Deshabandhu Thennakoon Archives - Oruvan.com

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியாக காணப்பட்டார்
பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான விசாரணை குழுவின் அறிக்கை நாடாளுமன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சற்று முன்னர் அறிவித்தார்.

இந்த அறிக்கை மீதான விவாதம் விரைவில் இடம்பெறுமென்றும் அதுபற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென்றும் சபாநாயகர் தெரிவித்தார்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளதாக விசாரணை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் அவரை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கவும் அந்த குழு சிபாரிசு செய்துள்ளதாக அறியமுடிகிறது.

இந்த அறிக்கை மீதான விவாதம் விரைவில் இடம்பெறுமென்றும் அதுபற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதனால், பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கான பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

The post அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியாக காணப்பட்டார் appeared first on Oruvan.com.

தேசபந்து தென்னகோனுக்கு பிணை
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 10) பிணை வழங்கியுள்ளது.

இதன்படி, தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தேசபந்து தென்னகோனுக்கு பிணை appeared first on Oruvan.com.

தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு – தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடங்கிய 15 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இன்றுடன் 19 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

2023ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், நேற்று (18) மதியம், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கிழக்கு, ஹோகந்தரவில் உள்ள தேசபந்துவின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, ​​120 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் பல சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கண்டுபிடிக்கப்படதாக தெரிவிக்னகப்பட்டுள்ளது.

இதன்படி, தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் பணியும் அவற்றைப் பட்டியலிடும் பணியும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, கடந்த மாதம் 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி தொடர்பிலும் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தலைமறைவாகி ஒரு மாதம் ஆகின்றது. இந்நிலையில், தேசபந்து தென்னகோன், இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (18) கூறுகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிப்புமிக்கது என்றும், தேசபந்து தென்னகோனுக்கு அடைக்கலம் அளித்த அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு – தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை appeared first on Oruvan.com.

தேசபந்து தென்னகோன் துறவியாக விகாரையில் மறைந்து வாழ்கின்றாரா? அமைச்சரின் பதில்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் இரவும் பகலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று (11) காலை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

​​தேசபந்து தென்னகோன் முன்னாள் அமைச்சரின் வீட்டில் மறைந்திருப்பதாக சமூகத்தில் ஒரு வதந்தி பரவி வருகிறதா என்றும், அதற்கேற்ப அவரது வீடு சோதனை செய்யப்பட்டதா என்றும் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் இதன்போது கேள்வியெழுப்பினர்.

மேலும், தேசபந்து தென்னகோன் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு ஒரு விகாரையில் துறவியாக தங்கியிருப்பதாக வதந்தி பரவி வருவதாகவும் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற வகையில் பொலிஸாருக்கு இதுபோன்ற தகவல்களை வழங்குவது அவர்களின் பொறுப்பு என்று கூறினார்.

The post தேசபந்து தென்னகோன் துறவியாக விகாரையில் மறைந்து வாழ்கின்றாரா? அமைச்சரின் பதில் appeared first on Oruvan.com.

பொலிஸ்மா அதிபரை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரம் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், நீதிமன்றத்தை தவிர்க்கும் பிடியாணைதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல நேற்று (09) தெரிவித்தார்.

சட்டத்தை செயல்படுத்துவதற்கு தரவரிசை ஒரு பொருட்டல்ல என்று அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், தேசபந்து தென்னகோன் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பொலிஸ்மா அதிபரை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிப்பு appeared first on Oruvan.com.

தேசபந்து தென்னகோன் நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலையாவார்?
வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், நாளை மறுதினம் வியாழக்கிழமை (06) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (03) மாத்தறை கொட்டவிலயில் உள்ள பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாவார் என வெளியான செய்திகளுக்கமைய காலை முதல் நீதிமன்றத்தின் முன்னால் ஊடகவியலாளர்கள் தரித்திருந்துள்ளனர்.

எனினும், மாலை வேளை வரையில் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்கவில்லை.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்தல் முன்னிலையாவார் என பலரும் எதிர்ப்பார்த்திருந்தனர்.

எனினும், வழக்கு திகதி எதிர்வரும் வியாழக்கிழமை என்பதால் அன்றைய தினம் பிரேரணை ஒன்றின் மூலம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வாய்ப்புகள் உள்ளதாக வெலிகம பொலிஸ் தலைமையகம் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக குறித்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.

The post தேசபந்து தென்னகோன் நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலையாவார்? appeared first on Oruvan.com.