Egg Archives - Oruvan.com

முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்
முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பாரியளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.

இதன்படி, வெள்ளை முட்டை ஒன்று 18 ரூபாவாகவும், சிவப்பு நிற முட்டை ஒன்று 20 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்றும்

அவர் கூறியுள்ளார்.

எவ்வாறானியும் சந்தை பற்றிய புரிதல் இன்றி விலையைக் குறைப்பது ஆபத்தானது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர எச்சரித்துள்ளார்.

The post முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம் appeared first on Oruvan.com.

குறைவடைந்த முட்டையின் விலை
முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் சிவப்பு நிற முட்டை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

The post குறைவடைந்த முட்டையின் விலை appeared first on Oruvan.com.

சமூக ஊடகங்களினூடாக முட்டை விலைகளை தினமும் அறியப்படுத்த நடவடிக்கை
சமூக ஊடகங்கள் மூலம் முட்டை விலைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறியப்படுத்தும் அமைப்பொன்றை உருவாக்க

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனூடாக தினமும் முட்டை விலைகளை பொதுமக்களுக்குத் தெரிவிக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் இடைத்தரகர்கள் பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சந்தையில் முட்டையின் விலை தற்போது 28 முதல் 32 ரூபாய் வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post சமூக ஊடகங்களினூடாக முட்டை விலைகளை தினமும் அறியப்படுத்த நடவடிக்கை appeared first on Oruvan.com.

சந்தையில் முட்டை விலை குறைவு
சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, 23 ரூபா முதல் 29 ரூபா வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கமைய 17 ரூபா 50 ரூபா வரை முட்டையொன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது முட்டைக்கான தேவை குறைவடைந்துள்ளதால், முட்டை விலை குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post சந்தையில் முட்டை விலை குறைவு appeared first on Oruvan.com.

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு
சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அரசாங்கம் உறுதியளித்தவாறு கோழி தீவனத்தின் விலையை குறைக்காமையினால் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

முட்டையை வேக வைத்த நீரால் வீட்டை சுத்தப்படுத்தலாமா?
முட்டையில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன என்று தெரியும். ஆனால், முட்டையை வேக வைத்த நீரின் பலன்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?முட்டைகளை வேகவைத்து எடுத்த பின் அந்த நீரை நாம் கொட்டி விடுகின்றோம். ஆனால், அது மிகவும் தவறு.

முட்டை வேக வைத்த நீரில் மக்னீசியம், கல்சியம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. எனவே இந்த நீரை செடிகளுக்கு ஊற்றினால் நன்றாக வளரும்.  காரணம் இந்த நீர் மண்ணின் பீஎச் அளவை சமநிலைப்படுத்துகிறது.

மேலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை காப்பதற்கும் முட்டை அவித்த நீர் உதவுகிறது. தலையில் பொடுகு இருப்பவர்கள் இந்தத் தண்ணீரைக் கொண்டு அலசினால் படிப்படியாக பொடுகுத் தொல்லை நீங்கி முடி பளபளப்பாகும்.

முட்டை அவித்த நீரில் வீட்டைச் சுத்தமாக்கும் திறனும் உண்டு. அதனால் சமையலறை மேற்பரப்புகளை இந்த நீரைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். மேலும் கறைகளை நீக்கவும் இவை பயன்படும்.

The post முட்டையை வேக வைத்த நீரால் வீட்டை சுத்தப்படுத்தலாமா? appeared first on Oruvan.com.

முட்டை விலை குறைவு
சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைவடைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் 40 ரூபா தொடக்கம் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபா தொடக்கம் 30 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சில பொருட்களின் விலை அடுத்த சில நாட்களில் மேலும் குறைவடைய வாய்ப்புள்ளதாக சில வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.

The post முட்டை விலை குறைவு appeared first on Oruvan.com.