earthquake Archives - Oruvan.com

பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு
பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் அதிகாரிகள், திங்கள்கிழமை அதிகாலையில் சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, உள்ளூர் நேரப்படி காலை 7:40 மணிக்குச் சற்று முன்னதாக மின்டானோ தீவுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து உடன் வெளியேறுமாறும், கடற்கரைகள் மற்றும் துறைமுகங்களிலிருந்து விலகிச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த நிலநடுக்கத்தை 7.3 ரிக்டர் அளவில் இருக்கும் என ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் மதிப்பிட்டிருந்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தெற்கு பிலிப்பைன்ஸின் சில மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுமாறு வலிறுயுத்தப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம், அந்நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

அதேபோல், ஜப்பானும் தனது பசிபிக் கடற்கரையின் பெரும் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு appeared first on Oruvan.com.

ஈரானில் நிலஅதிர்வு
ஈரானில் பந்தர் அப்பாஸுக்கு மேற்கே நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வு நிலஅதிர்வு பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இன்று காலை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

குறித்த நிலஅதிர்வு 4.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமையும், ஈரானின் தெற்குப் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்த நிலையில், சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்ரேலும் அமெரிக்காவும் இஸ்லாமியக் குடியரசு மீது தாக்குதல்களைத் தொடங்கி மத்திய கிழக்கு முழுவதும் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post ஈரானில் நிலஅதிர்வு appeared first on Oruvan.com.

கொல்கத்தாவில் நிலநடுக்கம் – அச்சத்தில் குடியிருப்புகளை விட்டு வீதிக்கு வந்த மக்கள்
இந்தியாவின் கொல்கத்தாவில் இன்று மதியம் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து குலுங்கியதால் பொதுமக்கள் கடுமையாக அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் டாக்கிக்கு தென்கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 9.8 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, பங்களாதேஷில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்தியா – பங்களாதேஷ் எல்லையாக மேற்கு வங்க மாநிலம் அமைந்துள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு கொல்கத்தாவிலும் உணரப்பட்டு இருக்கலாம் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post கொல்கத்தாவில் நிலநடுக்கம் – அச்சத்தில் குடியிருப்புகளை விட்டு வீதிக்கு வந்த மக்கள் appeared first on Oruvan.com.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று (02) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கம் பூமிக்குள் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்தியாவின் காஷ்மீரில் 4.6 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் appeared first on Oruvan.com.

தமிழகம் – விருதுநகரில் திடீரென நிலநடுக்கம் – சாலைகளில் தஞ்சமடைந்த பொது மக்கள்
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜனவரி 29, 2026) இரவு திடீரென இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டது.

இதனால் பெரும் அச்சமடைந்த பொதுமக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்தச் சம்பவம் மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், செங்குளம் மற்றும் பாட்டாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில விநாடிகள் மட்டுமே நீடித்த இந்த அதிர்வின் போது, வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்ததாகவும், கட்டடங்கள் லேசாகக் குலுங்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்ற நில அதிர்வு ஏற்படுவது இதுவே முதல்முறை என்பதால் மக்கள் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர்.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை புவியியல் ஆய்வு மையம் இதுவரை வெளியிடவில்லை.

இந்த அதிர்வினால் பெரிய அளவிலான உயிர்ச் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பது நிம்மதியளிக்கும் செய்தியாக உள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், சாலைகளில் திரண்டிருந்த பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர்.

“தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்” என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரும் வேளையில், பாதுகாப்பு கருதி மக்கள் திறந்தவெளிகளில் நிலவரத்தைக் கவனித்து வருகின்றனர்

The post தமிழகம் – விருதுநகரில் திடீரென நிலநடுக்கம் – சாலைகளில் தஞ்சமடைந்த பொது மக்கள் appeared first on Oruvan.com.

பெருவில் நிலநடுக்கம்
பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிக்டர் அளவுகோலில் இது 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.1 மணியளவில் இது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெருவுக்கு அருகில் அமைந்துள்ள ஈக்வடாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

The post பெருவில் நிலநடுக்கம் appeared first on Oruvan.com.

அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அசாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று (05) அதிகாலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.

அதிகாலை 4:17 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் அசாமில் உள்ள மோரிகான் மாவட்டத்திற்கு அருகில் பதிவாகியுள்ளது.

மத்திய அசாமில் உள்ள மோரிகான் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் பலமாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுவரை உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று நாட்டின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அசாம் உட்பட வடகிழக்கு இந்தியா, நாட்டின் மிகவும் உணர்திறன் வாய்ந்த நில அதிர்வு மண்டலத்தில் வருகிறது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! appeared first on Oruvan.com.

ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்
ஜப்பானைத் தாக்கிய 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியது. இந்த பேரழிவு முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி அவசரகால பணிக்குழுவை அமைத்துள்ளார்.

இடிந்து விழுந்த சாலைகள் முதல் சேதமடைந்த கட்டிடங்கள் வரை, ஜப்பானில் இருந்து அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் சானே தகைச்சி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அவசரகால பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“மக்களின் உயிர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம், அவர்களைக் காப்பாற்ற நாங்கள் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று அவர் கூறினார். இப்பகுதியில் உள்ள அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜப்பானின் ஹோன்ஷு தீவின் கரையோரத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 11:15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் ஜப்பானின் பெரும்பகுதி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால் கடலில் அலைகள் எழும்பின, மேலும் ஜப்பான் மற்றும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பிற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் 50 கி.மீ ஆழத்தில் இருந்தது.

ஜப்பானிய வானிலை ஆய்வு நிறுவனம், ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள உரகாவா நகரம் மற்றும் அமோரி மாகாணத்தில் உள்ள முட்சு ஒகவாரா துறைமுகத்தை 40 சென்டிமீட்டர் சுனாமி தாக்கியதாக தெரிவித்துள்ளது.

The post ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம் appeared first on Oruvan.com.

வடமேற்கு இங்கிலாந்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
பிரித்தானியாவின் – லங்காஷயரில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 11.23 மணிக்கு சில்வர்டேல் கடற்கரையில் 1.86 மைல் (3 கிமீ) ஆழத்தில் தாக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து பொது மக்கள் சமூக ஊடகங்களில் எதிர்வினையாற்றியுள்ளனர்.

லங்காஷயர் கடந்த காலங்களில் ஃபிராக்கிங்கின் விளைவாக தொடர்ச்சியான நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. இதில் 2019 ஆம் ஆண்டில் பிளாக்பூலுக்கு அருகிலுள்ள குவாட்ரிலாவின் தளத்தில் 2.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதேவேளை, பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் 200 முதல் 300 வரையிலான நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டு புவியியல் ஆய்வு மையத்தால் இருப்பிடம் கண்டறியப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 வரையிலான நிலநடுக்கங்களை மக்கள் உணர்கிறார்கள், மேலும் சில நூறு சிறிய நிலநடுக்கங்கள் உணர்திறன் கருவிகளால் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலானவை மிகச் சிறியவை, எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது.

The post வடமேற்கு இங்கிலாந்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் appeared first on Oruvan.com.

இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று காலை 10.25 மணியளவில் இந்தோனேசியாவில் 6.5 ரிச்சர்ட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Sinabang (Indonesia) இருந்து வடமேக்காக 52 கிலோ மீட்டர் துருத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் appeared first on Oruvan.com.