Ditwah Archives - Oruvan.com

டித்வா மீட்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தம் – 173 பேரை காணவில்லை
டித்வா பேரிடரைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரிடல் 173 பேரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

டித்வா சூறாவளி தாக்கி இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டதால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நெறிமுறைகளின் கீழ் மேலும் தேடுதல் நடவடிக்கைகள் தேவையற்றவை.

எவ்வாறாயினும், டித்வா பேரிடரால் காணாமல் போனவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை 2004 சுனாமிக்கு இணையானது எனவும், சுனாமியின் பின்னர் 5,000 க்கும் மேற்பட்டோர் இன்றுவரை காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய நிலவரப்படி, டித்வா சூறாவளியால் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை 650 ஆக பதிவாகியுள்ளது. அண்மையில் கூடுதலாக நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தபோது இந்த பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“காணாமல் போனதாகக் கூறப்படும்வர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இதுவரை எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாகியும், 6,431 பேர் இடம்பெயர்ந்து, மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடாரங்களில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

கூடுதலாக, 45,056 குடும்பங்களைச் சேர்ந்த 155,255 பேர் தற்போது உறவினர்கள், நண்பர்கள் அல்லது மாற்று இடங்களில் தங்கியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post டித்வா மீட்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தம் – 173 பேரை காணவில்லை appeared first on Oruvan.com.

டித்வா சூறாவளியால் 13,000க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடரால் நாடு முழுவதும் முற்றிலுமாக அழிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 13,000 ஐ தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் (DMC) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 13,781 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், மேலும் 101,055 வீடுகள் பாதகமான வானிலை காரணமாக பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவாக வீடுகள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புத்தளம் மாவட்டத்தில் பகுதியளவு சேதமடைந்த வீடுகள் அதிகமாக பதிவாகியுள்ளன. இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 66,132 பேர் 723 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post டித்வா சூறாவளியால் 13,000க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின appeared first on Oruvan.com.

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம்
பேரிரை தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மதிப்பீடுகள் முடிந்த பின்னர் இந்த மாநாடு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட பேரிடரில் இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், நெடுஞ்சாலைகள், மின் இணைப்புகள், நீர்ப்பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது.

சுமார் ஆறு முதல் ஏழு பில்லியன் டொலர் வரையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் மதிப்பிட்டுள்ளார்.

மறுகட்டமைப்புக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, அரசாங்கம் ஏற்கனவே இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்தை நிறுவியுள்ளது. அந்த நிதியத்திற்கு இதுவரை 3.4 பில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளது.

பேரிடரின் போது, இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, ஐக்கிய இராச்சியம், மாலைத்தீவுகள், பங்களாதேஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உதவிகளை வழங்கியிருந்தன.

இந்நிலையில், சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம் appeared first on Oruvan.com.

டித்வா பேரழிவில் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை
“டித்வா” சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 203 பேருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த இரண்டாம் திகதி அரசாங்கம் வெளியிட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, திடீர் பேரிடர் சூழ்நிலை காரணமாக காணாமல் போன ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு இறப்பு பதிவு சான்றிதழ் வழங்கப்படும் என்று திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் சஷி தேவி ஜல்தீபன் தெரிவித்தார்.

இதன்படி, இந்த பேரிடர் சூழ்நிலை காரணமாக தற்போது காணாமல் போன 203 பேருக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை விரைவாகப் பெறும் நோக்கில் இந்த சான்றிதழ்களை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்காக தேவையான சட்ட விதிகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த பேரிடர் காரணமாக ஒரு நபர், உறவினர் அல்லது நண்பர் காணாமல் போயுள்ளதாக சம்பந்தப்பட்ட பகுதியின் கிராம அலுவலர் உறுதிப்படுத்தினால், மாவட்ட துணைப் பதிவாளருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட காணாமல் போன நபர் குறித்து எந்த ஆட்சேபனையும் எழுப்பப்படாவிட்டால், பதிவாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய துணை அல்லது உதவி பதிவாளர் நாயகத்தின் தொடர்புடைய ஒப்புதலால் பிரதேச செயலாளரின் ஒப்புதலுக்கான விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் காரணமாக இறந்ததாக அடையாளம் காணப்பட்ட 611 பேரில் 126 பேருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சஷி தேவி ஜல்தீபன் மேலும் தெரிவித்தார்.

The post டித்வா பேரழிவில் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை appeared first on Oruvan.com.

இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு
கடந்த மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியால் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்தததாகவும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) புதிய புவியியல் பகுப்பாய்வு இதனை தெரிவித்துள்ளது.

பேரிடன் போது, வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமான பகுதியை (நாட்டின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை) மூழ்கடித்து வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பேரிடர் தொடர்பான தரவுகளிலிருந்து பெறப்பட்ட இந்த பகுப்பாய்வு, பல தசாப்தங்களில் இலங்கையைத் தாக்கிய மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், சூறாவளிக்கு முன்பே பல பாதிப்புகளை எதிர்கொண்ட வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

நிலையற்ற வருமானம், அதிக கடன் மற்றும் பேரழிவுகளைச் சமாளிக்கும் திறன் குறைவாக இருந்துள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், மிதமான அதிர்ச்சிகள் கூட நீண்டகால பின்னடைவுகளாக மாறக்கூடும்.

வெள்ள நீர் கிட்டத்தட்ட 720,000 கட்டிடங்களை அடைந்துள்ளது. இது இலங்கையில் உள்ளட்ட கட்டிடங்களில் 12க்கு ஒரு கட்டிடம் என்ற ரீதியில் வெள்ள நீர் அடைந்துள்ளது.

நாட்டின் கடற்கரையை பன்னிரண்டு முறைக்கு மேல் சுற்றி வர போதுமான 16,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

அதேபோல், 278 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மற்றும் 480 பாலங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள்தொகையில் தோராயமாக 1.2 மில்லியன் பெண்கள், 522,000 குழந்தைகள் மற்றும் 263,000 முதியவர்கள்  அடங்குவார்கள்.  மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இரண்டு மாவட்டங்களில் (கொழும்பு மற்றும் கம்பஹா) வசிக்கின்றனர்.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலர் அதிக ஆபத்துள்ள, பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழ்கின்றனர், இதற்கு நிரந்தர தீர்வு தேவைப்படுகிறது.

“அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதிக பாதிப்பு ஒன்றுடன் ஒன்று இணைந்தால், மீட்பு பணிகள் மொதுவாகவும் அதிக செலவை ஏற்படுத்துபவையான இருக்கும்.

எனவே, இந்த இடங்களில் ஆரம்பகால நடவடிக்கை மிகவும் முக்கியமானது” என்று ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி  அசுசா குபோடா தெரிவித்துள்ளார்.

The post இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு  appeared first on Oruvan.com.

பேரிடரில் தவிக்கும் மக்கள் – இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர்.

உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா முபத்தல் சைபுத்தீன் அவர்களின் சார்பாக இலங்கை தாவூதி போரா சமூகத்தின் தலைவர் இப்ராஹிம் சயினியினால் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலை கையளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு போரா சமூக பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு அதற்காக தமது நன்றியையும் தெரிவித்தனர்.

The post பேரிடரில் தவிக்கும் மக்கள் – இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை appeared first on Oruvan.com.

பேரிடர் இறப்புகள் 200 ஐ தாண்டியது – 218 பேரைக் காணவில்லை
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, அனர்த்தம் காரணமாக 218 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

273,606 குடும்பங்களைச் சேர்ந்த 998,918 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (30) மாலை 4 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிக எண்ணிக்கையிலான இறப்புகள், பதுளை மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளன,.

இதன்படி, அந்த மாவட்டத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கண்டி மாவட்டத்தில் 66 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 20 இறப்புகளும், குருநாகலில்19 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 105 பேரும், பதுளையைச் சேர்ந்த 53 பேரும், குருநாகலைச் சேர்ந்த 37 பேரும் பேரிடர் காரணமாக காணாமல் போயுள்ளனர்.

The post பேரிடர் இறப்புகள் 200 ஐ தாண்டியது – 218 பேரைக் காணவில்லை appeared first on Oruvan.com.

இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பேரிடர்கள் ஐந்து மடங்கு அதிகரிப்பு
கடந்து மூன்று ஆண்டுகளில் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் (2022-2024) நிலச்சரிவுகளைத் தவிர, வெள்ளம், பலத்த காற்று போன்ற பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய பேரிடர் திட்டத்தை தயாரித்து, அதிக அபாயங்களுக்கு முன்னுரிமை அளித்து பேரிடர் தணிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று தணிக்கை பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக, பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் பேரிடர் தணிப்புக்காக பெறப்பட்ட ஒதுக்கீடுகளால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது என்று பேரிடர் மேலாண்மை மையம் தணிக்கைக்கு தெரிவித்துள்ளது.

இந்த தகவல், பேரிடர் மேலாண்மை மையம் தொடர்பாக 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை மையம் நிறுவப்பட்டதிலிருந்து (2011-2024) 13 ஆண்டுகளில் பேரிடர் தணிப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காக 3,404.95 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பேரிடர்கள் ஐந்து மடங்கு அதிகரிப்பு appeared first on Oruvan.com.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளமைக்கத் தேவையான பணிகளுக்காக, அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், ‘அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்’ ஒன்றை பிரதமர் அலுவலகத்தை மையமாகக் கொண்டதாக நிறுவுதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வீடமைப்பு, மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை புகையிரத திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை , மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என்பனவும் முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இந்த மத்திய நிலையத்தில் கடமைகளுக்காக நியமிக்கப்பட உள்ளனர்.

அந்த நிறுவனங்களின் அனைத்து விடயங்ளுக்கும் ஒருங்கிணைத்து வசதிகளை வழங்கும் ஒரு கூட்டு செயல்பாட்டு மையமாக அதன் செயல்பாடுகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அனர்த்த நிலைமை தணிந்தவுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையை இயல்புநிலைக்குக் கொண்டுவர எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

The post அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.

குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீட்பு
புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு அருகில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொடர் முயற்சியின் பலனாக இலங்கை விமானப்படையின் உதவியுடன் இன்று காலை கணவன், மனைவி மற்றும் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் உள்ளடங்களாக மூவர் வானூர்தி மூலம் மீட்கப்பட்டனர்.

குறித்த மூவரும் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டு வவுனியா ஜோசப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பல இடங்களில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விமானப்படை முன்னெடுத்து வருகின்ற போதும் சீரற்ற வானிலை காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீட்பு appeared first on Oruvan.com.