during Archives - Oruvan.com

மத்திய கிழக்கு மோதல் : ஹார்முஸ் அச்சம் முதல் பங்கு சரிவு வரை – உலக பொருளாதாரம் அழுத்தத்தில்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் பிராந்திய பாதுகாப்பை தாண்டி, உலகளாவிய பொருளாதாரத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க நோக்கங்கள் நிறைவேறும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேல் தெஹ்ரானை இலக்கு வைத்து புதிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா தளங்களும் தாக்கப்பட்டுள்ளன. பெய்ரூட் நகரின் தெற்கு பகுதிகளில் பல வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

ஹார்முஸ் தடைகள் எண்ணெய் சந்தையை அச்சுறுத்துகின்றன

உலக எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை  ஊடான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து பதற்றத்தில் உள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த கப்பலில் 15 இந்திய ஊழியர்கள் இருந்த சூழலில், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலகில் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு சுமார் 20% முதல் 25% வீதம் வரை இந்த பாதையே பயன்படுத்துகிறது.

நீர்வழி அதிகாரப்பூர்வமாக மூடப்படவில்லை என்றாலும், டேங்கர் கப்பல்கள் அச்சத்தால் நிறுத்தப்படுகின்றன. காப்பீட்டு கட்டண உயர்வு மற்றும் தாக்குதல் அச்சம் காரணமாக போக்குவரத்து தாமதமடைகிறது.

இந்த வழியாக தினமும் சுமார் 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் அனுப்படுகிறது. இந்த நீரிணையில் போக்குவரத்து தடை ஏற்பட்டால், உலகளாவிய எண்ணெய் விலை மேலும் வேகமாக உயரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை (Brent Crude) 09 வீதம் உயர்ந்து பீப்பாயொன்று 79.30 அமெரிக்க டொலராக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அது 82 டொலரையும் எட்டியது.

அதேபோன்று, அமெரிக்க அளவுகோலான WTI ரக கச்சா எண்ணெய் 6.2% உயர்ந்து 71.17 டொலராக பதிவாகியுள்ளது.

அதிரும் பங்குச் சந்தைகள்

முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளுக்கு நகரும், உலக பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டுள்ளன.

மோதல் நீடிக்கும் சாத்தியம் அதிகரித்ததால் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஜப்பான் குறியீடுகள் வீழ்ச்சி கண்டதுடன் விமான நிறுவன பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைட் தற்காலிகமாக பங்குச் சந்தைகளை மூடின. முதலீட்டாளர்கள் டொலர் மற்றும் தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளுக்கு நகர்ந்ததால் யூரோ மதிப்பு சரிந்தது டொலர் யென் எதிராக உயர்ந்தது.

சந்தை பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலையும் 1.6% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு

5,360 அமெரிக்க டொலராக உயர்ந்தது.

பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் – புதிய சவால்

எண்ணெய் விலை உயர்வு, மத்திய வங்கிகளுக்கு புதிய சவாலாக உள்ளது. எண்ணெய் விலை உயர்வால், உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும். இது ஏற்கனவே தளர்வு அறிகுறைகளை வழங்கியிருந்த மத்திய வங்கிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

அமெரிக்கா ஜூன் மாதத்தில் வட்டி விகிதக் குறைப்புக்கான சுமார் 50% வாய்ப்பை மதிப்படுகிறது. ஆனால் எண்ணெய் சந்தையில் அதிர்ச்சி நீடித்தால், வட்டி குறைப்புகள் தாமதமடையக்கூடும்.

சர்வதேச வர்த்தகச் சங்கிலி நெருக்கடியில்

வளைகுடா நகரங்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுவதாலும் பல சர்வதேச விமான நிறுவனங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன. டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் வழியாக செல்லத் தயங்குகின்றன. இதனால் சர்வதேச வர்த்தகச் சங்கிலி பாதிப்பு, காப்பீட்டு செலவுகள் மற்றும் இறக்குமதி-ஏற்றுமதி விலைகளில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

உலக சந்தைகளில் எரிபொருள் மற்றும் முக்கிய பொருட்கள் தொடர்பான தகவல்கள் சில நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மறைத்து வைக்கப்பட்டு, பொதுமக்களின் அச்சத்தையும் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட எரிபொருள் மற்றும் எரிவாயுவை அதிக விலையில் விற்பனை செய்யும் முயற்சிகள் நடக்கின்றன.

சில சந்தைகள் நேரடி விலை உயர்வை தடுக்கும் வகையில் தகவலை மறைத்து வைக்கின்றன. இதனால் பணவீக்கம், சர்வதேச வர்த்தக செலவுகள் மற்றும் முதலீட்டு நிலைமை மீதான அழுத்தம் அதிகரிக்கிறது.

உலகளாவிய அபாயம்

மத்திய கிழக்கு மோதல், உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு முக்கிய அச்சமாக மாறியுள்ளது. மோதல் முதலில் பிராந்திய அபாயமாகக் கருதப்பட்டாலும், தற்போது எண்ணெய் விநியோக தடைகள், பங்குச் சந்தை சரிவு, பணவீக்கம், அரசியல் நிலைத்தன்மை குறைவு அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன.

அடுத்த சில வாரங்களில் ஹார்முஸ் திறந்தே இருக்கும் திசையா அல்லது தடைகள் உருவாகுமா என்பது உலக பொருளாதார பாதையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும்.

சில ஆய்வாளர்கள், மோதல் விரிவடைந்தால் 1970 களில் ஏற்பட்ட எண்ணெய் அதிர்ச்சியை மீண்டும் நினைவூட்டும் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.

உலக சந்தைகள் இப்போது அரசியல் தீர்மானங்களை கவனித்து, ஒரு பிராந்திய மோதல் உலக பொருளாதார சமநிலையை மாற்றுமா என்பதில் கண்காணிப்பில் உள்ளது.

The post மத்திய கிழக்கு மோதல் : ஹார்முஸ் அச்சம் முதல் பங்கு சரிவு வரை – உலக பொருளாதாரம் அழுத்தத்தில் appeared first on Oruvan.com.

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை
பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

இதன்படி பாடசாலை நாட்களில் காலை 6.30 முதல் 7.45 வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் பணியகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் வீதியோரத்தில் முறையாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான விழிப்புணர்வு நாட்டில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கடந்த 04 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

The post பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை appeared first on Oruvan.com.

பொலிஸ் காவல் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது 79 சந்தேக நபர்கள் உயிரிழப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளில் 79 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் இருந்த போது அல்லது கைது நடவடிக்கைகளின் போது உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

49 சந்தேக நபர்கள் காவலில் இருந்தபோது உயிரிழந்தததாகவும் 30 பேர் கைது நடவடிக்கைகளின் போது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது நடவடிக்கைகளின் போதும் அதற்குப் பின்னர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு வழிகாட்டுதல்களை வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The post பொலிஸ் காவல் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது 79 சந்தேக நபர்கள் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

பண்டிகைக் காலங்களில் கொழும்பில் 600 டொன் குப்பைகள் சேகரிப்பு
பண்டிகைக் காலங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நாளாந்தம் 600 டொன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக குறித்த மாநகர சபை ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் நகரில் குப்பைகள் சேகரிக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 500 டொன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டிசம்பர் 31ஆம் திகதி இரவு, காலி முகத்திடல் மைதானத்தில் ஒன்று கூடுபவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளை அகற்ற சுமார் 150 தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

தொழிலாளர்கள் விடியும் வரை குப்பைகளை அகற்றிவிட்டு மறுநாள் காலை 6:00 மணிக்குள் கொழும்பை அழகிய நகரமாக மாற்றுவார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த இடங்களில் சேரும் குப்பைகளை உரிய முறையில் தொட்டிகளில் போட வேண்டும் அல்லது அவற்றை எடுத்துச் செல்ல முன்வர வேண்டும் என அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கோட்டை பிரதேசத்தில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த நாட்களில் சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகரசபை ஆணையாளர் குறிப்பிட்டார்.

The post பண்டிகைக் காலங்களில் கொழும்பில் 600 டொன் குப்பைகள் சேகரிப்பு appeared first on Oruvan.com.