Commissioner Archives - Oruvan.com

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட இருவருக்குப் பிணை
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் மற்றும் திணைக்களத்தின் இரண்டு உதவி முகாமையாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்கவின் உத்தியோகபூர்வ அறையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தங்கள் கட்சிக்காரர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிவானிடம் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதவானிடம் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்டு, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதோடு, அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார் .

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

The post மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட இருவருக்குப் பிணை appeared first on Oruvan.com.

மதுவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம்
மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் எம்.பீ.என்.ஏ. பேமரத்னவை நியமிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் சேவையாற்றும் இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் விசேட தர அலுவலர் யு.எல்.உதயகுமார பெரேராவுக்கு 10 ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியடைவதால் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

The post மதுவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் appeared first on Oruvan.com.

முன்னாள் மோட்டார் வாகன ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 08 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாத மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாக

பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்க தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்தமை தொடர்பான சந்தேகத்தின்

பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக 177 வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, சட்டத்திற்கு முரணாக பதிவு செய்யப்பட்டுள்ளமை

விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

The post முன்னாள் மோட்டார் வாகன ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் இடையே சந்திப்பு
இலங்கைக்கான தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் எட்வின் ஷால்க், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துள்ளார்.

​​இலங்கை தென்னாப்பிரிக்காவுடன் 1994 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது என்றும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட

துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார்.

தென்னாப்பிரிக்காவின் நல்லிணக்க பொறிமுறையானது அமைதியின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை உயர்ஸ்தானிகர் விளக்கினார், இவை நல்லிணக்க வழிமுறைகளை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டவை என்றும், அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை-தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை மீண்டும் நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

மேலும், தென்னாப்பிரிக்க உயர் ஸ்தானிகருக்கும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கும் இடையிலான சுமுகமான கலந்துரையாடலின் போது, ​​பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவும் பங்கேற்றார்.

The post தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நீதிமன்றில் முன்னிலை
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை முன்னிலையாகியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார்.

அவரை நேற்று செவ்வாய்க்கிழமை, புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து

நேற்று முன்தினம் (09) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரையும் இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.

The post பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நீதிமன்றில் முன்னிலை appeared first on Oruvan.com.

ஜனாதிபதி பொது மன்னிப்பு விவகாரம் – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு விளக்கமறியல்
பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளை புதன்கிழமை வரை (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று செவ்வாய்க்கிழமை, புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து

நேற்று (09) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.

The post ஜனாதிபதி பொது மன்னிப்பு விவகாரம் – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

The post பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமனம் appeared first on Oruvan.com.

மஹிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

கொழும்பில் உள்ள விஜேராம இல்லத்தில் இன்று புதன்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மரியாதை நிமித்தம் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இதன்போது கலந்து கொண்டார்.

The post மஹிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் appeared first on Oruvan.com.