diseases Archives - Oruvan.com

தொற்று நோய்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த அதிகாரிகள் இருவர் நியமனம்
டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தவும், உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடவும் இரண்டு அதிகாரிகளை நியமிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சார்பாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் பிரசீலா சமரவீர மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் அதுல லியனபதிரன ஆகியோர் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பில் துல்லியமான மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்புவதால் சமூகத்தில் ஏற்படும் தேவையற்ற அச்சத்தை கட்டுப்படுத்தல் மற்றும் உத்தியோகப்பூர்வமற்ற அறிக்கைகள் காரணமாக ஊடகங்கள் மூலம் தவறான விளக்கங்களைத் தடுத்தல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மின்னணு மற்றும் அச்சு ஊடகவியலாளர்களும் பெயரிடப்பட்ட அதிகாரிகளிடமிருந்து மாத்திரமே தகவல்களைப் பெறுமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பின்வருமாறு

வைத்தியர் பிரசீலா சமரவீர, சமூக நிபுணர், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, 071 4938916 – preshilas@gmail.com

வைத்தியர் அதுல லியனபதிரன, தொற்றுநோயியல் பிரிவு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம், 071 5999757 – epidunit@sltnet.lk

The post தொற்று நோய்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த அதிகாரிகள் இருவர் நியமனம் appeared first on Oruvan.com.

குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை
குழந்தைகளிடையே இன்ஃபுளுவென்சா, சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் அதிகரித்து வருவதாகவும் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

டெங்கு மற்றும் சிக்கன்குன்யா அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெங்கு ஆபத்தானது என்றும், சிக்கன்குன்யா ஏற்பட்ட பின்னர் மக்கள் பல மாதங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் சிக்கன்குன்யாவால் பாதிக்கப்பட்டால், அது தீவிரமாக இருக்கலாம் என்றும், இந்நிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தையையும் பாதிக்கலாம் என்றும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய காலகட்டத்தில் இன்ஃபுளுவென்சா நோய்களும் அதிகரித்து வருவதாலும், இந்த நோய் குழந்தைகளிடையே வேகமாகப் பரவக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை appeared first on Oruvan.com.