Compensation Archives - Oruvan.com

டிட்வா இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
டிட்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளர்களுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

டிட்வா புயலினால் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

முழுமையாக சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்குப் புதிய வீடொன்றை வழங்குவது அல்லது வீடொன்றை கொள்வனவு

செய்வதற்காக 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அந்த இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தற்போதும் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு, புதிய வீடுகள் கிடைக்கும் வரை அவர்களைத் தற்காலிக வீடுகளில் குடியமர்த்துவது தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதற்கேற்ற பொருத்தமான இடங்களைக் கண்டறிந்து, அந்தப் பணிகளை மிக விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மிக ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புதிய வீடு வாங்குவதற்கு இழப்பீடு பெறாதவர்களுக்காக வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

The post டிட்வா இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை appeared first on Oruvan.com.

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் சுற்றுலா சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது

The post எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு appeared first on Oruvan.com.

சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேரிடர் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு 2.5 மில்லியன் ரூபாவும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு சேதத்தின் அளவிற்கேற்ப இழப்பீடு வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக தெரிவித்தார்.

பேரிடர் காரணமாக உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பேரிடரால் ஊனமுற்ற ஒருவருக்கு 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா இழப்பீடு
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 245 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு இன்று புதன்கிழமை (27.02.2025) அறிவித்தார்.

தகவல் கிடைத்தும் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய இழப்பீடு செலுத்தப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வழக்கு தொடர்பான 12 மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தாக்குதல்களைத் தடுப்பதில் சில அதிகாரிகளின் அசமந்த போக்கிற்கு

அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

The post உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் –  பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா இழப்பீடு appeared first on Oruvan.com.

அரசாங்கத்திடமிருந்து பாரிய இழப்பீட்டுத் தொகையை பெற்ற எம்.பிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அரகலய போராட்ட காலத்தில் தமது சொத்து சேதமடைந்ததாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் இழப்பீடுகளை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், குறித்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும்” என்றார்.

The post அரசாங்கத்திடமிருந்து பாரிய இழப்பீட்டுத் தொகையை பெற்ற எம்.பிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on Oruvan.com.

சிறுபோகத்திற்கான நட்டஈடு கொடுப்பனவுகள் 90 வீதம் பூர்த்தி
2024 ஆம் ஆண்டு சிறுபோகத்திற்கான நட்டஈடு கொடுப்பனவுகள் 90 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6,459 விவசாயிகளுக்கு 5,246 ஏக்கருக்கு 100 மில்லியன் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் இழப்புக்களுக்கு நட்டஈடு கோரியும் கொடுப்பனவு கிடைக்காத விவசாயிகள் இருப்பின் மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாத மாவட்டங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் எனவும் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

The post சிறுபோகத்திற்கான நட்டஈடு கொடுப்பனவுகள் 90 வீதம் பூர்த்தி appeared first on Oruvan.com.

சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகள் ஜனவரியில் வழங்கப்படும்
வெள்ளம்,வறட்சி மற்றும் காட்டு யானைகளினால் சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் நெல் உட்பட பயிர்ச்செய்கைகளுக்கு வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 80 சதவீத விவசாயிகளுக்கு சுமார் 80 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் இழப்பீடுகள் ஜனவரி 5 ஆம் திகதிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரும்போகத்திற்கான இழப்பீடு 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகள் ஜனவரியில் வழங்கப்படும் appeared first on Oruvan.com.