continue Archives - Oruvan.com

தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்யும் தங்கத்தின் விலை
தமிழகத்தின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபா உயர்வடைந்துள்ளது.

இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை 79 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இன்று 22 கரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு 70 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் தங்கம் 9,865 ரூபாவுக்கும் பவுனுக்கு 560 ரூபா உயர்வடைந்து ஒரு பவுன் தங்கம் 78,920 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 136 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,36,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.

கடந்த 26 ஆம் திகதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு, அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது.

தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 09 நாட்களில் பவுனுக்கு

4,000 ரூபாவுக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது.

The post தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்யும் தங்கத்தின் விலை appeared first on Oruvan.com.

நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மீனவர்களுக்கு ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான 04 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

The post நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

பணியாளர்கள் பற்றாக்குறையால் தொடரும் ரயில் தாமதங்கள்
புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட புகையிரதத்தின் பிரதான பிரிவுகளில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் ரயில் தாமதங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பணியாளர்கள் பற்றாக்குறையாலும், ரயில் இயந்திரங்கள் கிடைக்காததாலும் நாளொன்றுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்ய வேண்டியுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தினமும் 390 ரயில்கள் இயக்கப்பட வேண்டியிருந்தாலும், இந்த பற்றாக்குறையால், 346 ரயில்களுக்கு மட்டுமே ரயில் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது 150 ரயில் ஓட்டுனர்கள், 120 கட்டுப்பாட்டாளர்கள், 600 தொழிநுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக கூறப்படுகிறது.

பணியாளர்கள் பற்றாக்குறையால் இயந்திர பராமரிப்பு பணி தாமதமாகி வருவதாகவும், பராமரிப்பு பணிக்காக தற்போது 30-40 இயந்திரங்கள் பராமரிப்பு பிரிவுகளில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நிலவும் பணியாளர் பற்றாக்குறை குறித்து அரசாங்கத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

The post பணியாளர்கள் பற்றாக்குறையால் தொடரும் ரயில் தாமதங்கள் appeared first on Oruvan.com.

அரிசித் தட்டுப்பாடு – நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள்
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை குறைந்துள்ளதோடு, சில பிரதேசங்களில் நெல் விலையும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் 5,200 மெட்றிக் டொன் நாட்டரிசியை இறக்குமதியின் முதல் தொகுதி இம்மாதம் 19ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.+

The post அரிசித் தட்டுப்பாடு – நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள் appeared first on Oruvan.com.

சிரியா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்
இஸ்ரேலிய தரைப்படைகள் சிரிய கோலன் குன்றுகளுக்குள் ஆழமாக நகர்ந்து, தங்கள் ஆக்கிரமிப்பை திறம்பட விரிவுபடுத்துவதால்,

இஸ்ரேலின் விமானப்படை சிரியாவைத் தாக்கி, லடாக்கியா மற்றும் டார்டஸில் உள்ள துறைமுகங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகள் மீது தாக்குதல் தாக்குதல்களை மேற்கொள்கிறது.

துருக்கிய ஆதரவுப் படைகளுக்கும் குர்திஷ் படைகளுக்கும் இடையிலான மோதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள வடகிழக்கு சிரியாவில் மோசமான நிலைமைகள் குறித்து உரிமைக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வடக்கு லடாக்கியாவில் உள்ள கர்தாஹா நகரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷரின் தந்தை ஹபீஸ் அல்-அசாத்தின் கல்லறையை சிரிய போராளிகள் எரித்தனர்.

அல்-அசாத்தை வெளியேற்ற கிளர்ச்சிப் படைகளின் தலைவரான அஹ்மத் அல்-ஷாரா, முன்னாள் ஆட்சியின் மோசமான சிறைச்சாலைகளை மூடுவதற்கும்,

சர்வதேச பங்காளர்களின் உதவியுடன் இரசாயன ஆயுத தளங்களை பாதுகாப்பததாவும் உறுதியளித்துள்ளார்.

சிரியாவின் இடைக்கால பிரதமர் முகமது அல்-பஷீர், “வெளிநாட்டில் உள்ள மில்லியன் கணக்கான சிரிய அகதிகளை மீண்டும் கொண்டு வருவதே” தனது முதல் குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.

The post சிரியா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் appeared first on Oruvan.com.