Chennai Airport Archives - Oruvan.com

சென்னையில் பனிமூட்டம் – விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு
சென்னை உள்ளிட்ட புறநகரங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் நேரங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றது.

இதனால் சாரதிகள் உள்ளிட்ட பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை என ஏழு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஏழு விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் இயக்கம் குறித்து பயணிகள் அந்ததந்த நிறுவனங்களிடம் தெளிவாக அறிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடும் பனிமூட்டம் காரணமாக புறநகர் மின்சார ரயில்களின் வருகையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்தை விட கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காலை நேரத்தில் பணிக்குச் செல்லும் பொது மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் பனிமூட்டம் – விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு appeared first on Oruvan.com.

நடுவானில் பறந்த விமானத்தில் கோளாறு – அவரசமாக தரையிறக்கம்
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 166 பயணிகளுடன் கோழிக்கோடுக்கு தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று பயணித்திருந்தது.

இந்நிலையில், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்த விமானி கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

எனினும், பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நள்ளிரவு 12.10 மணி அளவில் விமானத்தை அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று மாலை கோழிக்கோடு புறப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

The post நடுவானில் பறந்த விமானத்தில் கோளாறு – அவரசமாக தரையிறக்கம் appeared first on Oruvan.com.