DMK Archives - Oruvan.com

தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது – விதிகளில் தளர்வு
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நன்நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு மீளப் பெறப்பட்டன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று சரிபார்ப்பார்கள்.

இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை இராணுவம், பொலிஸார் இணைந்து மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இதனால், சட்டசபை தேர்தலில் வரலாற்று சாதனையாக தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் மொத்தம் நான்கு ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது – விதிகளில் தளர்வு appeared first on Oruvan.com.

எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி பயணம் – அமித் ஷாவுடன் சந்திப்பு
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்ற டில்லி  பயணமாகின்றார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பலமான கூட்டணியை கட்டமைத்துள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதிமுக தரப்பில் பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அன்புமணி தலைமையிலான பாமக, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி கூட்டணியை உறுதி செய்துள்ளது.

எனினும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக இன்று டில்லி பயணமாகின்றார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றும், அதாவது 35 தொகுதிகள் வேண்டும் என்றும் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி பயணம் – அமித் ஷாவுடன் சந்திப்பு appeared first on Oruvan.com.

சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திமுக இருக்கும் – மு.க.ஸ்​டா​லின்
சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்​டா​லின் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்​பூரில் இடம்பெற்ற கிறிஸ்​து​மஸ் விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது 3,250 குடும்​பங்​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்கிய முதலமைச்சர் சர்​வ​தி​கார சக்​தி​களை எதிர்க்​கும் திறன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறு​பான்​மை​யின மாணவர்​களுக்​காக 14 கல்​லூரி விடு​தி​களில் நூல​கம், உடற்​ப​யிற்சி மற்​றும் விளை​யாட்டு கருவி​கள் போன்ற கட்​டமைப்பு வசதிகளை மேம்​படுத்​தி​யுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்​றைக்கு சிறு​பான்​மை​யின மக்​கள் எத்​தகைய அச்ச உணர்​வோடு வாழ்​கிறார்​கள்.

இந்த நாட்​டின் குடிமக்​களுக்கே அச்​சத்தை வரவைக்​கும் சர்​வதி​கார சக்​தி​களை எதிர்க்​கும் திறன் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே இருக்கினறது.

உங்​களுக்கு துணை​யாக திமுக​வும், மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யும் உறு​தி​யாக இருக்​கும்.

அதே​போல், நீங்​கள் எங்​களுக்கு துணை​யாக இருக்க வேண்​டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, 2.87 கோடி​யில் 44 தேவால​யங்​கள் புனரமைப்பு உட்பட பல்​வேறு திட்​டங்​களை தனது அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திமுக இருக்கும்  – மு.க.ஸ்​டா​லின் appeared first on Oruvan.com.

பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை – விஜய் திட்டவட்டம்
தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லையென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போதே விஜய் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த விஜய்,

தவெக தலைமையில்தான் கூட்டணி அமையும். திமுகவுடன், பாஜகவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கூடிக் குழைந்து கூட்டணிக்குப்போக நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை.

தவெக எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும். மக்களை மதரீதியாக பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது.

தந்தை பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றிபெற முடியாது” என்றார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றுள்ளனர்.

The post பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை – விஜய் திட்டவட்டம் appeared first on Oruvan.com.

கச்சத்தீவை மீட்க திமுக தீர்மானம் நிறைவேற்றம் – இலங்கை அரசாங்கம் வழங்கிய பதில்
கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் பிரேரணை ஒன்றை முன்வைத்தால் அது தொடர்பில் விவாதிக்க தயார் என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மீனவப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமாயின் கச்சத்தீவு இந்தியாவினால் கையகப்படுத்தப்பட வேண்டும் என அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான கட்சி இந்த தீர்மானத்தை செயற்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,

இந்திய அரசியல் கட்சியொன்று இந்தப் பிரேரணையை நிறைவேற்றியுள்ள போதிலும், இந்திய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் இலங்கைக்கு எந்தவொரு யோசனையையும் சமர்ப்பிக்கவில்லை.

எனினும், இந்திய மத்திய அரசு அப்படி ஒரு பிரேரணையை முன்வைத்தால், அது குறித்து விவாதிக்கத் தயார்” என தெரிவித்துள்ளார்.

The post கச்சத்தீவை மீட்க திமுக தீர்மானம் நிறைவேற்றம் – இலங்கை அரசாங்கம் வழங்கிய பதில் appeared first on Oruvan.com.