driving Archives - Oruvan.com

கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க வட்சப் இலக்கம் அறிமுகம்
அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான காணொளி காட்சிகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸ் தலைமையகம் புதிய ‘WhatsApp’ இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, 070-4755600 என்ற இலக்கத்தின் ஊடாக காணொளிகளை அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணொளிகளை அனுப்பும் போது, சம்பவம் இடம்பெற்ற திகதி, இடம் மற்றும் பொலிஸ் பிரிவு ஆகிய விபரங்களைக் குறிப்பிட்டு அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க வட்சப் இலக்கம் அறிமுகம் appeared first on Oruvan.com.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கடந்த 03 ஆம் திகதி சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் நிறுவப்பட்டது.

இதற்கு முன்னர், வெளிநாட்டினர் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற வேரஹேரவில் உள்ள மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

இந்தநிலையில் கடந்த 03 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 07 ஆம் திகதி அதிகளவான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு 2,000 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் இலங்கை சுற்றுலா சாரதிகளின் ஒன்றியம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

குறித்த நடைமுறை காரணமாக, அந்த தொழிலை நம்பியிருப்போர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதிநிதி அமில கோரலகே தெரிவித்துள்ளார்.

The post ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் appeared first on Oruvan.com.

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதி கைது
மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதி ஒருவர் குருநாகல், கட்டுப்பொத்த பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுப்பொத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை (19) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் ஒன்றை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் சோதனையிட்ட போது சாரதி மது அருந்தியிருந்தமை தெரியவந்ததாக

பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பஸ்ஸில் 16 பாடசாலை மாணவர்களும், 02 பெற்றோர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதி கட்டுப்பொத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை (20) நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

The post மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதி கைது appeared first on Oruvan.com.

மது போதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரியின் சேவை இடைநிறுத்தம்
மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம் திகதி அம்பாறை காவன்திஸ்ஸ கல்லூரிக்கு அருகில் மதுபோதையில் வாகனம் செலுத்திய போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை வலய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதோடு, எதிர்வரும் 23 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், தொடர்புடைய பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

The post மது போதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரியின் சேவை இடைநிறுத்தம் appeared first on Oruvan.com.

தாமதமான சாரதி அனுமதிப் பத்திரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை
அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

போக்குவரத்து பிரதி அமைச்சர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்திற்கு மேற்கொண்ட அவசர பரிசோதனை விஜயத்தின் போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

இணையவழி முறையின் ஊடாக நிறுவனத்தில் சேவைகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

இதன்போது, ​​நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

தற்போதைய தொழில்நுட்ப முறைகளை நவீன, மிகவும் பயனுள்ளவிதமாக மாற்றுவதன் மூலம் அதனை மிகவும் திறமையான, சேவை சார்ந்த பொது நிறுவனமாக மாற்றுவதற்கான திட்டங்களை அறிவித்தனர்.

புதிய அரசாங்கத்தின் கொள்கையானது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு வரலாற்று மாற்றத்தை அடைவதாகும் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த அபிலாஷைகளை நனவாக்க தேவையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை அவர்கள் எடுத்துரைத்தனர்.

கட்டிடங்கள் கட்டுவது போன்ற பௌதீக உட்கட்டமைப்பு மேம்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல், சேவை வழங்கலின் திறனை மேம்படுத்த மனித வளம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

The post தாமதமான சாரதி அனுமதிப் பத்திரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை appeared first on Oruvan.com.