Deported Archives - Oruvan.com

அமெரிக்கா இந்த வருடத்தில் 2000 இற்கும் மேற்பட்ட இந்தியர்களை திருப்பி அனுப்பியுள்ளது -ஜெய்ஸ்வால்
இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதென இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சட்டபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை அரசு ஊக்குவிக்கிறது. கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை இந்தியாவுக்கு திருப்ப அனுப்பியுள்ளது.

சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக ஒரு நாடு கூறுமேயானால், நாங்கள் அத்தகைய நபர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கிறோம்.

சட்டபூர்வமற்ற முறையில் இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்கிறோம்.

சட்டவிரோத இடப்பெயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வேலைவாய்ப்புகளில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட விசா முறைகள் குறித்து நாங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இந்திய மாணவர்களின் விண்ணப்பம் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் கல்வி நிலையங்களில் சேரமுடியும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

The post அமெரிக்கா இந்த வருடத்தில் 2000 இற்கும் மேற்பட்ட இந்தியர்களை திருப்பி அனுப்பியுள்ளது -ஜெய்ஸ்வால் appeared first on Oruvan.com.

இஸ்ரேலில் விதிமுறைகளை மீறிய 17 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு
இஸ்ரேலில் உள்ள 17 இலங்கைப் பிரஜைகள்,  வேலை ஒப்பந்தங்களை மீறியதற்காக இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடுகடத்தப்பட்டவர்கள் விவசாய வேலை விசாவில் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிடங்களை விட்டு வெளியேறிய பின்னர் பேக்கரிகளில் பணிபுரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இணக்கப்படை உறுதிப்படுத்த வெளிநாட்டு தொழிலாளர் நடைமுறைகளை இஸ்ரேல் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இஸ்ரேல் வெளிநாட்டு பணியாளர்களை அவர்களது விசா ஒப்பந்தங்களில் குறிப்பிடப்படாத வேலைகளில் இணைவதை

தடை செய்வதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

நுழைவுக்குப் பின்னர் இதுபோன்ற விசா வகை மாற்றங்களுக்கு எந்த சட்ட விதிகளும் இல்லை என்று இஸ்ரேலிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்ரேலுக்கு பராமரிப்பு பணிக்காக வந்த இலங்கைப் பெண் ஒருவர் தனது வேலை நிலைமைகளை மீறியதற்காக நாடு கடத்தப்பட்டார்.

இந்நிலையில் இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவைப் பேணுவதற்கு தொழிலாளர்கள் தமது ஒப்பந்தக் கடமைகளை கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

The post இஸ்ரேலில் விதிமுறைகளை மீறிய 17 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு appeared first on Oruvan.com.