electricity Archives - Oruvan.com

கடமைக்கு திரும்பாத மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்
கடமைக்கு திரும்பாத மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக  சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் கீழ் இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர்  ஆகிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என தலைமை நிர்வாக அதிகாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்

மின்சார சபையை புதிய நிறுவனங்களாக மாற்றும் செயல்முறையின் போது, ஊழியர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாமை இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 18(ஈ) பிரிவின் கீழ், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையான கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிடப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் வேதன மற்றும் ஏனைய சலுகைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதுடன், அவை தொடர்பான சட்ட ரீதியான உறுதிப்பாடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.”

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தொடர்ச்சியான மின்சார விநியோகத்தைப் பராமரிக்க, இதுவரை செய்து வந்த அதே வழியில் தொடர்ந்து தங்கள் கடமைகளைச் செய்யுமாறு மின்சார ஊழியர்களிடம் குறித்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கடமைகளைச் செய்யத் தவறுவது அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகளின் கீழ் கடுமையான குற்றமாகும் என்று நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

The post கடமைக்கு திரும்பாத மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக  சட்டநடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Oruvan.com.

மின் கட்டண முன்மொழிவு – பொதுமக்களின் பரிந்துரைகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்
மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவு குறித்து பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

மார்ச் 18 ஆம் திகதி வரை கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவை மதிப்பாய்வு செய்த பின்னரான ஆலோசனைக் குறிப்பை www.pucsl.gov.lk இல் அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கு, அதாவது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை மின்சார கட்டணத்தை 13.56% அதிகரிக்க மின்சார சபை அண்மையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியது

The post மின் கட்டண முன்மொழிவு –  பொதுமக்களின் பரிந்துரைகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் appeared first on Oruvan.com.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதிருக்க மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானம்
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (24) பிற்பகல் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க குறித்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு எதிராக, மின்சார தொழிற்சங்கங்கள் பல நாட்களாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதிருக்க மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானம் appeared first on Oruvan.com.

மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு
மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 02 ஆம் இலக்க சரத்திற்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையை நடாத்தி செல்வதற்கு குறித்த சேவைகள் அத்தியவசியமானவை என்பதையும் இடையூறு அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் போன்ற விடயங்களை கருத்திற் கொண்டு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

The post மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு appeared first on Oruvan.com.

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம்
இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் ஊழியர்கள் கடந்த 17 நாட்களாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகள், ஊழியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை வழங்குதல் மற்றும் உரிய பதவி உயர்வுகளை வழங்குதல் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரம் appeared first on Oruvan.com.

மின்சார திருத்தச் சட்டமூலத்தை சான்றுப்படுத்திய சபாநாயகர்
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு, சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன இன்று செவ்வாய்க்கிழமை(19) சான்றுரைப்படுத்தினார்

இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 06ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வலு மீதான தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக தேசிய மின்சாரக் கொள்கையை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு இடமளிப்பது இந்த சட்டத்தின் நோக்கமாகும்.

இந்த சட்டத்தினூடாக தேசிய மின்சார மதியுரை பேரவைக்கு பதிலாக மின்வலு மீதான தேசியக் கொள்கையின் பாகமொன்றாக தேசிய மின்சாரக் கொள்கையை தயாரிப்பதற்கு இதன் ஏற்பாடுகள் இடமளிக்கும்.

மொத்த விற்பனை மின்சாரச் சந்தை என்பது தேசிய மின்சாரச் சந்தை என மாற்றப்படுவதுடன் வினைத்திறனான மற்றும் செலவுச் சிக்கனமான மின்சார விநியோகத்தை தொடர்ச்சியாகப் பேணுதல், பச்சைவீட்டு வாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஊக்குவித்தல் ஆகியன இந்த சட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

The post மின்சார திருத்தச் சட்டமூலத்தை சான்றுப்படுத்திய சபாநாயகர் appeared first on Oruvan.com.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்
2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தொடர்பில் அண்மையில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மின் கட்டணங்களில் 18.3% அதிகரிப்பை இலங்கை மின்சார முன்மொழிந்தது. முன்மொழியப்பட்ட வீதம் இந்த ஆண்டு ஜனவரியில் செயற்படுத்தப்பட்ட கட்டணத்தை விட 5.4% குறைவு எனவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

The post மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் appeared first on Oruvan.com.

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள்
அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையென தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம், முன்னணி சோசலிசக் கட்சியின் விளம்பரச் செயலாளர் துமிந்த நாகமுவ மற்றும் இலங்கை பசுமை அமைப்பு உள்ளிட்ட ஏழு தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் ஏ.எச்.எம்.டி.நவாஸ், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது இந்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என உத்தரவிடப்பட்டது.

இந்த மனுக்கள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

முன்மொழியப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை தனியார்மயமாக்க முன்மொழிவதாக இந்த மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் சேவையை நிறுத்துவது தொடர்பான தெளிவான உத்தரவு சட்டமூலத்தில் இல்லை என்றும் மனுக்கள் கூறுகின்றன.

தொடர்புடைய சட்டமூலத்தில் உள்ள சில பிரிவுகள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டுள்ளன.

The post மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள் appeared first on Oruvan.com.

மின்சார திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
இலங்கை மின்சாரத் துறையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலத்தின்படி, முன்னர் இருந்த, இலங்கை மின்சார சபையை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை

நோக்கமாகக் கொண்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளன.

அதற்கு பதிலாக, திருத்தப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை நான்கு நிறுவனங்களாக மறுசீரமைக்க முன்மொழிகிறது,

இவை அனைத்தும் முழுமையாக அரசுக்குச் சொந்தமானதாக அமையும்.

எரிசக்தித் துறையில் செயற்றிறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களின் விரைவு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

The post மின்சார திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு appeared first on Oruvan.com.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் IMF
இலங்கை மின்சார சபை, கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மின்சார கட்டணத்தை திருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த திருத்தத்துடன் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு, புதிய கட்டணத்தால் ஈடுகட்டப்படாது என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் பிரூவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தைப் பார்க்கும்போது, புதிய கட்டணத்தின் கீழ் இலங்கை மின்சார சபை எதிர்கொள்ளும் இழப்புகளைத் தடுக்க முடியாது என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.

இதன் விளைவாக, இலங்கை மின்சார சபையின் கடன்கள் மீண்டும் குவியும் அபாயம் இருப்பதாகவும், அதனால் இலங்கை மின்சார சபை மீண்டும் அரசாங்கத்திற்கு சுமையாக மாறும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை மின்சார சபை அரசாங்கத்திற்கு எவ்வளவு சுமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் அனுபவம் உள்ளதால், வரவிருக்கும் மின்சார கட்டண திருத்தத்தில் செலவு ஈடுகட்டும் மின்சார விலையை மீண்டும் நிர்ணயிப்பது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இழப்புகளை ஏற்படுத்தாத வகையில் விலைகளை நிர்ணயிப்பதற்கான தானியங்கி வழிமுறைகள் ஏற்கனவே உள்ளதாகவும், அவை செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

The post மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் IMF appeared first on Oruvan.com.