development Archives - Oruvan.com

ஜனாதிபதி இன்றும் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டாம் நாளாக இன்றும் (02) வடமாகாணத்தின் பல அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், “நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்” என்ற வடக்கு தெங்கு முக்கோண தொடக்க விழா இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெறும்.

2025 ஆம் ஆண்டு வடமாகாணத்தில்16,000 ஏக்கரில் தென்னைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதோடு, 2027 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 50,000 ஏக்கராக அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கு இணையாக, வடக்கில் முதலாவது விதை தேங்காய் உற்பத்தி அலகு ஜனாதிபதியின் தலைமையில் பளை நகரில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதோடு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு எதிரே உள்ள பகுதியில் தென்னை அபிவிருத்தி சபையால் நடத்தப்படும் தெங்கு தொடர்பான கண்காட்சியையும் ஜனாதிபதி திறந்து வைப்பார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளும் இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பரந்தன்-கரச்சி-முல்லைத்தீவு வீதியில் நந்திக்கடல் களப்பிற்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஊடாக, நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிப்பதோடு, இந்தப் பாலம் நீண்ட காலமாக பழுதுபார்க்கப்படாததால் தற்போது மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

இதன்படி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அது, 02 வழி புதிய பாலமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, 1.4 பில்லியன் ரூபா பொதுமக்களின் வரிப்பணத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

The post ஜனாதிபதி இன்றும் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்பு appeared first on Oruvan.com.

அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு
அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.

மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காகவும், 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் அபிவிருத்தி திட்டங்களுக்கு குறித்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

சில உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளதாக பிரதிஅமைச்சர் ருவன் செனரத் கூறியுள்ளார்.

அவ்வாறாயின் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்குத் திருப்பி அனுப்ப நேரிடும் என பிரதி அமைச்சர் ருவன் செனரத் மேலும் தெரிவித்தார்.

The post அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு appeared first on Oruvan.com.

கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு
இலங்கை முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000 ஆசிரியர்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 50 மில்லியன் டொலர் கூடுதல் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.

இந்த நிதியுதவி, கல்வி சீர்திருத்தங்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாடசாலை வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாணவர் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெருந்தோட்ட சமூகங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளை ஆதரிக்கும் பாடசாலைகள் உட்பட, வசதிகள் குறைந்த பாடசாலைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த நிதி இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான சூழலில் கற்கும் வாய்ப்பை வழங்குவதையும், ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான கருவிகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதென மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் இயக்குநர் டேவிட் சிஸ்லான் தெரிவித்துள்ளார்.

இந்த கூடுதல் நிதிகள், பணியிட ஆசிரியர் கல்வியை நவீனமயமாக்குவதற்கும், தொடர்ச்சியான ஆசிரியர் மேம்பாட்டினால் ஆசிரியர் செயற்றிறனை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் கற்றலில் வலுவான கவனம் செலுத்துவதற்கும் உதவும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான அணுகலை மேம்படுத்துதல், சுகாதாரம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பாடசாலைகளில் மனநல ஆதரவை அதிகரித்தல் மற்றும் பாடசாலை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தை ஆதரிப்பது ஆகியவை ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் வலுப்படுத்தும் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.

The post கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு appeared first on Oruvan.com.

களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு
களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் அடுத்த சில மாதங்களில் ஒரு பில்லியன் ரூபாவை செலவிடும் என்றும், அதில் 200 மில்லியன் ரூபாவை மாவட்டத்தின் வீதி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் “மறுமலர்ச்சி யுகத்தின் ஆரம்பம்” கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 21 மில்லியன் ரூபாய் செலவில் குடா வஸ்கடுவ சமகிபுர பிரதான வீதியில் இன்று காலை பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டு பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து மாவட்டத்திற்கு செயற்படுத்த 12.6 பில்லியன் ரூபா மதிப்புள்ள 84 திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டங்களை விரைவாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களால் கருவூலத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு வரிப் பணத்தையும் பொது சேவைக்கு திருப்பிவிடுவதே தனது அரசாங்கத்தின் ஒரே நம்பிக்கை என்றும் அவர் கூறினார்.

கருவூலத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் நலனுக்காக முறையாகவும், திட்டமிட்டபடியும், திறமையாகவும், ஊழல் இல்லாத வகையிலும் செலவிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில், அரசியல் அதிகாரம், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நாட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், மக்களால் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் மக்களின் வளர்ச்சி கோரிக்கைகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

The post களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு appeared first on Oruvan.com.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் NIRDC பிரதிநிதிகளுக்கிடையே கலந்துரையாடல்
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC)பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை முகவர் நிலையத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளை உருவாக்குவதற்கு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC)ஊடாக செயற்படுத்தப்படும் வணிகமயமாக்கல் செயன்முறைக்கும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச அனுபவத்தைப் பயன்படுத்துவது பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்த சந்திப்பில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் சர்வதேச அனுபவம் பெற்ற சிங்கப்பூரின் நன்யெங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லர்வென் லுவும் கலந்துக்கொண்டார்.

NIRDC-யைப் பிரதிநிதித்துவப்படுத்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் NIRDC நிறுவனருமான பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, NIRDC பணிப்பாளர் நாயகம் கலாநிதி முதித டீ. செனரத் யாபா மற்றும் பணிப்பாளர் இந்துனில் குணதிலக ஆகியோர் உட்பட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

The post ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் NIRDC பிரதிநிதிகளுக்கிடையே  கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

ரஷ்யா, ஜேர்மன், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 641,961 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது

The post சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய பங்கு குறித்து இதன்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமையாக புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பாடசாலைக் கட்டமைப்பு, அதிபர் ஆசிரியர் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு பொறிமுறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

அதிபர் ஆசிரியர் பயிற்சியை மேம்படுத்துதல் உட்பட, முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களின் மூலம் கல்வித் துறையில் உள்ள சவால்களைத் தீர்ப்பதில் தங்கள் பங்களிப்பு குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் மேலும் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் இலங்கை பிரதிநிதிகள் குழுவில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவே, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார, ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பதில் பணிப்பாளர் ரஞ்சித் கருசிங்க, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தனஞ்சி அமரசிங்க மற்றும் வெளிநாட்டு அமைச்சின் பொருளாதார விவகார பணிப்பாளர் லஷிங்கா தம்முல்லகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

ஜனாதிபதிக்கு ரணில் பாராட்டு
விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் திட்டமிடப்பட்ட சில அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் கூட்டறிக்கை இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

“பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மற்றும் பிராந்திய ஆற்றல் மற்றும் கைத்தொழில் மையமாக திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை தொடந்தும் முன்னெடுக்கின்றமைக்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

இந்த கூட்டறிக்கையில், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து இருநாடுகளும் தொடர்ந்து கலந்துரையாடுவதாக இந்திய மற்றும் இலங்கை அரசுகள் அறிவித்துள்ளன.

திருகோணமலை நீர்த்தேக்கப் பண்ணைகளின் அபிவிருத்தி தொடர்பில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதை ஒப்புக்கொண்டு, பிராந்திய ஆற்றல் மற்றும் கைத்தொழில் மையமாக திருகோணமலையின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஜனாதிபதிக்கு ரணில் பாராட்டு appeared first on Oruvan.com.