Epstein Archives - Oruvan.com

66-வது பிறந்தநாளில் சிறைவாசம்: எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய இளவரசர்; எலைட் முகமூடிகள் வெளிப்படுத்தும் இருண்ட உலகம்
செய்தி ஆசிரியர் : D. ரஸ்மிளா

“66-வது பிறந்தநாள்… கொண்டாட வேண்டிய வேளையில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு முன்னாள் இளவரசர்! உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் இப்போது பிரிட்டன் அரச குடும்பத்தின் கதவுகளைத் தட்டியுள்ளன. பளபளக்கும் கோட்டுகள் மற்றும் அதிகாரத்தின் உச்சத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அந்த அருவருப்பான உண்மைகள் என்ன?

பளபளக்கும் கோட்டுகள், அதிகாரத்தின் உச்சம், கோடிக்கணக்கான பணம்… இவற்றுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு பயங்கரமான இருட்டு உலகத்தைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? நீதியை விலைக்கு வாங்கி, பிஞ்சுயிர்களைச் சிதைத்த ஒரு சாத்தானியச் சதியின் பின்னணியைத் தேடிச் செல்கிறது ஆதவன் செய்திப் பிரிவின் இந்தச் சிறப்புப் பதிவு.

பிரித்தானிய மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று அதிகாலை நோர்போக் நகரில் உள்ள சாண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இதே தினத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவை. பிரித்தானிய வர்த்தகத் தூதராகப் பணியாற்றிய காலத்தில், அவர் பொது அலுவலகத்தில் முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முக்கிய அரசாங்கத் தகவல்களை அவர் வெளிப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறார். எப்ஸ்டீன் கோப்புகளின்படி, ஆண்ட்ரூ தனது உத்தியோகப்பூர்வ கடமைகளின் போது முறையற்ற வகையில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்குப் பாலியல் ஆசை என்பது இயல்பானது. அது இல்லையெனில் நமக்குள் ஏதோவொரு உயிரியல் குறைபாடு இருப்பதாகவே அர்த்தம். ஆனால், நம்மை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்துவது மதம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுடன் இணைந்த சுயக்கட்டுப்பாடே ஆகும்.

வரலாற்றில் ஒரு காலத்தில் சிறுவர் திருமணங்கள் கூட சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. ஆனால், நவீன அறிவியலும் மருத்துவமும் வளர வளர, அவை குழந்தைகளின் உடல் மற்றும் மன நலத்திற்கு எதிரான வன்முறை என்பதை உலகம் உணர்ந்து சட்டங்களை மாற்றிக்கொண்டது. இருப்பினும், இத்தகைய நாகரிக வளர்ச்சிக்கும் சட்டங்களுக்கும் சவால் விடும் வகையில், அதிகாரமும் பணமும் சேரும்போது மனிதன் எப்படி ஒரு கொடூரமான மிருகமாக மாறுகிறான் என்பதற்கு ஜெப்ரி எப்ஸ்டீன் ஒரு சாட்சியாக இன்று பார்க்கப்படுகிறான். அவரது தனித்தீவில் இருந்த நிர்வாணச் சிலைகளும் புகைப்படங்களும் இதற்கு ஆதாரங்களாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றன.

அறிவுலகின் பிதாமகனாகக் கருதப்பட்ட ஸ்டீபன் ஹாவ்கின் கூட இந்தத் தீவிற்குச் சென்றார் என்ற தகவல் வெளிவந்து, அவரது புகைப்படம் வெளியானபோது உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் சந்தேகமும் எழுந்தது. உடல் அசைவுகள் அற்ற ஒரு மேதை அங்கே எதற்காகச் சென்றார்? அவர் அத்தகைய செயல்களில் ஈடுபட்டாரா அல்லது அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டாரா என்ற விடை தெரியாத கேள்விகள் இன்றும் மக்களின் மனதில் விவாதங்களை எழுப்புகின்றன.

அறிவியல் மேதைகளே இப்படிச் சந்தேகத்திற்கு உள்ளாகும் போது, அதிகார வர்க்கத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? பில் கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப் முதல் எலான் மஸ்க், பில் கேட்ஸ் வரை பலரது பெயர்கள் எப்ஸ்டீனின் கறுப்புப் பட்டியலில் அடிபடுகின்றன.

இதில் மிக முக்கியத் திருப்பமாக, பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ள செய்தி உலகையே அதிர வைத்துள்ளது. அதிகாரத்தின் உச்சியில் இருந்த ஒரு இளவரசரே சட்டத்தின் பிடியில் சிக்கியிருப்பது, இந்த ‘எலைட்’ உலகத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஜனவரி 30-ம் திகதி அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 35 லட்சம் பக்கங்கள் கொட கோப்புகள் உலகையே உலுக்கிய நிலையில், 2026 ஜனவரி 30 அன்று கூடுதலாக 30 லட்சம் பக்கங்கள் வெளியிடப்பட்டன. இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக 2,000 காணொளிகளும், 1,80,000 படங்களும் அடங்கியுள்ளன. எப்ஸ்டீன் விவகாரத்தில் மொத்தம் 60 லட்சம் பக்கங்கள் வரை கோப்புகள் இருக்கலாம் என நீதித்துறை ஒப்புக்கொண்டாலும், ஜனவரி 30 அன்றைய வெளியீடே இறுதியானது என்றும், தன் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றிவிட்டதாகவும் அது அறிவித்துள்ளது.

ஆயினும், சித்திரவதைக்குள்ளான அந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் எங்கே? அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்களா? அல்லது குற்றத்தின் சாட்சிகளை அழிக்கப் பலர் கொல்லப்பட்டார்களா? என்ற கேள்விகளுக்கான விடைகள் இன்னமும் அந்த 60 லட்சம் பக்கங்களுக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.

2009-ல் மெக்சிகோவில் கேப்ரியலா ஜிமெனெஸ் என்ற மாடல் அழகி, “அவர்கள் மனித மாமிசம் உண்கிறார்கள், குழந்தைகளைக் கொல்கிறார்கள்” என்று அலறியபோது உலகம் அவரை ஒரு மனநோயாளி என்றே பார்த்தது. ஆனால் இன்று, எப்ஸ்டீன் தீவில் இருந்த விசித்திரமான நீல நிறக் கோவில் போன்ற அமைப்பும், அங்கு நடந்ததாகக் கூறப்படும் ரகசியச் சடங்குகளும் அவர் சொன்ன வார்த்தைகளுக்கு வலுச்சேர்க்கின்றன. எப்ஸ்டீன் ஒரு புதிய இனத்தையே உருவாக்க முயன்றதாகக் கூறப்படும் தகவல்கள், அவனது சாத்தானிய மனநிலையின் உச்சத்தைக் காட்டுகிறது.

பண்டைய கால ‘பாகால்’ (Baal) வழிபாட்டில் அதிகாரத்தைத் தக்கவைக்கப் பச்சிளம் குழந்தைகளைப் பலியிடும் வழக்கம் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இன்றும் அந்த இருண்ட கோட்பாடுகளைச் சில ரகசியக் குழுக்கள் பின்பற்றுகிறார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எப்ஸ்டீனுக்கும் உளவு அமைப்புகளுக்கும் இருந்த தொடர்புகள், இது ஒரு சர்வதேச அதிகார மட்டத்திலான இருண்ட கூட்டணி என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன.

2008-ல் எப்ஸ்டீன் கைதான போதே சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், நீதித்துறையுடன் செய்யப்பட்ட ஒரு ரகசிய உடன்படிக்கையினால் வெறும் 13 மாதங்கள் மட்டுமே அவர் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. அதுவும் வாரத்தில் 6 நாட்கள் வெளியே சுற்றித் திரிய அனுமதி வழங்கப்பட்டது. இது “பணம் இருந்தால் எதையும் விலைக்கு வாங்கலாம்” என்ற கசப்பான உண்மையை உலகுக்குக் காட்டியது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு, இது மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கடுமையான குற்றம் என்று எச்சரித்துள்ளது. “சம்பந்தப்பட்டவர்கள் பதவிகளிலிருந்து விலகுவது மட்டும் போதாது, சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்” என அது வலியுறுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த பிறகு, உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர். “தன் பிள்ளை எலான் மஸ்க் போல வர வேண்டும், அந்த எலைட் குரூப்பில் ஒருவனாக வேண்டும்” என்று கனவு கண்ட பெற்றோர்கள், இப்போது அந்தப் பளபளப்பான கோட்டுகளுக்குப் பின்னால் இருக்கும் இரத்தக் கறையைக் கண்டு அஞ்சிப் போய் உள்ளனர்.

பணம் இருந்தால் மட்டும் போதாது, அதிகார திமிரில் எதையும் செய்யலாம் என்ற அந்தப் போலித் தகுதிகள் தங்கள் பிள்ளைகளைச் சீரழிக்க அனுமதிக்க முடியாது என்பதில் பெற்றோர்கள் இன்று உறுதியாக இருக்க வேண்டும். வெறும் கோடீஸ்வரர்களாகத் தங்கள் பிள்ளைகளை உருவாக்குவதை விட, அறமும் மனிதநேயமும் கொண்ட நல்ல மனிதர்களாக உருவாக்குவதே இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.

எப்ஸ்டீன் இறந்துவிட்டாலும், அதிகாரத்தின் பெயரால் நடக்கும் இத்தகைய கொடுமைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது வெறும் நிலத்திற்காகவோ அல்லது இனத்திற்காகவோ நடக்கும் போராட்டம் அல்ல; இது அதிகாரத்திற்காக மனிதநேயத்தைப் பலியிடும் சக்திகளுக்கும், நேர்மைக்கும் இடையே நடக்கும் ஒரு மாபெரும் போர். இந்த அதிகார வர்க்கத்தின் முகத்திரை முழுமையாகக் கிழியும் வரை, உண்மைக் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

The post 66-வது பிறந்தநாளில் சிறைவாசம்: எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய இளவரசர்; எலைட் முகமூடிகள் வெளிப்படுத்தும் இருண்ட உலகம் appeared first on Oruvan.com.

பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கசிவு – ஆயிரக்கணக்கான எப்ஸ்டீன் ஆவணங்களை நீக்கிய அமெரிக்க நீதித்துறை
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) தனது இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் தவறுதலாக வெளியிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஆவணங்களில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், முகங்களை அடையாளம் காணக்கூடிய புகைப்படங்கள் மற்றும் சில நிர்வாண படங்களும் இடம்பெற்றன. இதனால் உயிர் பிழைத்த சுமார் 100 பேரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வெளியீட்டை “மூர்க்கத்தனமானது” என பாதிக்கப்பட்டவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். தங்களை பெயரிட்டு வெளியிடக்கூடாது என்றும், மீண்டும் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மனித அல்லது தொழில்நுட்ப பிழை காரணமாக ஏற்பட்டதாக அமெரிக்க நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது வழக்கறிஞர்கள் கோரிய அனைத்து ஆவணங்களும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் திருத்தங்கள் தேவைப்படுகிறதா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதியிடம், இந்த ஆவணங்களை வெளியிட்ட இணையதளத்தை முழுமையாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது அமெரிக்க வரலாற்றில் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை மிக மோசமாக மீறிய சம்பவம் என அவர்கள் தெரிவித்தனர்.

சில பாதிக்கப்பட்டவர்கள், தனிப்பட்ட வங்கி விபரங்கள் வெளியான பிறகு மரண அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் கூறியுள்ளனர். ஒருவர் இந்த வெளியீட்டை “உயிருக்கு ஆபத்தானது” என விவரித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த  அமெரிக்க நீதித்துறை பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், வெளியிடப்பட்ட கோப்புகளில் 0.1% மட்டுமே தவறான தகவல்களை கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை சரிசெய்ய துறை 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது.

எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை பொதுமக்களுக்கு வெளியிட காங்கிரஸ் சட்டம் இயற்றியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 30 லட்சம் பக்கங்கள், 1.8 லட்சம் படங்கள் மற்றும் 2,000 வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக காத்திருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கசிவு – ஆயிரக்கணக்கான எப்ஸ்டீன் ஆவணங்களை நீக்கிய அமெரிக்க நீதித்துறை  appeared first on Oruvan.com.