Court News Archives - Oruvan.com

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுதலை
கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் இன்று காலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

The post அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுதலை appeared first on Oruvan.com.

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் – 55 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி காயமடைந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாற , வைத்தியசாலைக்குள் உள்ள அவசர சிகிசிச்சை பிரிவு வரையில் அத்துமீறி நுழைந்த நபர், அங்கு கடமையில் இருந்த உத்தியோகஸ்தர்களுடன் தர்க்கம் புரிந்து, மேசையில் இருந்த பிரிண்டர் ஒன்றினை உடைந்து சேதமாக்கியும் இருந்தார்.

இது தொடர்பிலான கண்காணிப்பு கேமராக்களின் காணொளிகளும் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி இருந்து.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று, தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த வழக்கில் அவரை குற்றவாளியாக கண்ட மன்று, வைத்தியசாலை உபகரணங்களுக்கு சேதமேற்படுத்தியமைக்காக வைத்தியசாலைக்கு 55 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மன்று உத்தரவிட்டது.

The post யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் – 55 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவு appeared first on Oruvan.com.

யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி
கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் யாழ்ப்பாணம் வருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து நியாயமான காரணங்களுடன் சத்தியக் கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று புதன் கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கோட்டாபய ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக நிகழ்நிலை ஊடாகத் தோன்றி சாட்சியம் அளிக்க விண்ணப்பம் செய்தார்.

இந்த விண்ணப்பத்தை அடுத்து, நீதவான், யாழ்ப்பாணம் வருகை தருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்ன? என்பதனைத் தெளிவுபடுத்தும் சத்தியக் கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2011 டிசம்பர் 10 அன்று யாழ்ப்பாணத்தில் நடத்தவிருந்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த லலித் மற்றும் குகன், அதற்கு முதல் நாள் ஆவரங்கால் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்களின் உறவினர்கள் 2012இல் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இந்தச் சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரிக்கும் பணி 2012 செப்டெம்பர் 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆரம்பமானது.

2017ஆம் ஆண்டு இந்த வழக்கின் சாட்சியாளர்கள் பட்டியலில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு நீதிமன்று அவருக்கு உத்தரவிட்டது.

எனினும், பாதுகாப்புக் காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி appeared first on Oruvan.com.