Disaster Archives - Oruvan.com

பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பேரிடி – IMF கடும் எச்சரிக்கை
உலக போர் அதிர்வால் G7 நாடுகளில் பிரித்தானியாவுக்கு பின்வரிசை

உலக அரசியல் பதற்றங்களின் நிழலில், பொருளாதார முன்னேற்றப் பாதை மேலும் சவாலாக மாறி வருவதை புதிய கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஈரானை மையமாகக் கொண்ட மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தின் மீது மட்டுமின்றி, முன்னணி நாடுகளின் வளர்ச்சிக் கணிப்புகளிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் அண்மைய அறிக்கையின்படி, பிரித்தானியாவின் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு ஜனவரியில் கணிக்கப்பட்ட 1.3% இலிருந்து 0.8% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வளர்ந்த பொருளாதார நாடுகளில் பதிவான மிகப்பெரிய வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது. இதனால், ஜி7 நாடுகளில் பிரித்தானியா தற்போது இறுதி இடத்தில் உள்ளது.

அடுத்த ஆண்டிற்கான வளர்ச்சியும் 1.3% ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது முந்தைய கணிப்புகளை விட மேலும் குறைவாகும். இந்த பலவீனமான வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களாக, நீடிக்கும் மோதலின் தாக்கம், எதிர்பார்க்கப்பட்ட வட்டி விகிதக் குறைப்புகளில் தாமதம் மற்றும் எரிசக்தி விலைகள் நீண்டகாலமாக உயர்ந்த நிலையில் தொடர்கின்றமை போன்றன சுட்டிக்காட்டப்படுகின்றன.

இதனுடன், உலகளாவிய பொருளாதாரம் தனது இயல்பான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மோதல் நீடித்தால், உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையைத் தூண்டும் சூழ்நிலை உருவாகக்கூடும். பணவீக்க அழுத்தங்கள் தொடரும் நிலையில், மத்திய வங்கிகள் தங்கள் பணக்கொள்கைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.

பணவீக்கம் தொடர்பிலும் கவலைகள் அதிகரித்துள்ளன. பிரித்தானியாவில் இந்த ஆண்டில் 3.2% என்ற உயர்ந்த பணவீக்க விகிதம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், அது 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2% இலக்கை அடையும் முன், 04% ஐ தாண்டும் சாத்தியமும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, பிற முக்கிய பொருளாதாரங்களான ரஷ்யா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்புகளைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரோ மண்டல நாடுகளிலும் வளர்ச்சி மந்தமாகவே நீடிக்கிறது. ஜெர்மன் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் குறைந்த அளவிலான வளர்ச்சியையே பதிவு செய்யும் எனக் கூறப்படுகிறது.

மேலும் சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்புகள் குறுகிய கால மோதலை அடிப்படையாகக் கொண்டவை எனத் தெரிவித்துள்ளதுடன், இந்த மோதல் நீடித்தால் எரிவாயு விலைகள் மும்மடங்காகவும், எண்ணெய் விலைகள் இருமடங்காகவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்நிலையிலான பொருளாதாரச் சவால்கள், பிரித்தானிய அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புச் செலவினங்கள், நலத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சந்தை நம்பிக்கையைப் பேணுதல் ஆகியவற்றுக்கிடையில் சமநிலையை பேண வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பும், பிரித்தானியா குறைந்த வளர்ச்சியும் அதிக பணவீக்கமும் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் என முன்கூட்டியே சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார வல்லுநர்கள், அரசுகள் தங்களது நிதி பாதுகாப்பு இருப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றனர். இதற்காக வரி உயர்வுகள் அல்லது செலவினக் குறைப்புகள் போன்ற கடினமான தீர்மானங்கள் எதிர்காலத்தில் அவசியமாகலாம். அதேவேளை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மாற்றம் அவசியமானதாயினும், அது உடனடி தீர்வாக அமையாது என்பதும் குறிப்பிடப்படுகிறது.

இதனுடன் இணைந்து, பாதுகாப்புச் செலவினங்களை விரைவாகவும் பெரிதாகவும் அதிகரிக்க வேண்டும் என்ற வாதமும் மேற்கு அரசியல் வட்டாரங்களில் வலுப்பெற்று வருகிறது.

முன்னாள் நேட்டோ பொதுச்செயலாளர் லார்ட் ராபர்ட்சன் உள்ளிட்ட சிலர், தற்போதைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள சூழலில், பாதுகாப்பு செலவினங்களை துரிதமாக உயர்த்துவது அவசியம் என வலியுறுத்துகின்றனர். ஆனால், பொருளாதாரம் ஏற்கனவே பல ஆண்டுகளாக மந்தநிலையிலேயே இருப்பதால், கூடுதல் பாதுகாப்புச் செலவினங்களை எதிர்கொள்ளும் அழுத்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானிய நிதி அமைச்சரின் நிலைப்பாடு இந்த முரண்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துகிறது. “தி மிரர்” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

“இது நாம் தொடங்காத ஒரு போர். நாம் விரும்பாத ஒரு போர். தெளிவான வெளியேறும் திட்டம் இல்லாமல், அமெரிக்கா இந்தப் போரில் இறங்கியுள்ளது என்பது எனக்கு மிகுந்த விரக்தியையும் கோபத்தையும் அளிக்கிறது” என்றார்.

மொத்தத்தில், உலக அரசியல் மோதல்களின் தாக்கம் இப்போது வெறும் பாதுகாப்பு எல்லையைத் தாண்டி, நேரடியாக பொருளாதார கொள்கை வடிவமைப்பை பாதிக்கும் நிலையை எட்டியுள்ளது. பொருளாதார மந்தம், பாதுகாப்பு அழுத்தம், மற்றும் அரசியல் நம்பிக்கை ஆகியவை இணைந்து, மேற்கத்திய பொருளாதாரங்களுக்கு ஒரு புதிய சிக்கலான கட்டத்தை உருவாக்கியுள்ளன.

பாலகணேஷ் டிலுக்ஷா

The post பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பேரிடி – IMF கடும் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

இலங்கையை தாக்கிய டித்வா புயல் – அதிர்ச்சியூட்டும் சேத விபரங்கள்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரினால் இலங்கையின் 1,593 கிலோமீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றை புயல் கடுமையாக பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோயாளிகள் தவறவிட்ட மருத்துவ வருகைகள், சிகிச்சை அமர்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை மறுசீரமைக்குமாறும், நிலைமைகள் மேம்பட்டவுடன் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

விவசாய சேவைகள் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய சாலைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 137,265 ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் 305 சிறு நீர்ப்பாசன கால்வாய்களும் அழிக்கப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை தடைபட்ட 246 வீதிகளை மீளவும் திறந்துள்ளது. எவ்வாறாயினும் நாடு முழுவதும் 22 பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஊவா மாகாணத்தில் ஆறு பாலங்கள், வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தலா நான்கு பாலங்கள், மேற்கு மாகாணத்தில் மூன்று பாலங்கள், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தலா இரண்டு பாலங்கள் மற்றும் வடமத்திய மாகாணத்தில் ஒன்று பாலம் சேதமடைந்துள்ளன.

தொலைத்தொடர்பு மீட்பு நடவடிக்கை 91 சதவீதமாக உள்ளது, எனினும் நுவரெலியா மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட 16,178 மின் துணை மின் நிலையங்களில் 11,315 மீண்டும் இயக்கப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட 3,531,841 இணைப்புகளில் 72 சதவீதமான 2,526,264 நுகர்வோருக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கையை தாக்கிய டித்வா புயல் – அதிர்ச்சியூட்டும் சேத விபரங்கள் appeared first on Oruvan.com.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இயற்கை அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள  நாட்டையும் மக்களையும்  இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு எவ்வாறு ஒத்துழைப்பது, எதிரணிகளால் எப்படியான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பன பற்றி ஆராயவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட பேரிடரால் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு பாதிப்பும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

அதனால் கடந்த காலங்களில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த அனுபவமுள்ள தலைவர் என்றவகையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, இந்த அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் உடனடி நிவாரணங்கள் கிடைக்கச் செய்யும் நோக்கில் 16 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை ஒன்றை அரசாங்கத்துக்கு வழங்கி இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களை மீள இயல்பு நிலைக்கு கொண்டுவர எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என ஆராயவே இன்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

The post ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

இலங்கைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இயற்பை பேரிடர் காரணமாக  பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் நிர்மாண முயற்சிகளுக்கு நிதி உதவியை வழங்கவுள்ளதாக டிம் குக்  தெரிவித்துள்ளார்.

இயற்கை பேரிடர் காரணமாக இந்த நாடுகளில் 1300க்கும் மேற்பட்டவர்கள் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். இலங்கையில் மட்டும் 450க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மண்சரிவுகள் மற்றும் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் உணவு அல்லது தங்குமிடம் இல்லாமல் தவிக்கின்றனர். எண்ணற்ற வீதிகளும், பாலங்களும் சேதடைந்துள்ளன.

2021ஆம் ஆண்டுக்கு பின்னர் இயற்கை பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நிவாரண நடவடிக்கைகளுக்கு பெருமளவில் நன்கொடை வழங்கி வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கும் ஆப்பிள் நிறுவனம் நன்கொடை வழங்கியிருந்தது.

அதேபோல், கடந்த ஒக்டோபர் மாதம் மெலிசா புயல் ஏற்படுத்திய சேதம் காரணமாக ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் தீவு நாடுகளுக்கும் ஆப்பிள் நிறுவனம் நன்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது appeared first on Oruvan.com.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை
ஒரு நாடென்ற வகையில்  நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம்.

இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும்  அறிவோம்.

முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட  முதல் அனுபவம் இது. நாளாபக்கங்களிலிருந்தும் முழு நாடும் நீரில் மூழ்கி பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், இது மிகவும் கடினமான ஒரு செயற்பாடாகும்.

இதனை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.  இந்த கொடூரமான இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு  மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

எனது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்துடன், இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம்.

அன்பான பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, இந்தப் பேரழிவில் இறந்த அனைவரையும் மீண்டும் உயிர்ப்பிக்க முடிந்தால், எந்த சூழ்நிலையிலும் அதைச் செய்வதற்கு நாங்கள் இருமுறை யோசிக்க மாட்டோம்.

ஆனால் நாம்  யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும். இழந்தவர்கள் தொடர்பான வேதனை என்றென்றும் எம்முடன் இருக்கும்.

இறந்தவர்கள் அனைவரும் நமக்கு ஒரு இலக்கம் அல்ல. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பெயர், ஒரு முகம் மற்றும் ஒரு கதை உள்ளது.

இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது  அனுதாபத்துடன் மட்டும் நின்றுவிடாமல்  அந்த உயிர்களை அந்த குடும்பங்களுக்குத் திரும்பக் கொண்டுவர முடியாவிட்டாலும், ஏனைய அனைத்தையும் வழங்க நாங்கள்  அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

அதேபோன்று  காணாமல் போனவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பலருடைய துன்பத்தைத் தணிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கபலமாக இருப்பதற்காக  முன்வந்த அனைவரையும் நாம் அன்புடன் அரவணைக்கிறோம்.

இயற்கை அனர்த்தங்களை முறையாக கட்டுப்படுத்த முடியாத போதும் ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் மற்றும் அவசர நிலைமைகளை உரிய வகையில் முகாமைத்துவம்  செய்தல்  ,  பழைய நிலைக்கு அல்லது முன்பை விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்பும்  மூன்று செயல்முறைகளின் முக்கியத்துவம் அரசாங்கத்திற்குரியது.

அதற்குத் தேவையான மற்றும் சாத்தியமான நடவடிக்கைகள்  எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். இந்த அனர்த்தத்தை  எதிர்கொள்ளும் போது, ​​மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள்

மற்றும் கருவிகளைக் கொண்ட ஒரு நாட்டில், நம்மிடம் உள்ள விலைமதிப்பற்ற மனித வளம் வேறு எதையும் விட மதிப்புமிக்கது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்.

தன்னம்பிக்கை நிறைந்த மற்றும் அனர்த்தத்தின் போது விட்டுச் செல்லாத அனைத்து சந்தர்ப்பங்களிலும் உள்ள மனஉறுதியுடனான எமது நாட்டு பிரஜைகள் தொடர்பில் நாம்  பெருமைப்படுகிறோம்.

நாம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மறுசீரமைப்பு முன்னெடுப்பு மற்றும் மீளக் கட்டியெழுப்பும்  பணியை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அழிவின் அளவை மதிப்பிடுவது மிகவும் பாரதூரமானது. ஆனால், வெள்ளம், புயல் அல்லது ஏதேனும் பேரழிவுக்குப் பின்னர், நம் நாட்டு மக்களின் முதல் பணியாக அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவதும், அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணத்தை வழங்குவதுமாகவே உள்ளது.

அதற்காக, எங்கள் முழு அரச பொறிமுறையையும் மிகவும் திறமையாக வழிநடத்த முயற்சி செய்தோம். குறிப்பாக, எங்கள் முப்படையினரும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் உயிரை துச்சமாக மதித்து இந்தப் பணியில் துணிவுடன் செயலாற்றினார்கள். அவர்கள்  தொடர்பில் பெருமை அடைகிறோம்.

அதேபோன்று அமைச்சுக்களின்  செயலாளர்கள் முதல் கிராம அலுவலர் வரை முழு அரச பொறிமுறையும் இந்தப் பணிக்காக மிக விரைவாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு பாரிய பங்காற்றி  வருகின்றனர்.

அவர்கள் அதை தங்கள் கடமைக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதாபிமானப் பணியாகப் உணர்ந்து,  அர்ப்பணிப்புடன் தங்கள் பங்களிப்பைச் செய்தனர்.

அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ஏராளமான மக்கள் தாமாகவே முன்வந்து பங்களித்தனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் பெரும் மனிதாபிமானத்துடன் அவர்கள்  பங்காற்றினர்.  இந்த நேரத்தில் நாம் அதை நினைவுகூர வேண்டும்.

மேலும், இந்த மீட்புப் பணியில், நமது அயல் நாடுகளும் நட்பு நாடுகளும் எங்களுக்கு பெருமளவு உதவிகளைச் செய்துள்ளன.

ஹெலிகாப்டர்கள் மற்றும் நிவாரண மற்றும் மீட்புப் படைகளை வழங்குவதன் மூலம் வெளிநாடுகள் ஏற்கனவே எங்களுக்கு நட்புக் கரம் நீட்டியுள்ளன.

நமது நாட்டு மக்கள் சார்பாக நாங்கள் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

சில சுற்றறிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம் வழங்குவதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளன.

அந்த சுற்றறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் மாற்றியமைத்து, அவர்கள் எங்கு இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது எங்கு வசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் அரசாங்க நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில்  ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளோம்.

சில சுற்றறிக்கைகள்  அதிகாரிகளுக்கு  தேவைக்கேற்ப பணத்தைப் பயன்படுத்துவதற்குத் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த சுற்றறிக்கைகளை நாங்கள் மாற்றியுள்ளோம்.

ஒரு பிரதேச செயலாளருக்கு 500 இலட்சம் ரூபா வரை செலவிட அனுமதி அளித்துள்ளோம்.

மேலும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  நிதி ஒதுக்கீட்டில்  3,000 கோடி ரூபாய் எங்களிடம் உள்ளது.அதை நாங்கள் பாராளுமன்றத்தின் அனுமதி  இல்லாமல் செலவிட முடியும்.

அதனை இந்த செயற்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளோம். மாவட்ட செயலாளர்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதையெல்லாம் வழங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாவிட்டால், குறைமதிப்பீட்டின் ஊடாக  மேலும் நிதியை வழங்கலாம். வழங்கியுள்ள நிதியின் மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, சுகாதார உதவிகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும், இந்த அனர்த்த சூழ்நிலை காரணமாக, ஏராளமான அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்சார வலையமைப்பு சேதமடைந்துள்ளது.

தகவல் தொடர்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன. பிரவேச வீதிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் அழிக்கப்பட்டுள்ளன.

உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை துரிதமாக மீளமைக்க  நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அனர்த்தத்தினால்  பாதிக்கப்படாத பகுதி  ஊழியர்கள் இந்த உள்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளுக்கு  பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சுக்களுக்கு நிறுவனங்களுக்கு வேறு பணிகள் இருந்தாலும் பிரதான பணியாக கருதி இந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதற்காக நாம் ஏற்கெனவே திட்டமொன்றை தயாரித்துள்ளோம்.

மின்சார சபை , நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை , தகவல் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை  போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம் தேவையான பங்களிப்பையும் வழிகாட்டுதலையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.

அதனால், மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை முழுமையாக செயல்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.

வீதிகள் மற்றும் பாலங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் நீர் வசதிகள் வரை  உள்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்ய  பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

சீராகவும் முறையாகவும் எழுந்து நிற்கப்  போராடிக்கொண்டிருந்த ஒரு நாட்டிற்கு இந்த நிலைமை சாதாரண சவாலல்ல.

சிறு சுயதொழில் முயற்சி முதல் பாரிய அளவிலான கைத்தொழில்கள் வரை, சிறு தொழில்முனைவோர் முதல் பாரிய அளவிலான

தொழில்முனைவோர் வரை,  அனைத்துத் தரப்பினரும் தங்கள் வருமானத்தை இழந்துள்ளன.

விவசாயம், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

எனவே, இவை அனைத்தையும் மிக விரைவாக மேம்படுத்துவதற்கு நமக்கு ஒரு துரித திட்டம் அவசியம் . அதனால்தான், இந்த அனர்த்த  சூழ்நிலையை முகாமைத்துவம் செய்து  , விரைவான மற்றும் திறமையான மீள்கட்டமைப்புக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் வளங்களை வழங்க அவசரகால நிலையை அறிவித்துள்ளோம்.

இந்த அனர்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கும்  , நமது நாட்டை செயற்திறனுடன்  கட்டியெழுப்புவதற்காக அன்றி  வேறு எந்த அடக்குமுறை நடவடிக்கைக்கும் இந்த அவசரகால நிலையைப் பயன்படுத்த மாட்டோம் என்பதை இந்த நாட்டின் பிரஜைகளுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

இந்த அவசரகாலச் சட்டத்திற்கு அமைவாக , அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை ஏற்கனவே நியமித்துள்ளோம். அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் மையப்படுத்தியுள்ளோம்.

அத்தியாவசிய சேவை அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளும் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, இந்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் மூலம் மிகவும் திறமையான மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டை மேற்கொள்ள ஒரு திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்.

அதேபோன்று , நமது நாட்டை முன்பு இருந்ததை விட மிகவும் முன்னேற்றமான நாடாக மாற்ற வேண்டியது எமது அடுத்த பணியாகும். அந்த நோக்கத்திற்காக, புனரமைப்புக்குத் தேவையான நிதியை வழங்க ஒரு நிதியத்தை  நிறுவ எதிர்பார்க்கிறோம்.

அந்த நிதியத்தை நிர்வகிக்க தனியார் துறை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு , நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன அடங்கிய கூட்டு முகாமைத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு பாரிய பொறுப்பை நாம் வழங்கியுள்ளோம். நமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான  நிதியை நாம் பல்வேறு வழிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

எங்கள் நட்பு நாடுகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி அவர்களின் உதவியைப் பெறுதல், பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகொண்டு அவர்களின் உதவியை பெறுதல், உள்நாட்டு வர்த்தகர்கள்  மற்றும் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடி அவர்களின் உதவியை நாடுதல் ஊடாக அதனை பெறலாம்.

குறிப்பாக   இலங்கைக்கு வெளியே வசிக்கும் இலங்கையர்கள்  உதவியை வழங்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.

அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனவே, இந்த அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கு ஒரு வலுவான நிதியமொன்றை உருவாக்க வேண்டும்.

அதேபோன்று  தமது  துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மீள்கட்டமைப்புக்குத் தேவையான நிதி தொடர்பான ஒழுங்கான பட்டியலைத் தயாரிக்க அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளோம்.

துல்லியமான தரவு மற்றும் துல்லியமான தகவல்கள் இல்லாததால் ஏற்படும் பாதகங்களை நாங்கள் அனுபவித்துள்ளோம்.

இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, எங்களுக்கு துல்லியமான தரவு மற்றும் தகவல்கள் அவசியம்.

அதன் படி அனைத்து அரச நிறுவனங்களும் அதற்காக பணியாற்றி வருகின்றன.

இந்த துரித அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக  நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். நீண்டகால இலக்குகளை அடையவும், நாடென்ற வகையில்  ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை வரலாறு தவறவிட்டுள்ளது.

இந்தத் தடவை  அதனை தவறவிடாது நிறைவேற்றும் உறுதிப்பாடு நமக்கு உள்ளது. இந்த கடினமான நேரத்தில் ஏற்கனவே முன்வந்து எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகள், அவற்றின் தலைவர்கள், பிரஜைகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பெற  முறையான பொறிமுறையை நிறுவியுள்ளோம்.

இந்த பேரழிவு நடந்துள்ள  தருணத்தில், நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம்.

இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம். எமக்கு அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது.

பாரிய அனர்த்தத்தை  எதிர்கொள்ள அதிக நேரம் கிடையாது. ஒன்றாக இணைந்து  நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர், தனித்தனியாக அரசியல் செய்ய முடியும். குறிப்பாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறேன்.

நமது நாட்டின் பிரஜைகள் தொடர்பில் முழுமையான நம்பிக்கை எனக்குள்ளது. நமது நாட்டின் முப்படைகள், பொலிஸார் மற்றும் நமது நாட்டின் அரச சேவை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

இந்த நாட்டிலுள்ள கைத்தொழிற்துறையினர், தொழிலதிபர்கள், புத்திஜீவிகள் மற்றும் புத்தாக்குநர்கள் தொடர்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் நட்பு நாடுகள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

அந்த நம்பிக்கையுடன், இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இந்த விடயத்தில் நாங்கள் தலையிட்டுள்ளோம்.

நாங்கள் நிச்சயமாக முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புகிறோம்.

அதனை பூச்சியத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்ற போதும்  அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

குறுகிய வேறுபாடுகள் இல்லாமல் இந்த கூட்டு முயற்சியில் சேர அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் . ஒரு தேசிய மற்றும் சர்வதேச திட்டத்தின் மூலம், சிறந்த  ஒருங்கிணைப்புடன்

செயல்பட்டு நமது மனசாட்சிக்கு அமைவாக  எதிர்பார்க்கும் இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிக்குமாறு கோருகிறேன்.

எந்த இருளிலும் ஒளி பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

எனவே, நாம் ஒன்றாக எழுச்சி பெறுவோம். இந்த கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை  குணப்படுத்துவோம் . சுபீட்சமான நாட்டை  உருவாக்குவோம்.

The post ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை appeared first on Oruvan.com.

பேரிடர் இறப்புகள் 200 ஐ தாண்டியது – 218 பேரைக் காணவில்லை
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, அனர்த்தம் காரணமாக 218 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

273,606 குடும்பங்களைச் சேர்ந்த 998,918 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (30) மாலை 4 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிக எண்ணிக்கையிலான இறப்புகள், பதுளை மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளன,.

இதன்படி, அந்த மாவட்டத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கண்டி மாவட்டத்தில் 66 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 20 இறப்புகளும், குருநாகலில்19 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 105 பேரும், பதுளையைச் சேர்ந்த 53 பேரும், குருநாகலைச் சேர்ந்த 37 பேரும் பேரிடர் காரணமாக காணாமல் போயுள்ளனர்.

The post பேரிடர் இறப்புகள் 200 ஐ தாண்டியது – 218 பேரைக் காணவில்லை appeared first on Oruvan.com.

இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பேரிடர்கள் ஐந்து மடங்கு அதிகரிப்பு
கடந்து மூன்று ஆண்டுகளில் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் (2022-2024) நிலச்சரிவுகளைத் தவிர, வெள்ளம், பலத்த காற்று போன்ற பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய பேரிடர் திட்டத்தை தயாரித்து, அதிக அபாயங்களுக்கு முன்னுரிமை அளித்து பேரிடர் தணிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று தணிக்கை பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக, பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் பேரிடர் தணிப்புக்காக பெறப்பட்ட ஒதுக்கீடுகளால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது என்று பேரிடர் மேலாண்மை மையம் தணிக்கைக்கு தெரிவித்துள்ளது.

இந்த தகவல், பேரிடர் மேலாண்மை மையம் தொடர்பாக 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை மையம் நிறுவப்பட்டதிலிருந்து (2011-2024) 13 ஆண்டுகளில் பேரிடர் தணிப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காக 3,404.95 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பேரிடர்கள் ஐந்து மடங்கு அதிகரிப்பு appeared first on Oruvan.com.

சீரற்ற வானிலை – இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்திலும் இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் நேற்று (29) இரவு முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வர்த்தக சமூகத்திற்கு விளக்கமளித்ததோடு, அந்த நடவடிக்கைகளில் அவர்களிடமிருந்து பெறக்கூடிய ஆதரவு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்த அவசரகால நிலைமையில் தொழில்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் பின்னடைய இடமளிக்காமல், தொழில்துறையை தொடர்ந்து வலுவாக முன்னெடுக்க எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலாத் துறை, விமான நிலையங்கள், போக்குவரத்து ஆகிய துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து வர்த்தக சமூகத்தினர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததோடு, அனர்த்த நிலைமை தணிந்தவுடன் நாட்டில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை சீர் படுத்தல், நெடுஞ்சாலைகள், பாலங்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திரன் உட்பட அதன் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post சீரற்ற வானிலை – இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு appeared first on Oruvan.com.

கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர்க்கப்பலின் உதவியை நாடும் இலங்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பேரிடரில் சிக்கியுள்ள மீட்கும் நடவடிக்கைகளுக்காக தற்போது கொழும்பில் தரித்து நிற்கும் இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவி கோரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா இதனை தெரிவித்துள்ளார“.

கடுமையான வானிலைக்கு மத்தியில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இந்திய போர்க்கப்பலில் உள்ள விமானங்களைப் பயன்படுத்துவதற்கு உதவி கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முறையான கோரிக்கை விடுக்கப்பட்டதாக கொழும்பில் இடம்பெற்று வரும் சிறப்பு ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாதகமான வானிலை இந்திய விமானங்களையும் பாதித்து வருவதாகவும், தற்போதைய நிலைமைகள் காரணமாக விமான நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தற்போது நிலவும் பாதகமான வானிலை காரணமாக, இந்திய விமானிகளால் விமானத்தை இயக்க முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதர்களுடன் இன்று மாலை ஒரு சிறப்பு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் போது தற்போதைய நிலைமை மற்றும் தொடர்ச்சியான பேரிடர் மீட்பு முயற்சிகளுக்குத் தேவையான ஆதரவு குறித்து அவர்களுக்கு விளக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

The post கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர்க்கப்பலின் உதவியை நாடும் இலங்கை appeared first on Oruvan.com.

மோசமாகும் வானிலை – இராணுவத்தினருக்கு ஜனாதிபதி அவசர உத்தரவு
நாடு முழுவதும் நிலவும் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே 20,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும், இராணுவம் சுமார் 3,790 பேரை மீட்டு பாதுகாப்பான மையங்களுக்கு அழைத்து வந்துள்ளனர்.

கண்டி, நுவரெலியா மற்றும் பதுளையில் ஏற்பட்ட கடும் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் சாலை மூடல்கள் மீட்பு நடவடிக்கைகளை சவாலானதாக மாற்றியுள்ளன.

ஆனால் இராணுவம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினரும் மீட்புப் பணிகளுக்கு தீவிரமாக ஆதரவளித்து வருகின்றனர்.

The post மோசமாகும் வானிலை – இராணுவத்தினருக்கு ஜனாதிபதி அவசர உத்தரவு appeared first on Oruvan.com.