Chilaw Archives - Oruvan.com

அலட்சியத்தால் நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
நாடு முழுவதும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) கவலை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் பாதுகாப்பற்ற அல்லது பழக்கமில்லாத இடங்களில் குளிப்பதே என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

நேற்று (5) சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொடையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அதன் ஆழம் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமல் தண்ணீரில் இறங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே நான்கு பேர் இறந்தனர், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர்கள் 12 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸின் உயிர்காக்கும் பிரிவு, இலங்கை கடற்படை மற்றும் உள்ளூர்வாசிகளால் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அலட்சியத்தால் நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

சிலாபம் – கொழும்பு வீதியில் விபத்து – கான்ஸ்டபள் ஒருவர் பலி
சிலாபம் – கொழும்பு வீதியில் கார் ஒன்று மோதியதில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாரவில ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபள் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பொலிசார் சிலாபம் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, மோட்டார் வாகனத்தை செலுத்திய 22 வயதான பல்கலைக்கழக மாணவன் மற்றும் அதில் பயணித்த அவரின் தாய் மற்றும் பாட்டி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சிலாபம் – கொழும்பு வீதியில் விபத்து – கான்ஸ்டபள் ஒருவர் பலி appeared first on Oruvan.com.

பரிகார பூஜை செய்வதாக கூறி தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர் – சிலாபத்தில் சம்பவம்
தீய சக்திகளை விரட்ட பரிகார பூஜை செய்வதாக கூறி 3.8 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை எதிர்கொண்ட நபர் சிலாபம், முன்னேஸ்வரத்தில் வசிப்பவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் முதல் திகதி முன்னேஸ்வரம் கோவிலுக்கு அருகே சந்தித்த மூன்று பேரில் ஒருவர் தனக்கு ஜோதிடம் கூறியதாகவும் அந்த கணிப்பின்படி, தானும் தனது குழந்தைகளும் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொண்டதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்தார்.

ஆகையினால், அதிலிருந்து விடுபட ஒரு பூஜை செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த யோசனையின் அடிப்படையில், தான் சந்தித்த மூன்று பேரில் ஒருவரை மூன்றாம் திகதி தனது வீட்டிற்கு அழைத்து வந்து பூஜை நடத்தியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேகநபர் கூறியது போல், தனக்கும், தன் மனைவிக்கும், தன் குழந்தைகளுக்கும் சொந்தமான தங்க நகைகளை ஒரு பானையில் வைத்து, பூஜை நடத்துபவரிடம் கொடுத்துள்ளனர்.

சடங்கு செய்தவரின் அறிவுறுத்தல்களின்படி, முழு குடும்பத்தினரும் வீட்டின் முன் கற்பூரத்தை ஏற்றி தெய்வத்திற்கு காணிக்கை செலுத்தினர் என்றும், அந்த நபர் தங்க நகைகள் உள்ள பானையை பூஜை அறையில் வைக்குமாறும், நான்கு நாட்களுக்கு பானையைத் திறக்கக் கூடாது என்றும் வீட்டினரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

எனினும், சந்தேகத்தின் பேரில் நான்காம் திகதி காலை தங்க நகைகள் இருந்த பானையைத் திறந்தபோது, ​​அதில் எதுவும் இல்லை என்று புகார்தாரர் பொலிஸாரிடம் மேலும் கூறியுள்ளார்.

மேலும், தனது வீட்டிற்கு வந்து பூஜை செய்வதவர் இந்திய நாட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post பரிகார பூஜை செய்வதாக கூறி தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர் – சிலாபத்தில் சம்பவம் appeared first on Oruvan.com.

கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்து – 12 பேர் படுகாயம்
சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்து – 12 பேர் படுகாயம் appeared first on Oruvan.com.

சிலாபத்தில் பெருமளவான போதைப்பொளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
சிலாபத்தில் 247 கிலோ 946 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை

இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் காரில் செல்லப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 114 பொதிகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தையும் பறிமுதல் செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சிலாபத்தில் பெருமளவான போதைப்பொளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது appeared first on Oruvan.com.