cricket Archives - Oruvan.com

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா இராஜினாமா
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

இன்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, பொறுப்புவாய்ந்த தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இந்தப் பதவியை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகம் குறித்து கிரிக்கெட் இரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்தது.

இந்த நிலையில் அவரை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்காலத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் தமது பதவிகளை துறந்துள்ளனர்.

The post ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா இராஜினாமா appeared first on Oruvan.com.

தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு
சட்​டசபைத் தேர்​தலை முன்​னிட்டு சென்​னை​யில் சூப்​பர் கிங்ஸ் அணி​ பங்​கேற்​கும் இரு ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளை​யும் வேறு திகதி​களுக்கு மாற்​றக்​கோரி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காளர் டி.பிர​பாகரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்கல் செய்​துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,

“தமிழகத்​தில் சட்​டசபைத் தேர்​தல் எதிர்வரும் ஏப்​ரல் 23 ஆம் திகதி அன்று நடை​பெறவுள்​ளது. தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் மார்ச் 30 ஆம் திகதி தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் ஏப்ரல் 4 மற்​றும் ஏப்​ரல் 11 ஆம் திகதி​களில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி பங்​கேற்​கும் கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெறவுள்​ளது.

தேர்​தல் நேரத்​தில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெறவுள்ள போட்​டிகளை வேறு திபதிக்கு மாற்ற உத்​தர​விட வேண்​டும்.

சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி பங்​கேற்​கும் போட்​டிகளை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​திக் கொள்ள ஐபிஎல் நிர்​வாகத்​துக்கு அறி​வுறுத்த வேண்​டும்.

சேப்​பாக்​கத்​தில் கிரிக்​கெட் போட்டி நடத்​தப்​பட்​டால் கிரிக்​கெட் போட்​டியைக் காண வரும் இரசிகர்​களுக்​கும், கிரிக்​கெட் வீரர்​களுக்​கும் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டிய கட்​டா​யம் பொலிஸாருக்கு ஏற்​படும்.

ஐபிஎல் போட்​டிகளின் போது கிரிக்​கெட் இரசிகர்​கள் என்ற போர்​வை​யில் மைதானத்​துக்​குள் தங்​களது சின்​னத்​துடன் கட்சியினர் பிர​ச்சா​ரம் செய்​வர் என்​ப​தால் தேவையற்ற சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படும்.

எனவே, ஏப்ரல் 04 மற்​றும் ஏப்​ரல் 11 ஆம் திகதி​களில் நடை​பெறவுள்ள கிரிக்​கெட் போட்​டிகளை தமிழகத்​தில் தேர்​தல் முடிந்த பிறகு நடத்​திக் கொள்​ளு​மாறு போட்டி ஏற்​பாட்​டாளர்​களை அறி​வுறுத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்.

ஒரு​வேளை கிரிக்​கெட் போட்​டிகளுக்​கான திகதி​களை மாற்ற முடி​யாது எனக் கூறி​னால் தேர்​தல் நடத்தை விதி​களை கடுமை​யாக அமுல்​படுத்​த​வும், அரசி​யல் கட்​சிகளின் சின்​னங்​கள், கொடிகள் என எதை​யும் மைதானத்​துக்​கு உள்​ளே​யும், வெளி​யே​யும் காட்​சிப்​படுத்த அனு​ம​திக்​கக் கூடாது என ஐபிஎல் நிர்​வாத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு appeared first on Oruvan.com.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானுடன் போட்டியில் ஈடுபட இந்தியாவில் கடும் எதிர்ப்பு
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 06 வது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

டுபாயில் இடம்பெறவுள்ள இந்த போட்டிஇலங்கை நேரப்படி இரவு 07 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிராக இறுதியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளில் இந்தியா 13 போட்டிகளிலும்

பாகிஸ்தான் 03 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் உறவில்

மேலும் விரிசல் ஏற்பட்ட நிலையில் இந்த போட்டி இரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பாகிஸ்தானுடன் இந்தியா, கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

The post ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானுடன் போட்டியில் ஈடுபட இந்தியாவில் கடும் எதிர்ப்பு appeared first on Oruvan.com.

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 05 வது போட்டி இன்று – இலங்கை மற்றும் பங்களாதேஷ் பலப்பரீட்சை
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி அபுதாபியில் இன்று இரவு 08 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.

இதனிடையே, ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 93 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய நான்காவது போட்டியில் பாகிஸ்தான், மற்றும் ஓமான் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் Mohammad Haris 66 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து 161 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஓமான் அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணி சார்பில் Hammad Mirza 22 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் Saim Ayub, Sufiyan Muqeem மற்றும் Faheem Ashraf ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

The post ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 05 வது போட்டி இன்று – இலங்கை மற்றும் பங்களாதேஷ் பலப்பரீட்சை appeared first on Oruvan.com.

2026 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – வெளியான விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி முதல் மார்ச் 08 ஆம் திகதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இணைந்து குறித்த தொடரை நடத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு மாதம் நீடிக்கும் இந்த தொடரானது இந்தியாவிலுள்ள 05 மைதானங்களிலும், இலங்கையிலுள்ள 02 மைதானங்களிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் தொடரின் இறுதிப் போட்டி அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post 2026 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – வெளியான விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

பாக்கெட்டில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி வீரர் – வைரலாகும் காணொளி
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நடந்த ஒரு அரிய சம்பவத்தின் வீடியோ தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக உள்ளது.

மைதானத்தில் மக்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளை பைகளிலோ அல்லது கைகளில் வைத்துக் கொண்டோ கிரிக்கெட் பார்வையிடுவதை காணமுடியும்.

ஆனால் தொழில்முறை கிரிக்கெட் விளையாடும் வீரர்களால் அவ்வாறு கையடக்க தொலைபேசிகளை வைத்துக்கொண்டு விளையாட முடியாது.

இந்நிலையில், ​​கவுண்டி கிரிக்கெட்டில் ஓட்டம் எடுக்க ஓடும்போது ஒரு துடுப்பாட்ட வீரரின் பாக்கெட்டிலிருந்து ஸ்மார்ட்போன் மைதானத்தில் விழும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற லங்காஷயர்-குளூசெஸ்டர்ஷயர் போட்டியின் போது நடந்தது. லங்காஷயர் வீரர் டாம் பெய்லி ஓட்டங்கள் எடுக்க முயன்றபோது அவரது பாக்கெட்டிலிருந்து ஸ்மார்ட்போன் மைதானத்தில் விழுந்தது.

இந்த சம்பவம் போட்டியின் 114வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. இதை முதலில் கவனிப்பவர்கள் வர்ணனையாளர்கள்தான். “அவரது பாக்கெட்டிலிருந்து ஏதோ விழுந்துவிட்டது, அது ஒரு மொபைல் போன் போல் தெரிகிறது” என்று ஒரு வர்ணனையாளர் கூறினார்.

மற்றொரு வர்ணனையாளர் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார். இந்தப் போட்டியில் பெய்லி 31 பந்துகளில் 22 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post பாக்கெட்டில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி வீரர் – வைரலாகும் காணொளி appeared first on Oruvan.com.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று
2025 ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 53 மற்றும் 54 ஆவது போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

கொல்கத்தா – ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 03.30 இற்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.

இதேவேளை மற்றுமொரு போட்டி ஹிமாச்சல் – தர்மசாலாவில் இரவு 07.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.

The post இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று appeared first on Oruvan.com.