covid Archives - Oruvan.com

இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் இருவர் உயிரிழப்பு
நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் – 19 நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இதனை தெரிவித்துள்ளார்.

“வைராலஜி நிறுவனத்தின்படி, இலங்கையில் சுவாச நோயாளிகளில் ஒன்பது வீதம் முதல் 13 வீதம் வரை தற்போது புதிய கோவிட் – 19 வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோவிட் தொற்று மிகக் குறைந்த தீவிர நிலையில் உள்ளது. தீங்கு விளைவிக்கும் விளைவுகள் மிகக் குறைவாகவே உள்ளது.

எனினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு, இது தீவிரமாக இருக்கலாம். அத்தகையவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இலங்கையில் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்த இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அதைத் தவிர, தற்போது எங்களுக்கு ஒரு தீவிரமான நிலை இல்லாததால் தேவையில்லாமல் அச்சமடையத் தேவையில்லை.” என தெரிவித்துள்ளார்.

The post இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் இருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

கொவிட் தொற்று – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் இரண்டு புதிய ஒமிக்ரோன் துணை வகைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கண்காணிப்பு நடவடிக்கைளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

கொவிட் தொற்றால் எந்தவொரு அதிகரிப்பும் பதிவாகாத போதிலும் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு

நோயெதிர்ப்பு நிபுணர் பேராசிரியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.

முகமூடி அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் தொற்றின் அதிகரிப்பைக் கையாள்வதற்கு நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் தயாராக உள்ளதென சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிலைமை மோசமடைந்தால் போதியளவான தனிமைப்படுத்தல் பிரிவுகள், மருத்துவ பொருட்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குழந்தைகள் மத்தியில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் வைத்தியர் தீபல் பெரேரா தெரிவித்தார்.

சீரற்ற வானிலை காரணமாக நுளம்புகளால் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

The post கொவிட் தொற்று –  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.

புதிய கொவிட் திரிபை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது – அமைச்சர் நளிந்த
அண்டைய நாடான இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் புதிய COVID-19 திரிபின் தோற்றத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

குறிப்பாக விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் கொரானா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தில் நாம் அனுபவித்தது போன்ற நெருக்கடிக்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை, ஆனால் விமான நிலையத்தில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார மற்றும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் நுழைவதற்கான ஆபத்தை குறைக்க நாட்டிற்குவருகைத் தரும் பயணிகளை தீவிரமாக பரிசோதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

The post புதிய கொவிட் திரிபை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது –  அமைச்சர் நளிந்த appeared first on Oruvan.com.

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று
இந்தியாவில் கொவிட்- 19 தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி 257 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின்

எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

கொவிட் தோற்றால் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 மாறுபாடுகளான என்பி.1.8.1 (NB.1.8.1) மற்றும் எல்எப்.7 (LF.7) ஆகியவை அண்மையில் இந்தியாவில் கண்டறியப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் என்பி.1.8.1 மாறுபாட்டால் ஒருவர் பாதிக்கப்பட்டார். இதேவேளை, மே மாதத்தில் எல்எப்.7 மாறுபாட்டால்

நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று appeared first on Oruvan.com.

மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா
இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிராவில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஜனவரி முதல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 106 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இவற்றில் 101 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் புனே, தானே மற்றும் கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

எவ்வாறாயினும் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்தியசுகாதார துறை அதிகாரிகள்

தெரிவித்துள்ளனர்.

The post மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா appeared first on Oruvan.com.