CSK Archives - Oruvan.com

சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி – தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவருக்கு இடது தொடை தசை நார் காயமடைந்துள்ளதாகவும், இதில் இருந்து குணமடைய ஆறு முதல் 12 வாரங்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ் மாத்ரே, முதல் ஆறு போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 177.88 ஸ்ட்ரைக் ரேட்டில், 33.50 சராசரியில் 201 ஓட்டங்களை குவித்திருந்தார்.

சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற ஆயுஷ் மாத்ரேவின் துடுப்பாட்ட முக்கிய காரணமாகும்.

இறுதியாக விளையாடியப் போட்டியிலும் 13 பந்துகளில் 30 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இந்நிலையில், மாத்ரேவிற்கு பதிலாக மாற்று வீரரை தெரிவு செய்ய சென்னை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது தொடரில் இருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஆயுஷ் மாத்ரே தொடரில் இருந்து விலகியுள்ளமை சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

The post சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி – தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன் appeared first on Oruvan.com.

சென்னை அணிக்கு பேரிடி – தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல்
வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டில் கலீல் அகமது பந்து வீசிய போது வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இடையில் வெளியேறினார்.

இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்குத் தசைநார் கிழிவுஇருப்பது உறுதியானது.

இதிலிருந்து அவர் மீண்டு வரக் குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கலீல் அகமது, காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.

இந்த பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் கலீல் அகமது இடம் பெற்றிருந்தார். சென்னை அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக அவர் செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், கலீல் அகமதுவுக்குப் பதிலாக மாற்று வீரராக யாரை சென்னை அணி ஒப்பந்தம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

The post சென்னை அணிக்கு பேரிடி – தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல் appeared first on Oruvan.com.

சென்னை அணியின் தொடர் தோல்வி – கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துவரும் அவலநிலைகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரவி அஸ்வின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

நேற்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அஸ்வின் இவ்வாறு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

சென்னை அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெறும் முடிவு தனக்கு மிகுந்த வேதனையை அளித்ததாக அஸ்வின் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

“நான் மனதளவில் மிகுந்த சிரமத்தில் இருந்தேன். என்னால் இன்னும் அதிகமாக விளையாடியிருக்க முடியும், ஆனால் அதற்கான ஆற்றல் என்னிடம் இல்லை. நான் சென்னையில் தொடங்கி சென்னையிலேயே முடிப்பேன் என்று நினைத்தேன்.

என்னை அணியில் வைத்திருப்பதா அல்லது விடுவிப்பதா என்ற தலைவலியை நிர்வாகத்திற்குக் கொடுக்க விரும்பாததால், நான் ஓய்வு பெற முடிவு செய்தேன்.

அது அவர்களுக்கு 10 கோடி ரூபாயை சேமிக்க உதவியது என்று அஸ்வின் கூறினார்.

கடந்த ஆண்டு அணியில் நடந்தவை குறித்து அதிகம் பேச விரும்பாத அஸ்வின், அது இன்னும் தன்னை பாதிப்பதாகக் கூறினார்.

அனுபவமிக்க வீரர்களை விலக்கிவிட்டு இளம் வீரர்களை உள்ளே கொண்டுவரும் சென்னை அணியின் உத்தியையும் அஸ்வின் கேள்விக்குள்ளாக்கினார்.

இளம் வீரர்களுக்கு முறையான பயிற்சியையும் சூழலையும் வழங்குவதில் அணி தவறி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் துடுப்பாட்ட வீரர்கள் பலத்தைப் புரிந்து கொள்ளாமல் பந்து வீசுகிறார்கள்.

அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தங்களுடைய பாணிக்கு மாறான ‘வைட் யோர்க்கர்களை’ வீசியதுதான், டிம் டேவிட் மற்றும் ஏனைய வீரர்கள் சென்னை அணியை வீழ்த்தியதற்கு காரணம் என்றும் அஸ்வின் விமர்சித்தார்.

இந்த பருவத்தில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளது. அந்த அணியால் தற்போது ஒரு முறையான ஆடும் பதினொருவர் அணியை கூட அமைக்க முடியவில்லை.

நேற்றையப் போட்டியில் பெங்களூருவிடம் அடைந்த தோல்வியும் அணியின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது.

பெங்களூரு அணி நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்கள் மற்ற அணிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்து வருவதாகவும் அஸ்வின் மேலும் தெரிவித்துள்ளார்.

The post சென்னை அணியின் தொடர் தோல்வி – கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின் appeared first on Oruvan.com.

தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு
சட்​டசபைத் தேர்​தலை முன்​னிட்டு சென்​னை​யில் சூப்​பர் கிங்ஸ் அணி​ பங்​கேற்​கும் இரு ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளை​யும் வேறு திகதி​களுக்கு மாற்​றக்​கோரி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காளர் டி.பிர​பாகரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்கல் செய்​துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,

“தமிழகத்​தில் சட்​டசபைத் தேர்​தல் எதிர்வரும் ஏப்​ரல் 23 ஆம் திகதி அன்று நடை​பெறவுள்​ளது. தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் மார்ச் 30 ஆம் திகதி தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் ஏப்ரல் 4 மற்​றும் ஏப்​ரல் 11 ஆம் திகதி​களில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி பங்​கேற்​கும் கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெறவுள்​ளது.

தேர்​தல் நேரத்​தில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெறவுள்ள போட்​டிகளை வேறு திபதிக்கு மாற்ற உத்​தர​விட வேண்​டும்.

சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி பங்​கேற்​கும் போட்​டிகளை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​திக் கொள்ள ஐபிஎல் நிர்​வாகத்​துக்கு அறி​வுறுத்த வேண்​டும்.

சேப்​பாக்​கத்​தில் கிரிக்​கெட் போட்டி நடத்​தப்​பட்​டால் கிரிக்​கெட் போட்​டியைக் காண வரும் இரசிகர்​களுக்​கும், கிரிக்​கெட் வீரர்​களுக்​கும் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டிய கட்​டா​யம் பொலிஸாருக்கு ஏற்​படும்.

ஐபிஎல் போட்​டிகளின் போது கிரிக்​கெட் இரசிகர்​கள் என்ற போர்​வை​யில் மைதானத்​துக்​குள் தங்​களது சின்​னத்​துடன் கட்சியினர் பிர​ச்சா​ரம் செய்​வர் என்​ப​தால் தேவையற்ற சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படும்.

எனவே, ஏப்ரல் 04 மற்​றும் ஏப்​ரல் 11 ஆம் திகதி​களில் நடை​பெறவுள்ள கிரிக்​கெட் போட்​டிகளை தமிழகத்​தில் தேர்​தல் முடிந்த பிறகு நடத்​திக் கொள்​ளு​மாறு போட்டி ஏற்​பாட்​டாளர்​களை அறி​வுறுத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்.

ஒரு​வேளை கிரிக்​கெட் போட்​டிகளுக்​கான திகதி​களை மாற்ற முடி​யாது எனக் கூறி​னால் தேர்​தல் நடத்தை விதி​களை கடுமை​யாக அமுல்​படுத்​த​வும், அரசி​யல் கட்​சிகளின் சின்​னங்​கள், கொடிகள் என எதை​யும் மைதானத்​துக்​கு உள்​ளே​யும், வெளி​யே​யும் காட்​சிப்​படுத்த அனு​ம​திக்​கக் கூடாது என ஐபிஎல் நிர்​வாத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு appeared first on Oruvan.com.

தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2026 ஐபிஎல் சீசனுக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு செய்துள்ளது.

நேற்று நடந்து முடிந்த மினி ஏலத்தில் சுமார் 32 கோடி இந்திய ரூபாயை இரண்டு வீரர்களுக்காக செலவிட்டுள்ளது.

இந்தத் தொகை அணியின் திறன்களை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், தோனிக்குப் பிறகு எதிர்காலத்திற்கு சென்னை அணி தயாராகி வருவதையும் குறிக்கிறது.

தோனியை அணி தக்க வைத்துக் கொண்டிருக்கலாம் என்றாலும், இந்த முதலீடு எதிர்காலத்திற்கான ஒரு உத்தியையும் ஒரு வாரிசை உருவாக்குவதையும் தெளிவாகக் குறிக்கிறது.

நேற்று செலவிட்ட தொகையே இதை பறைசாற்றுகின்றன. 19 வயதான கார்த்திக் சர்மாவை சென்னை 14.20 கோடிக்கு வாங்கியுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.

உர்வில் படேலை தக்கவைத்துக் கொண்டதன் மூலம், அணியில் இப்போது நான்கு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்கள் (சஞ்சு சாம்சன், எம்எஸ் தோனி, உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா) உள்ளனர்.

2008 முதல் தோனியை மட்டுமே நம்பியிருக்கும் அணிக்கு இந்த நடவடிக்கை நம்பிக்கையை கொடுத்துள்ளது.

தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் சென்னை அணியின் உத்தியில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.

சென்னை அணி தனது மொத்த கையிருப்பான 43.40 கோடியில் 60 வீதத்தை இரண்டு புதிய வீரர்களுக்காக மட்டுமே செலவிட்டது, இது அவர்களின் பாரம்பரிய கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

44 வயதான தோனி தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, ஆனால் அவரது சமீபத்திய அறிக்கைகள் அவரது வாழ்க்கை அதன் இறுதி கட்டத்தில் இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

“நான் என் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன் என்பதில் இருந்து தப்பிக்க முடியாது. நான் என் வாழ்க்கையை முழுமையாக முடித்துவிட்டேன் என்று சொல்லவில்லை.

ஆனால் அடுத்த சீசனுக்கான உறுதியான உறுதிப்பாடுகள் இன்னும் எனக்கு இல்லை.” என்று தோனி அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை appeared first on Oruvan.com.

சஞ்சு சாம்சான் உள்ளே, ஜடேஜா வெளியே!! பாரிய பரிமாற்றத்திற்கு தயாராகும் சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் மிகவும் பரபரப்பான வீரர்கள் பரிமாற்றம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு வரும் நிலையில், சென்னை அணியின் தூணாக விளங்கிய ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு செல்லவுள்ளார்.

ஜடேஜாவுடன் சென்னை அணியில் இருந்து சாம் கரனும் ராஜஸ்தானி அணிக்கு பரிமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மூன்று வீரர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீரர்களின் பரிமாற்றத்திற்கான விருப்பம் தற்போது இந்திய கிரிக்கெட் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 48 மணி நேரத்தில் இறுதி ஒப்புதலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சஞ்சு சாம்சன், ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகிய மூவரும் இந்த பரிமாற்றத்திற்கு இணக்கம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருமே தங்கள் அணிகளில் தலா 18 கோடி ரூபாவிற்கு தக்கவைக்கப்பட்ட (Retained) வீரர்கள் ஆவர்.

இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஜடேஜாவை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர் சென்னை அணிக்கு ‘Gun Player’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

The post சஞ்சு சாம்சான் உள்ளே, ஜடேஜா வெளியே!! பாரிய பரிமாற்றத்திற்கு தயாராகும் சிஎஸ்கே appeared first on Oruvan.com.

சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி தீவிரம் – ஜடேஜாவை விட்டுக்கொடுக்கவும் முடிவு
ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு இடம்பெறவுள்ள மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பெரிய வீரர் பரிமாற்றம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனை கொடுத்து சென்னை அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜாவைக் கைப்பற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

எனினும், இந்த உடன்படிக்க முழுமை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜாவுக்கு ஈடாக சாம்சனை நேர்மையான பரிமாற்றமாக மட்டும் செய்ய ராஜஸ்தான் ரோயல்ஸ் விரும்பவில்லை.

மாறாக சாம்சனுக்கு பதிலா ஜடேஜாவுடன், மற்றொரு வீரரையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் ரோயல்ஸ் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் உடன்படிக்கை முழுமைய அடைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரு வீரர்களும் அவரவர் அணிகளால் தலா 18 கோடி ரூபாவிற்கு தக்கவைக்கப்பட்டதால், ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் என்ற நேரடிப் பரிமாற்றம் நடக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது.

எனினும், ரோயல்ஸ் அணி கூடுதலாகத் தென்னாப்பிரிக்க வீரரான டெவால்ட் பிரெவிஸைக் கோரியது. பிரெவிஸை விடுவிக்க சென்னை அணி விரும்பாததால், பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2025 ஐபிஎல் தொடரில் காயமடைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கிற்குப் பதிலாக சென்னை அணியில் டிவால்ட் பிரெவிஸ் இணைந்துகொண்டார்.

கிடைத்த வாய்ப்புகளில் தனது அதிரடி துடுப்பாட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். இதனால் பிரெவிஸின் ஆட்டம் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், பிரெவிஸ்ஸை விட்டுக்கொடுக்க சென்னை அணி விரும்பிவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி தீவிரம் – ஜடேஜாவை விட்டுக்கொடுக்கவும் முடிவு appeared first on Oruvan.com.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு
ஐபிஎல் (Indian Premier League) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

எனினும் அவர் இந்த தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் பலரும் அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதனால், அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகுவதாகவும், ராஜஸ்தான் அணியில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “சிறப்பான நாளில் ஒரு சிறப்பான தொடக்கம். ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு துவக்கத்தைக் கொண்டிருக்கும். ஐபிஎல் வீரராக எனது நேரம் முடிவுக்கு வருகிறது.

ஆனால், பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரம் துவங்கியுள்ளது. அனைத்து அழகான நினைவுகள் மற்றும் எனக்கு வாய்ப்பளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான அஸ்வின், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக 197 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு appeared first on Oruvan.com.

சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை… 35 வயது வீரரையும் வாங்கும் சென்னை அணி?
ஐபிஎல் 2025 சீசன் முடிவடைந்தாலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் டிரேடிங் செயல்முறைகள் தான் தற்போது அதிக கவனம் பெறுகின்றன. ஏனெனில், இந்த டிரேடிங் முறையின் மூலம் அணிகள், எதிர்கால சீசனுக்கான தங்களின் பிளேயிங் லெவனை வலுப்படுத்த திட்டமிடுகின்றன.

அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தங்கள் அணிக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 35 வயது ஸ்டோய்னிஸின் ஆட்டத்திறமை மீது சென்னை அணி உயர்ந்த நம்பிக்கையுடன் உள்ளது.

2025 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயாண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டோய்னிஸ், சென்னைக்கு எதிரான போட்டியில் சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சதம் விளாசியதும், அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததும் இன்னும் ரசிகர்கள் நினைவில் உள்ளது.

அதன் பின் அவரைத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க விருப்பமாக இருந்ததாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் திறமையுடன் செயல்படக்கூடிய ஸ்டோய்னிஸை டிரேடிங் முறையில் கைப்பற்றுவதற்கு சென்னை அணி தீவிரமாக முனைந்துள்ளது.

இதற்காக பஞ்சாப் அணியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸை பஞ்சாப் கேட்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஏற்கனவே எல்லிஸ், பஞ்சாப் அணிக்காக விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பதால், இந்த பரிமாற்றம் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ராஜஸ்தான் அணியின் அணியின் சஞ்சு சாம்சன், குஜராத் அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் பினிஷர் ராகுல் தெவட்டியாவையும் சென்னை அணி இலக்காகக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சென்னை அணி தங்கள் அடுத்த சீசனுக்கான அணியை மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் உருவாக்கிக்கொண்டு இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

மொத்தத்தில், 2026 சீசனுக்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவூட்டும் நடவடிக்கைகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

The post சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை… 35 வயது வீரரையும் வாங்கும் சென்னை அணி? appeared first on Oruvan.com.

ஓய்வை அறிவிக்க தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
ஐபிஎல் 2025இன் லீக் போட்டிகள் இன்றுடன் முடிய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன.

ஜூன் மூன்றாம் திகதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல்லில் அதிக இளம் வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஐந்து வீரர்கள் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

மொயின் அலி

தற்போது 38 வயதாகும் மொயின் அலி டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.

இந்த ஆண்டு அவருக்கு அணியிலும் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். எனவே இந்த வருடத்தின் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

விஜய் சங்கர்

கடந்த சீசன் வரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த விஜய் சங்கரை இந்த ஆண்டு மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. இருப்பினும் அவரால் போதிய இம்பாக்டை கொடுக்க முடியவில்லை.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மினி ஏலத்திற்கு முன்பு அணியில் இருந்து அவரை விடுவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அவரை இனி எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவும் வாய்ப்பில்லை. இதனால் விஜய் சங்கர் ஓவை அறிவிக்கலாம்.

ஃபாஃப் டு பிளெசிஸ்

தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஃபாஃப் டு பிளெசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல முக்கிய போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது 41 வயதாகும் அவர் கடந்தாண்டு வரை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தார்.

இந்த சீசனில் இரண்டு கோடிக்கு அவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி வாங்கியது. இருப்பினும் அவரால் பழைய மாதிரி பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் இந்த சீசனுடன் அவர் ஓய்வை அறிவிக்கலாம்.

தோனி

மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் தலைவராக இந்த சீசனில் செயல்பட்டார். ருதுராஜ் கைக்குவாட்டிற்கு காயம் ஏற்பட்ட காரணமாக அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தோனி ஓய்வு அறிவிப்பாரா என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த சீசனில், அடுத்த ஆண்டு வருவேனா வரமாட்டானா என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது 44 வயதாகும் தோனிக்கு முட்டி காலில் பிரச்சினை அதிகளவில் இருந்து வருகிறது. எனவே அவரது முடிவு இந்த ஆண்டுக்குள் தெரிந்துவிடும்.

அஸ்வின்

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார்.

இவரிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் இந்த சீசனில் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் அவ்வளவு சிறப்பாக இல்லை.

கிட்டத்தட்ட 10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் சென்னை பிட்சிலேயே விக்கெட்கள் எடுக்க சிரமப்பட்டார். எனவே இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஐபிஎல்லில் இருந்தும் இவர் ஓய்வை அறிவிக்கலாம் என கூறாப்படுகின்றது.

The post ஓய்வை அறிவிக்க தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் appeared first on Oruvan.com.