Commissioner General of Examinations Archives - Oruvan.com

சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு
சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைகள் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றும், நாளையும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பரீட்சைக்கான புதிய திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர், பரீட்சை ஒருங்கிணைப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களின் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நீடித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

புலமைப் பரிசில் பரீட்சை – கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை
வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாறு படைத்திருப்பதாக பாடசாலையின் அதிபர் யு. எம்.எம். அமீர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு அமைய இன்றைய தினம் (04) பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்தன.

இப்பரீட்சையில் இலங்கை முழுவதும் 303670 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதில் வெளியிடப்பட்ட மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகளைக் கடந்து 51969 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய புத்தள மாவட்டத்தின் வெட்டுப்புள்ளியாக 131 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்க கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையினை பிரதிநிதித்துவம் செய்து பரீட்சைக்கு முகம் கொடுத்த மாணவர்களில் 17 மாணவர்கள் வெட்டுப்புள்ளியினைக் கடந்து சித்தியடைந்து வரலாறு படைத்தனர்.

இது குறித்து கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் யு.எம்.எம். அமீர் கருத்து வெளியிடுகையில், “இன்று வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 17 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

மேலும் கல்வி அமைச்சின் அடைவு மட்டமாக கனிக்கப்படுகின்ற 70 புள்ளிகளுக்கும் மேல் பெற்ற மாணவர்களை பார்க்கையில் 74 % ஆகும்.

எனவே இவ்வரலாாற்றுச் சாதனை புரிந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த அன்பான மாணவர்களைப் பாராட்டுவதோடு அதற்காக இரவு பகலாக உழைத்த எம்.ஏ. ரஷீயா நஸீம், பி. பாஹிமா, எம்.பி. முஹ்ஸினா பர்வின் ஆகிய வகுப்பாசிரியர்களுக்கும் அதே போன்று இதற்காக பங்களிப்புச் செய்த ஏனைய ஆசிரியர்களுக்கும் வெளி வளவாளர்களாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் இவ் வரலாற்றுச் சாதனையின் பின்னால் விடா முயற்சியுடன் செயற்பட்ட பிரதி அதிபர்களானஎஸ்.எப். சாஜினாஸ் மற்றும் எம்.என்.எம். நஸ்ரின் ஆகியோருக்கும், ஆரம்பப் பிரிவின் பகுதித் தலைவர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்களுக்கும் ( SDEC ), பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்களுக்கும் ( PPA ) இவை அனைத்திற்கும் மேலாக பல்வேறு சவால்களைத் தாண்டி இச்சாதனையை பெற்றுக் கொடுத்த பாடசாலை சமூகம் சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.” என்றார்.

(அரபாத் பஹர்தீன்)

The post புலமைப் பரிசில் பரீட்சை – கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை appeared first on Oruvan.com.

புலமை பரிசில் பரீட்சை – 184 புள்ளிகளை பெற்று நோர்வூட் மாணவன் சாதனை
2025ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் ஹட்டன் கல்வி வலையம் கோட்டம் இரண்டிற்குட்பட்ட நோர்வூட் ஆரம்ப பிரிவு தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த சுரேஸ் தரின் கெளசான் வெட்டு புள்ளிகளுக்கு அதிகமாக 184 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவனுக்கு பாடசாலை அதிபர் ஆர்.யோகராஜ் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அப்பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் பாரட்டு தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பாடசாலையில் வெட்டுபுள்ளிகளுக்கு மேலாக வினோதன் மோனிஸ் 142, திலகர்மணி லக்சின் 136, மணிகண்டன் தேனுஸ் 151, விஸ்வராஜா லயோதிகன் 151, தொண்டமான் கேசோரி 152, பிரதீப் ரிஸ்மி 138, ரெங்கநாதன் ஹரித்ரவதனா 152, ஹய்தா அப்துல் சமித் 140, விஸ்வநாத் மகிஷனா 135, ஞானகுமார் அவந்திகா 155, யதீஸ்குமார் அலைனா கேசி 153, கலைவானன் லக்ஸனியா 134, லிங்கநாதன் ஜேசுவரன் ஹோலினா பிரேவ் 138, நெவில் பேணரான்டோ ரொஸ்சின் ஜெசிகா 152, கனகராஜா கபிஸ்கா 133, ஞானகுமார் ஆத்மிக்கா142, லிங்கேஸ்வரன் யசிக்கா 151, சிமியோன் பிரவினா 132, பேசில் பெசில்சந்ரகாசன் அனலியா பிரதிக்ஸா 151, பிரபாகரன் சேஸ்வன் 133,  கார்த்திகேசன் கெஸ்மீரா ஜொய்சி 141, சந்திரகுமார் தினுசியானி 135, திருச்செல்வம் சஸ்விதா 139 ஆகிய மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த உள்ளனர்.

இதேவேளை நோர்வூட் ஆரம்பபிரிவு பாடசாலையில் கடந்த ஐந்த வருடங்களாக புலமை பரீசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றாலும் அந்த மாணவர்களுக்கென நிலையான கட்டிடம் ஒன்று இல்லையென பெற்றோர்கள் சுற்றி காட்டுகின்றனர்.

குறித்த பாடசாலைக்கான காணி ஒதுக்கீடு மேற்கொண்டுள்ள போதிலும் தற்காலிக மண்டபம் ஒன்றில் இயங்கி வருவதோடு மேலதிகமாக தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் நான்கு வகுப்பறைகள் இயங்கி வருவதோடு நோர்வூட் ஆரம்பபிரிவு தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 400 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post புலமை பரிசில் பரீட்சை – 184 புள்ளிகளை பெற்று நோர்வூட் மாணவன் சாதனை appeared first on Oruvan.com.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் சாதனை
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றது.

நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 787 பரீட்சை நிலையங்களில் மொத்தமாக 3 இலட்சத்து 7 ஆயிரத்து 951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாணவன் ஆனந்தசோதி லக்சயன் 194 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும், யாழ் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் லதாநந்தினி சிவபாதம் தெரிவித்துள்ளார்.

The post தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் சாதனை appeared first on Oruvan.com.

புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் – தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம்
2025 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, சிங்கள மொழி மூலம் அதிக மதிப்பெண் பெற்றவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளாவிய ரீதியில் முதலிடம் பிடித்தவர் 198 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி இதனைத் தெரிவித்தார்.

இதே நேரத்தில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற்றவர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் 194 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் – தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம் appeared first on Oruvan.com.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு – மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியானது
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி மாவட்ட மட்டத்திலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் சிங்கள மொழிக்கு 140 ஆகவும், தமிழ் மொழிக்கு 134 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திற்கான சிங்கள மொழி வெட்டுப்புள்ளி 136 ஆகவும், தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 132 ஆகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான சிங்கள மொழி வெட்டுப்புள்ளி 135 ஆகவும், தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 132 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சிங்கள மொழி வெட்டுப்புள்ளி 134 ஆகவும், தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 132 ஆகவும், அம்பாறை, திருகோணமலை, புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிங்கள மொழி வெட்டுப்புள்ளி 133 ஆகவும், தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 131 ஆகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே, நுவரெலியா மாவட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 132 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிங்கள மொழி வெட்டுப்புள்ளி 127 ஆகவும், தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 132 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் சிங்கள மொழி மூல வெட்டுப்புள்ளி 127 ஆகவும், தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி 131 ஆகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி 132 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்றது, 308,026 பேர் பரீட்சைக்கு தோற்ற விண்ணப்பித்திருந்தனர்.

இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கு 303,670 மாணவர்கள் தோற்றியதாகவும், இதில் 51,969 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை கடந்துள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இல் பார்வையிடமுடியும்

பரீட்சைத் தேர்வர்களின் சரியான சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பார்வையிடமுடியும்.

மேலும் பரீட்சை முடிவுத் தாளைப் பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட நகலைப் பெறுவதற்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The post ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு – மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியானது appeared first on Oruvan.com.

இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி
இலங்கையின் பதினோறாவது பரீட்சைகள் ஆணையாளராக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாகப் பொறுப்பேற்றார்.

நாட்டின் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று(15) பரீட்சைகள் திணைக்கள வளாகத்தில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

நாட்டின் 11வது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஆவார், மேலும் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் 2005 தொகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

மேலும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, தேர்வுத் துறையின் ரகசியப் பள்ளித் தேர்வுக் கிளைக்குப் பொறுப்பான பரீட்சை ஆணையராகவும், நிர்வாகம் மற்றும் புலனாய்வுக் கிளைக்குப் பொறுப்பான பரீட்சை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் முதல்வர் பதவிகளையும் வகித்துள்ள புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், காலி சங்கமித்தா கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தில் முதல் பட்டம் பெற்ற திருமதி லியனகே, கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி முதுகலைப் பட்டத்தையும், களனி பல்கலைக்கழகத்தில் மொழியியலில் கலை முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி appeared first on Oruvan.com.