ends Archives - Oruvan.com

ஈரானின் தாக்குதலால் அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியதையடுத்து, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும்

தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மூன்று சேவை உறுப்பினர்கள் உயிரிழந்ததாகவும், ஐவர் தீவிர காயமடைந்ததாகவும் அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு அமெரிக்க உயிரிழப்பும் உள்நாட்டில் அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கிறது என மூத்த நிருபர் பெர்ன்ட் டெபஸ்மேன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் பல வாரங்கள் நீடிக்கலாம் என ட்ரம்ப் கூறியுள்ளதுடன், ஈரான் மீது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் உறுதியளித்துள்ளது.

மேலும், சைப்ரஸில் உள்ள பிரித்தானிய ரோயல் விமானப்படை (RAF) தளம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்திற்குரிய

ட்ரோன் தாக்குதலால் இலக்கு வைக்கப்பட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பதற்ற நிலை காரணமாக, திங்கட்கிழமை ஆசிய சந்தைகளில் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.

வளைகுடா பிராந்தியத்தில் வான்வெளி மூடப்பட்டதால், சர்வதேச விமானப் பயணங்களில் இடையூறுகள் தொடர்ந்து நிலவி வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

The post ஈரானின் தாக்குதலால் அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு
தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு உடன் அமுலாகும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது.

அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

19 கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தன.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன் இலட்சக்கணக்கான கடிதங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

The post தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு appeared first on Oruvan.com.

நாளையுடன் நிறைவடையும் அரிசி இறக்குமதிக்கான காலஅவகாசம்
அரிசி இறக்குமதிக்காக இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி காலம் நாளை (10) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி இறக்குமதிக்கு தீர்வாக அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி தனியார் துறையினருக்கு அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, தனியார் இறக்குமதியாளர்களால் நேற்று (08) வரையில் 115000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரிசியை இறக்குமதி செய்ய வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதால், குறித்த கால அவகாசம் நிறைவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அரிசி இறக்குமதியை நிறுத்தியதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், அரசாங்கம் சார்பில் 980 மெட்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்திருந்ததுடன் மேலும் 5200 மெட்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post நாளையுடன் நிறைவடையும் அரிசி இறக்குமதிக்கான காலஅவகாசம் appeared first on Oruvan.com.