countries Archives - Oruvan.com

ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று சனிக்கிழமை 03 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார்.

அவர் 2 ஆவது முறை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

ட்ரம்ப் முதலில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்கிறார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

இதன்போது மலேசியா, தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா மற்றும் ட்ரம்ப் இடையே சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய பயணத்துக்கு பின்னர் ட்ரம்ப் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதன்பின்னர் ட்ரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்.

இதன்போது பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜின்பிங்கை ட்ரம்ப் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைகாலமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் இடம்பெற்று வருகிறது. நவம்பர் முதலாம் திகதி முதல் சீனா மீதான வரியை 155 சதவீதமாக அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் ட்ரம்ப் மற்றும் ஜின்பிங் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

The post ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்த ட்ரம்ப் appeared first on Oruvan.com.

இந்தியாவின் மிகப்பெரிய எதிரி ஏனைய நாடுகளை சார்ந்திருப்பது – மோடி
இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகில் எமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை என தெரிவித்தார்.

குஜராத்தின் பாவ்நகரில் 34,200 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை இன்று ஆரம்பித்து வைத்து கருத்துரைத்த போதே பிரதமர் மோடி, இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்துரைத்த அவர்,

“நமது மிகப்பெரிய எதிரி ஏனைய நாடுகளைச் சார்ந்திருப்பது தான். வெளிநாட்டு சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு நாட்டின் தோல்வியும் அதிகமாகும்.

நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால் நமது சுயமரியாதை பாதிக்கப்படும். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது.

நாட்டின் வளர்ச்சிக்கான தீர்மானத்தை மற்றவர்களைச் சார்ந்து இருக்க விட்டுவிட முடியாது. இந்த சார்பு எதிரியை நாம் ஒன்றாக தோற்கடிக்க வேண்டும்.

இதற்கு சுயசார்பு இந்தியாதான் ஒரே தீர்வு.

இந்தியாவில் ஆற்றலுக்கு பஞ்சமில்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியர்களின் அனைத்து ஆற்றலையும் காங்கிரஸ் புறக்கணித்தது. இதனால் சுதந்திரம் அடைந்து 06 முதல் 07 தசாப்தங்களுக்குப் பிறகும் இந்தியா அதற்கு தேவையான வெற்றியை அடையவில்லை.

காங்கிரஸ் அரசின் கொள்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்தன” என்றார்.

The post இந்தியாவின் மிகப்பெரிய எதிரி ஏனைய நாடுகளை சார்ந்திருப்பது – மோடி appeared first on Oruvan.com.

கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் – அரபு நாடுகள் அவசர ஆலோசனை
காசாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தீர்மானித்துள்ளன.

கடந்த வாரம் கட்டார் நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது

இந்நிலையில் கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கட்டார் அழைப்பு விடுத்தது.

இதன்படி அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாடு கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று நடைபெற்றது.

இதன்போது கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, துருக்கி அதிபர் எர்டோகன், பலஸ்தீன ஜனாதிபதி மக்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

The post கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் – அரபு நாடுகள் அவசர ஆலோசனை appeared first on Oruvan.com.

பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று ஆரம்பமான 25 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

பயங்கரவாதம் என்பது எந்வொரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தல் ஆகும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பும் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா அனுபவித்து வருவதாகவும் அண்மையில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பாக எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதை நாம் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும் என்றும்

அவர் வலியுறுத்தியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும், நபருக்கும் வெளிப்படையான சவாலாக இருந்தென்றும் பிரதமர் மோடி

சுட்டிக்காட்டினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்
2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில தரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீ.என்.ட்ரெவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் சுற்றுலாப் பயணிகள் பயணிப்பதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

வெப்பநிலை, இயற்கை அழகுகள், கடற்கரைகள் உள்ளிட்டவற்றை இரசிப்பதற்காக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் முதலாம் இடத்திலும், இத்தாலி இரண்டாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது.

The post சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம் appeared first on Oruvan.com.