Economy of Sri Lanka Archives - Oruvan.com

2025ஆம் ஆண்டின் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 11 பில்லியன் டொலரை கடந்தது
இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 11 பில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் 11,554.32 மில்லியன் டொலர்களாகும்.

இது கடந்த ஆண்டின் (2024) இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.61 சதவீத அதிகரிப்பாகும்.

இதன் விளைவாக, இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை நேர்மறையான நிலை மற்றும் நிலையான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏற்றுமதி மேம்பாட்டு திணைக்களத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மங்கள விஜேசிங்க கருத்து வெளியிடுகையில்,

“இந்த வளர்ச்சி, உலகளாவிய வர்த்தகத்தில் இலங்கையின் அதிக ஒருங்கிணைப்பையும், சந்தை வாய்ப்புகளை பல்வகைப்படுத்துவதன் மூலம் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்தும் அதன் முயற்சிகளின் வெற்றியையும் எடுத்துக்காட்டுகிறது.

மாறிவரும் உலகளாவிய சந்தைக்கும் அவர்களின் மீள்தன்மைக்கும் நமது ஏற்றுமதியாளர்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் இது மீண்டும் ஒருமுறை காட்டுகிறது.’என்றார்.

The post 2025ஆம் ஆண்டின் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 11 பில்லியன் டொலரை கடந்தது appeared first on Oruvan.com.

இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக இருக்கின்றது – மத்திய வங்கி ஆளுநர்
இலங்கையின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விஞ்சிவிடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நெருக்கடியின் உச்சத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் எதிர்பார்த்ததை விட விரைவாக முடிவுகளைத் தருவதாக சர்நதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு நாடு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவுடன், உற்பத்தி இழப்பை மீட்டெடுக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். எங்கள் விஷயத்தில், மூன்று ஆண்டுகளுக்குள் அந்த நிலையை அடைந்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டுக்குள், வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு, வருமானம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற முக்கிய துறைகளில் இலங்கை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட சிறப்பாக இருக்கும் என்று ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.

“அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வருமானம் அதிகமாக இருக்கும் எனவும், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், நாம் முன்பு இருந்த நிலையை அடைய முடியும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக இருக்கின்றது – மத்திய வங்கி ஆளுநர் appeared first on Oruvan.com.

முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் வருமான-செலவு இடைவெளி 32.3 வீதமாக குறைந்தது
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் வருவாய்-செலவு இடைவெளி 32.3 வீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் பாதையில் செல்கிறது என்பதற்கான அறிகுறி என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைவதற்கான காரணம், மானியங்கள் உட்பட அரசாங்க வருவாய் 24.7 வீதம் அதிகரித்து 2.3 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அரசாங்க வருவாய் 1.8 டிரில்லியன் ரூபாவா பதிவாகியிருந்துது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வருமான வரி வருவாய் முந்தைய ஆண்டை விட 447 பில்லியன் ரூபாவில் இருந்து 489 பில்லியன் ரூபாவாக 9.2 வீதம் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் VAT வருவாய் 645 பில்லியன் ரூபாவில் இருந்து 876 பில்லியன் ரூபாவாக 27.6 வீதம் அதிகரித்துள்ளது.

வாகன இறக்குமதியிலிருந்து வரும் வரி வருவாய் முந்தைய ஆண்டை விட 335.6 வீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் 129.1 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

The post முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் வருமான-செலவு இடைவெளி 32.3 வீதமாக குறைந்தது appeared first on Oruvan.com.

ஈரான் – இஸரேல் போர்!!! இலங்கைக்கு பொருளாதார ரீதியாக காத்திருக்கும் சவால்கள்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை அதிகரித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இராணுவ நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில் பல துறைகளை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது கிடைக்கக்கூடிய அறிக்கைகளின்படி, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் இலங்கையை பாதிக்கும் பல வழிகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக எரிபொருள் விலை அதிகரிப்பு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை ஏற்கனவே பத்து முதல் பன்னிரண்டு சதவீதம் வரை அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு எழுபது டொலர் அளவைத் தாண்டியுள்ளது. இது கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மிக உயர்ந்த விலை அதிகரிப்பு ஆகும்.

மேலும், இந்த போர் பிராந்திய ரீதியாக பரவினால், இலங்கைக்கு கிடைக்கப் பெறும் அந்நிய செலாவணியை மோசமாக பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்த நிலைமை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மீது மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறிப்பாக வேலை பாதுகாப்பு, புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத் துறையை கடுமையாக பாதிக்கும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post ஈரான் – இஸரேல் போர்!!! இலங்கைக்கு பொருளாதார ரீதியாக காத்திருக்கும் சவால்கள் appeared first on Oruvan.com.