Consumer Affairs Authority to conduct nighttime inspections Archives - Oruvan.com

இரவு நேர சோதனைகளை மேற்கொள்ளும் நுகர்வோர் விவகார அதிகாரசபை
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கைது செய்வதற்காக இரவு நேர சோதனைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மாலை 5 மணிக்குப் பிறகு சோதனைகளுக்கு வருவதில்லை என்பதால், மோசடி வியாபாரிகள் மாலை 5 மணிக்குப் பிறகுதான் அரிசியை விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

விவசாயிகள் மற்றும் நுகர்வோரைப் பாதுகாக்க சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்றும், அரிசியின் கட்டுப்பாட்டு விலை எந்த வகையிலும் அதிகரிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

விவசாய அமைச்சில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே நாமல் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

The post இரவு நேர சோதனைகளை மேற்கொள்ளும் நுகர்வோர் விவகார அதிகாரசபை appeared first on Oruvan.com.