com.

தனி அறையில் பரீட்சை எழுதியதை நிரூபித்தால் பதவி விலகுகிறேன் – நாமல்
சட்டப் பரீட்சைக்கு முகங்கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த அவமதிப்பு தன்மை மட்டும் இலக்காகக் கொள்ளவில்லை. முழு சட்ட அமைப்பையும் இலக்கு வைத்து

அவமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நீதி அமைச்சர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

குளிரூட்டப்பட்ட அறையில் தனியாக பரீட்சை எழுதியநதாக அமைச்சர் கூறும் கருத்து நிரூபிக்கப்பட்டால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன் அவ்வாறு இல்லாவிடின் வசந்த சமரசிங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்றார்.

The post தனி அறையில் பரீட்சை எழுதியதை நிரூபித்தால் பதவி விலகுகிறேன் – நாமல் appeared first on Oruvan.com.