Death penalty Archives - Oruvan.com

யாழ்ப்பாணம் – கொடிகாமம் கொலை வழக்கு! இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் நேற்று (20) தீர்ப்பளித்தார்.

கடந்த 2010 டிசம்பர் 16ஆம் திகதி மந்தைவெளி, கொடிகாமம் பகுதியில் 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்டகாலமாக யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் எதிரிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா அவர்கள் முன்னிலையானார்.

வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி கா. நசிகேதன் அவர்கள் முன்னிலையாகி வழக்கை நெறிப்படுத்தினார்.

சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த நீதிபதி, எதிரிகள் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்கு தொடுனர் நிரூபித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மந்தைவெளி பிரதேசத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் இருவரையும் குற்றவாளிகளாக இனங்கண்ட நீதிபதி, அவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

The post யாழ்ப்பாணம் – கொடிகாமம் கொலை வழக்கு! இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை appeared first on Oruvan.com.

13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை – ஆப்கானிஸ்தானில் சம்பவம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றின் காணொளி வெளியாகியுள்ளது.

80,000 பேர் முன்னிலையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி மூலம் சுடப்பட்டு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மரணதண்டனை 13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த காணொளி தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் தண்டனையை நிறைவேற்றியவரின் குடும்பத்தினரைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

தாலிபான் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டதுடன், ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து தாலிபான் உச்சத் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாதா அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற அனுமதி அளித்திருந்தார்.

பின்னர் 13 வயது சிறுவனிடம் குற்றவாளியை மன்னிக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது, அதற்கு சிறுவன் திட்டவட்டமாக மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதிகாரிகள் மரணதண்டனையை நேரில் காண பொது மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். மரணதண்டனையைக் காண சுமார் 80,000 பேர் கொண்ட கூட்டம் கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் அதிகாரிகள் 13 வயது சிறுவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து மரணதண்டனையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினர். சிறுவன் பொது மக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனை நிறைவேற்றப்படும் கொடூரமான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 80,000 பேர் நிறைந்த ஒரு பொது இடத்தில், துப்பாக்கிச் சூடு மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை – ஆப்கானிஸ்தானில் சம்பவம் appeared first on Oruvan.com.

வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை
இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும்படி, அங்கு உள்ள இந்திய துாதரகத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ராஜு முத்துக்குமரன், செல்வதுரை தினகரன் மற்றும் கோவிந்தசாமி விமல்காந்தன், 37 ஆகியோர் இந்தோனேஷியாவில் தனியார் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.

கடந்த 2024 ஜூலையில், இவர்கள் மூன்று பேரும், 104 கிலோ ‘மெத் ஆம் பெட்டமைன்’ எனும் போதைப்பொருளை கடத்த முயற்சித்ததாக, இந்தோனேஷிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த மூவருக்கும் எதிரான வழக்கு இந்தோனேஷியாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி மூன்று பேருக்கும் மரண தண்டனை விதித்து, இந்தோனேஷிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றின் இந்த தீர்ப்பு அந்த மூவரின் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், மரண தண்டனையில் இருந்து தங்கள் கணவரை காப்பாற்றக் கோரி, அவர்களது மனைவியர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தோனேஷிய சிறையில் உள்ள மூன்று பேருடன், அவர்களது மனைவியர் தொடர்புகொண்டு பேச வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

மேலும், மரண தண்டனை பெற்றவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் இந்த விவகாரம் தொடர்பாக, இந்தோனேஷிய அரசுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் பேச்சு நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை appeared first on Oruvan.com.