Court Archives - Oruvan.com

அர்ச்சுனா எம்.பிக்கு பிணை
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.

அதேவேளை அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில், கடந்த 25ம் திகதி குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

அதனை அடுத்து, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அர்ச்சுனா இராமநாதனை அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அர்ச்சுனாவை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து அர்ச்சுனா இராமநாதனை ஐந்து இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில், 20 ஆயிரம் ரூபா பெறுமதியான காசு பிணையிலும் செல்ல அனுமதித்த மன்று, எதிர் தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் போக கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.

அதேவேளை , அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என குற்றம் சாட்டப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் அவரும் மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

The post அர்ச்சுனா எம்.பிக்கு பிணை appeared first on Oruvan.com.

ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவுகளை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று பிறப்பித்தார்.

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த உத்தரவை அறிவிக்குமானு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபர்கள் நாட்டிற்குள் வந்தவுடன் அவர்களைக் கைது செய்யவும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்குத் தகவல் தெரிவிக்கவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

The post ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை appeared first on Oruvan.com.

ஹேமசிறி, பூஜித்தவுக்கு எதிரான வழக்கில் பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க நீதிமன்றம் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.  சாட்சியங்களை எதிர்வரும் 26 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, பிரதிவாதிகளான ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகினர் .

இதேநேரம்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றவில்லை எனவும் சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.  கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .

சுரேஷ் சலே 2016 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறியதுடன், மீண்டும் 2018 டிசம்பர் மாதத்திலேயே நாட்டுக்கு  திரும்பினார்  என்றும்   2019 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், அவர் இந்தியாவில் உள்ள பாதுகாப்புப் படைகளின் பதவி நிலை கல்லூரியில்  இராணுவப் பயிற்சியினைப் பெற்றுக்  கொண்டிருந்தார என்றும் சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம  குறிப்பிட்டுளளார் .

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரே சுரேஷ் சலே மீண்டும் இலங்கை திரும்பினார் எனவும்  அதன் பின்னரே அவர் அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார் எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று முடிந்த பின்னரே அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் எனவும்  சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம இதன்  போது சுட்டிக்காட்டியுள்ளார் .

The post ஹேமசிறி, பூஜித்தவுக்கு எதிரான வழக்கில் பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க  நீதிமன்றம்  உத்தரவு appeared first on Oruvan.com.

நாமலுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மீளவும் விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி குறித்த வழக்கை மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்குத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.

The post நாமலுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு appeared first on Oruvan.com.

சமன் ஏக்கநாயக்க பிணையில் விடுதலை!
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, சந்தேக நபரை தலா இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டார்.

சமன் ஏக்கநாயக்கவின் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

விசாரணையை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இந்தக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்தார்.

இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (18) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரிட்டனுக்கு தனிப்பட்ட விஜயத்திற்கான நிதியை அங்கீகரித்து அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்கு உதவியதாக சந்தேகத்தின் சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சமன் ஏக்கநாயக்க பிணையில் விடுதலை! appeared first on Oruvan.com.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை வழக்கு – 12 பேருக்கு மரண தண்டனை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு பேருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 23 பேர் இந்த வழக்கிலிருந்து நிரபராதிகளாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை அறிவித்தது.

இந்த வழக்கில் 41 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 2022ஆம் ஆண்டு மே ஒன்பதாம் திகதி நிட்டம்புவ பகுதியில் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர்களைத் தாக்கி கொலைசெய்யப்பட்டிருந்தார்.

The post முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை வழக்கு – 12 பேருக்கு மரண தண்டனை appeared first on Oruvan.com.

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (11) அறிவிக்கப்பட உள்ளது.

கம்பஹா உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 13ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டவிருந்த நிலையில், ​​தீர்ப்பு அறிவிப்பு இன்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 2022ஆம் ஆண்டு மே ஒன்பதாம் திகதி நிட்டம்புவ பகுதியில் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர்களைத் தாக்கி கொலை செய்ததாக 42 பேர் மீது சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

The post அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் இன்று தீர்ப்பு appeared first on Oruvan.com.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.

திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாகக் கூறி கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திருகோணமலை, கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், வணக்கத்துக்குரிய சுகிதவன்ச திஸ்ஸ தேரர் மற்றும் வணக்கத்துக்குரிய நந்த தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

The post திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

சமல் ராஜபக்ஷவின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் ஷமிந்திர ராஜபக்ஷவை மூன்றாவது சந்தேகநபராக பெயரிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சமல் ராஜபக்ஷவின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு appeared first on Oruvan.com.

சமன் ஏக்கநாயக்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தில் லண்டன் பயணங்களுக்காக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

இன்று இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை பெப்ரவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு, மார்ச் மாதத்தில் அவருக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

The post சமன் ஏக்கநாயக்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு appeared first on Oruvan.com.