crime Archives - Oruvan.com

முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
மொரட்டுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 7.30 மணியளவில் 119 அவசர எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் சடலத்தை மீட்டுள்ளனர்.

அவரது உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வேறு எங்காவது வெட்டிக் கொல்லப்பட்டு பின்னர் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மொரட்டுவ முல்ல பகுதியைச் சேர்ந்த ‘சுரா’ என்று அழைக்கப்படும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை வழக்கில் சந்தேக நபர் என்றும், தற்போது மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

The post முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் appeared first on Oruvan.com.

வீட்டு வாடகை தொடர்பாக தகராறு – கொழும்பில் ஒருவர் கொலை
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸில் உள்ள கம்பிலிகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, உயிரிழந்தவர் கணவனையும் அவரது மனைவியையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உயிரிழந்த நபரின் கையில் இருந்த கூர்மையான ஆயுதத்தைப் பறித்து, இறந்தவரைத் தாக்கியதாகவும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் சந்தேக நபரும் அவரது மனைவியும் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வீட்டு வாடகை தொடர்பாக தகராறு – கொழும்பில் ஒருவர் கொலை appeared first on Oruvan.com.

ஷேக் ஹசீனாவின் அடக்குமுறை மனிதகுலத்திற்கு எதிரானது – ஐ.நா
பங்களாயுதேஷில் கடந்த வருடம் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் 1,400 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் ஒரு மிருகத்தனமான எதிர்வினையை நடத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சமமாக இருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரச எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வன்முறையில் அடக்குவதற்கான ஒரு அதிகாரப்பூர்வ கொள்கையை அவர்கள் கண்டறிந்ததாகவும் வெகுசன எதிர்ப்பை எதிர்கொண்டு அதிகாரத்தில் இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

The post ஷேக் ஹசீனாவின் அடக்குமுறை மனிதகுலத்திற்கு எதிரானது –  ஐ.நா appeared first on Oruvan.com.