Dehiwala Archives - Oruvan.com

கொழும்பில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் – போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது
தெஹிவளையில் முதியவர் ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சந்தேக நபர் “ஐஸ்” போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி தெஹிவளை வைத்தியசாலை வீதியில் நடந்து சென்ற 74 வயதுடைய ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி, அவரது சட்டைப் பையில் இருந்த ரூபாய் 2100 பணத்தை பறித்து சந்தேக நபர் தப்பிச் சென்றிருந்தார்.

மனிதாபிமானமற்ற செயல் இடம்பெற்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்தனர்.

தெஹிவளை பொலிஸ் குற்றப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் வைத்திருந்த ஐஸ் போதைப்பொருள் 5200 மில்லிகிராம் அளவும் பொலிசார் கைபஓபற்றியுள்ளனர்.

சந்தேக நபர் 23 வயதுடையவர், தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கல்கிசை கௌரவ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொழும்பில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் – போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

தெஹிவளையில் மஞ்சள் அனகொண்டா குட்டியை காணவில்லை!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகோண்டா குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெஹிவளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து உள்ளூர் பெண் ஒருவர் மஞ்சள் அனகோண்டா உட்பட மூன்று இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்திருந்தார்.

பின்னர் பாம்புகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத்துறையினரின் காவலில் எடுக்கப்பட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி, ஆறு பாம்புகளும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட காலத்திற்குப் பிறகு பொது காட்சிக்கு வைக்கப்படும் என்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் துணை இயக்குநர் கசுன் ஹேமந்த சமரசேகர சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மிகவும் கனமான பாம்பு இனங்களில் மஞ்சள் அனகோண்டாவும் ஒன்று என்று அவர் கூறினார்.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன இந்த மஞ்சள் அனகோண்டா கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post தெஹிவளையில் மஞ்சள் அனகொண்டா குட்டியை காணவில்லை! appeared first on Oruvan.com.

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சிறப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்பலி
கடந்த 18ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று (25) காலை சிறப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார்.

கஹதுடுவ, பலகம, கெடெலோவிட்ட பகுதியில் உள்ள ஒரு வெறிச்சோடிய வீட்டை இன்று அதிகாலை 4:30 மணியளவில் காவல்துறை சிறப்புப் படையினர் சோதனை செய்தனர்.

இதன்போது அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் சிறப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர், சிறப்புப் படையினரும் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் காயமடைந்த சந்தேக நபர் உயிரிழந்தார். சம்பவத்தில் காயமடைந்த சிறப்புப் படை அதிகாரி ஒருவர் களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உடல் மேலதிக விசாரணைக்காக வெதர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

The post தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் –  சிறப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்பலி appeared first on Oruvan.com.

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டு களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

The post தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கிளி கொள்ளை
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் வைக்கப்பட்டிருந்த 500,000 ரூபாவுக்கும் மேற்பட்ட மதிப்புடைய நீலம் மற்றும் மஞ்சள் நிற மக்கா கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் கடந்த 04 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

கொள்ளை சம்பவம் மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தக் கிளி வைக்கப்பட்டிருந்த கூண்டில் மேலும் 30 கிளிகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் ஒன்று இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மூலம் தெஹிவளை பொலிசாரிடம் முறைப்பாடளித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டிலும் , அதே கூண்டில் வைக்கப்பட்டிருந்த நீலம் மற்றும் மஞ்சள் நிற மக்கா கிளி காணாமற் போயிருந்தது.

பின்னர் அந்தக் கிளி இரத்மலானை பகுதியில் உள்ள வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

The post தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கிளி கொள்ளை appeared first on Oruvan.com.

தெஹிவளையில் ரயில் மோதி தம்பதியினர் உயிரிழப்பு
கொழும்பு – தெஹிவளை ரயில் பாதையில் நடந்து சென்ற தம்பதியினர் கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (ஜூன் 4) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 58 மற்றும் 59 வயதுடையவர்கள், பதுளையின் பதுலுபிட்டிய பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தெஹிவளையில் ரயில் மோதி தம்பதியினர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.