Chemmani News Archives - Oruvan.com

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம்
“செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும்.

இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும்” என பிரித்தானியாவாழ் புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

‘இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என வலியுறுத்தினர்.

செம்மணி மனித புதைகுழியில் பல 50 இற்கும் அதிகமான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனவே, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுவதன் ஊடாகவே செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்.

பிரித்தானிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்தினர்.

The post செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம் appeared first on Oruvan.com.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

வழக்கு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழி விவகாரம் நீதிமன்றத்திலே கூப்பிடபட்டது. அந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு அறிக்கையையும் பேராசிரிரியர் ஒரு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்கள்.

இதில் பேராசிரியருடைய அறிக்கையிலே ஸ்கானர் பாவிக்கப்பட்டதற்கு பின்னர் இன்னமும் குறைந்தது எட்டு வாரகாலத்திற்கு மேலதிக அகழ்வுகள் செய்ய வேண்டிய தேவை இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

அது சம்பந்தமாக நீதிவான் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதற்குரிய ஒழுங்குகள் செய்யுமாறும் கட்டளையிட்டிருக்கிறார்.

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்ற அனுமதியை கோரி இங்கே மேற்பார்வையை செய்வதற்கு அனுமதி பெற்றிருந்தது.

அந்த வகையிலே இரண்டு தடவைகள் நான் அங்கே சென்றிருந்தேன். அதனடிப்படையிலே மன்றிலே இன்றைக்கு சில விடயங்களை மன்றினுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன்.

இதில் முதலாவதாக இந்த அகழ்வு ஒரு மரண விசாரணையில் தான் இது நிகழ்கிறது. குற்றவியல் நடவடிக்கையிலும் இப்படியான விடயத்திற்கு என்று சட்ட ஏற்பாடுகள் எதுவும் கிடையாது.

ஆகையினாலே ஒரு உடல் எங்காவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக ஒரு மரண விசாரணையாகத் தான் அது மாறுகிறது. அதனால் தான் நீதிவான் அந்த மரண விசாரணையை நடாத்துகிறார்.

எந்த மரண விசாரணையிலும் மிக முக்கியமான ஒரு விடயம் அந்த உடல் யாருடையது என்ற அடையாளப்படுத்துதல். அவ்வாறு அடையாளப்படுத்துவது தான் பிரதான நோக்கமாகும் இருக்கிறது.

ஆகவே அகழ்வுப் பணிகள் நடைபெறுகிறதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இதனை அடையாளப்படுத்துவது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் சட்ட வைத்திய அதிகாரி இன்னுமொரு விடயத்தையும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இங்கிருப்பவர்களுக்கு நிபுணத்துவம் இல்லை என்றெல்லாம் போலியான செய்திகள் ஊடகங்களில் பரப்பபடுகிறது என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதைப் பற்றிய முறைப்பாடுகள் நேரடியாக எழுத்து மூலமாக செய்யுமாறும் பணிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அகழ்வுப் பணியில் நிபுணத்துவம் இருந்தாலும் அடையாளப்படுத்தலிலே இந்த நாட்டில் நிபுணத்துவம் இல்லை என்பது எல்லோருக்கும் எல்லாருக்கும் தெரிந்த விடயம் என்கின்ற சமர்ப்பணத்தை நான் முதலிலே செய்தேன்.

அதற்கு சான்றாக மன்னார், மாத்தளை போன்ற விடங்களிலும் சான்று பொருட்கள் முதலில் வெளியே அனுப்பப்பட்டன.

கடந்த 1999 ஆம் ஆண்டு செம்மணியிலே கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூட்டு தொகுதி சான்றுப் பொருட்களும் முதலிலே கைதராபாத் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கேயும் அதற்கான நிபுணத்துவம் இல்லையென்று திருப்பி கொண்டுவரப்பட்டு அது பின்னர் லாஸ்கோ பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டு அந்த சான்று பொருட்கள் தற்போது லங்க சேய பல்கலைக்கழகத்தில் இருப்பதாக நாங்கள் அறிகிறோம் என்ற தகவலை மன்றுக்கு நான் கொடுத்திருக்கிறேன்.

அந்த வேளையிலே சோமரட்ன ராஜபக்ச என்கின்ற ஒரு மரண தண்டனைக் கைதி மரண தண்டனை விதிக்கிற போது மேல் நீதிமன்றத்திலே செய்த கூற்றின் அடிப்படையிலே தான் அந்த அகழ்வு நடத்தப்பட்டது.

ஆனால் 15 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மட்டும் தான் கண்டெடுக்கப்பட்டன. அது அகழ்வதற்கு முன்னதாக அவர் செய்த கூற்றிலே 300 தொடக்கம் 400 வரையான என்று அவர் சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் அந்த வேளையில் செய்த அகழ்வுப் பணியிலே 15 மட்டும் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது ஏற்கனவே 150 எலும்புக்கூட்டு தொகுதிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டிருக்கிற காரணத்தினாலே அவர் காண்பித்த இடத்திற்கு மிக அருகாமையிலே இருப்பதால் இதைத்தான் அவர் சொல்லியிருக்க வேண்டும்.

26 வருடங்களுக்கு பிறகு இது தற்செயலாக கண்டெடுக்கப்பட்டதாக இருந்தாலும் இப்படி இங்கே நூற்றுக் கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டதென்று அவர் 26 வருடங்களுக்கு முன்னர் சொன்னது சரியானதாக இப்பொழுது நிரூபணமாகிறது என்ற அடிப்படையிலே அந்த விடயத்தோடு இந்த விடயமும் தொடர்புபட்டது என்பது கண்கூடாகக் தெரிகிறது என்ற சமர்ப்பணத்தையும் செய்தேன்.

அந்த விடயத்திலே B2899 என்கின்ற வழக்கு யாழ் நீதிவான் நீதிமன்றத்திலே ஆரம்பிக்கப்பட்டு பல இரானுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் முதலில் வைக்கப்பட்டு பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் சிலர் விடுவிக்கப்பட்டு பின்னர் ஐந்து பேர் பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த வழக்கு அவர்களுடைய பாதுகாப்பின் நிமித்தமாக முதலிலே அனுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு அது இப்பொழுது கொழும்பிலே பிரதான நீதவான் நீதிமன்றத்திலே இருக்கிறது என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

அதையும் நான் மன்றுக்கு சொல்லி B2899 என்கின்ற யாழ் நீதவான் நீதிமன்ற வழக்கேட்டில் இருந்து அனுப்பப்பட்ட அந்த வழக்கை மீளவும் இந்த நீதிமன்றத்திற்கே பாரப்படுத்துமாறு ஒரு கோரிக்கையை நீதவான் செய்ய வேண்டுமெனக் கேட்டிருந்தேன்.

அவர் இந்த விடயத்திலே அப்படியாக இந்த இரண்டும் தொடர்புபட்டதா என்பதை முதலிலே பரிசீலித்து அவ்வாறு தொடர்புபட்டதாயின் அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்திருக்கிறார்.

அதேபோல் சோமரட்ன ராஜபக்ச எந்தக் காலப் பகுதியிலே இங்கு உடல்கள் புதைக்கப்பட்டது என்று சொன்னாரோ அதே 1999 ஆண்டு அந்தக் காலப் பகுதியிலே இந்தப் பிரதேசத்திலே பிரதானமாக பலர் காணாமல் ஆக்கப்பட்ட முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமை சங்கத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்ததன் காரணமாக கலாநிதி தெவநேசன் நேசையாவின் தலைமையிலே இன்னும் மூவரடங்கிய விசாரணைகுழு நியமிக்கப்பட்டு அவர்கள் 2003ஆம் ஆண்டு ஒக்ரோபர் 28 ஆம் திகதி தங்களுடைய விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து அது அந்த நேரமே பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.

210 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையொன்றின் பிரதியை நான் மன்றுக்கு சமர்ப்பித்து இருக்கிறேன். அந்த அறிக்கையிலே காணாமல் ஆக்கப்பட்ட வர்கள் அரியாலை, சாவகச்சேரி நாவற்குழி யாழ்பாண நகர் மற்றும் நகரை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இதில் 300 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இருந்தாலும் 200 இற்கும் மேற்பட்டவைக்கு படைத்தரப்பினரே பொறுப்பானவர்கள் என்றும் திட்டவட்டமாக அதிலே சொல்லப்பட்டிருக்கிறது.

அதில் பல விபரங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. அந்தப் படைத்தரப்பினர் யார் எந்தெந்த முகாம்களில் யார் யார் இருந்தார்கள் என்று பெயர்கள் அதிலே கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முகாம்களுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் யார் என்ற விபரங்கள் எல்லாம் அதிலே கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகையினாலே இந்த விபரங்களை இப்பொழுது மன்றிலே சமர்ப்பிக்கிற பொழுது இதற்கு பொறுப்பாக இருந்திருக்க கூடியவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் கூடுதலாக இருக்கிற காரணத்தினாலே இது சம்பந்தமாக உரிய உத்தரவு கொடுக்க வேண்டுமென நான் கோரியிருக்கிறேன்.

அப்படியான ஒரு உத்தரவையும் மன்று செய்யவில்லை. ஆனால் அது சம்பந்தமாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அதனை அறிந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டிருக்கிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பொறுத்த வரையிலே இந்த விடயங்கள் சம்பந்தமாக அவர்கள் இப்பொழுது புலன் விசாரணை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

சாதாரணமாக மரண விசாரணை முடிவடைந்த பிறகு தான் புலன் விசாரணை ஆரம்பமாகும். ஆனால் சமாந்தரமாக ஒரு புலன் விசாரணை தேவை என்று பொலிஸ்மா அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் செய்கிறார்கள்.

ஆரம்பத்திலே அதற்கு எதிர்ப்பு எதுவும் இல்லையென்றாலும் இன்றையதினம் நானும் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களும் சட்டத்தரணி குருபரன் அவர்களும் சிலரை வாக்கு மூலம் பெறுவதற்கு வரவழைத்து அவர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பயமுறுத்திய ஆண்கள் என்ற முறைப்பாட்டை முன்வைத்திருக்கிறோம்.

அதனடிப்படையிலே வாக்குமூலம் கொடுக்க எவரும் முன்வருகிற போது அங்கேயே இந்த மயானத்திலேயே அந்தப் பிரதேசத்திலேயே அனைவரும் காணக்கூடிய இடத்திலேயே வாக்கு மூலங்களை பதிவு செய்வது உசிதமானது என்று நீதவான் உத்தரவிட்டிருக்கிறார்.

நான் விசேடமாக என்னுடைய விண்ணப்பத்திலே குற்றப் புலனாய்வு திணைக்களத்தை இந்த விடயத்திலிருந்து அகற்றுமாறு ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன். இந்த வேளையிலே அவர்கள் இதிலே ஈடுபடத் தேவையில்லை. அவர்களை இங்கே இருந்து அகற்றுமாறு ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல சான்றுப் பொருட்களும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்படுவதாக இருந்தால் அந்தப் பல்கலைக்கழக ஆய்வு கூடங்களிலே இதைச் செய்யப் போகிறவர்கள் இப்பொழுது ரத்து இதனை மேற்பார்வை செய்ய வேண்டும்.

ஏனென்றால் யாருடைய கட்டுக்காவலில் இந்த சான்றுப் பொருட்கள் எப்படியாக கைமாறுகின்றன என்பது ஒரு முக்கியமான விடயம்.

ஆகையினாலே இதனையும் செய்ய வேண்டுமென நான் விடுத்த கோரிக்கைக்கு நீதவான் அவர்கள் சட்டவைத்திய அதிகாரியிடத்தே இதை ஆராயுமாறு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.

இதை ஆராய்ந்து எப்படியான பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடியுமென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார். சட்ட வைத்திய அதிகாரி இன்னுமொருவிடயத்தை மன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதாவது யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலே DNA பரிசோதனை செய்வதற்கான ஒரு ஆய்வு கூடம் நிறுவப்பட்டுக் கொண்டு இருப்பதாகவும் அதற்குத் தேவையான உபகரணங்கள் வந்து சேர்ந்து விட்டது என்றும் வெகு விரைவிலே தங்களாலே இதனைச் செய்ய முடியுமென்றும் சொல்லியிருந்தார்.

ஆனால் முதன் முதலிலே செய்யப்படுகிற பரிசோதனை இந்தப் பரிசோதனையில் இருப்பது உசிதமல்ல என்கின்ற விடயத்தை நான் மன்றுக்கு தெரியப்படுத்தி இருக்கிறேன்.

இந்த விடயங்களிலே தெளிவாக நிபுணத்துவம் வாய்ந்தது என்பது மட்டுமல்ல அனுபவமுள்ள ஒரு ஆய்வுகூடம் அல்லது பல்கலைக்கழகம் இதைச் செய்வது உசிதம் என்ற கருத்தையும் நான் முன்வைத்திருக்கிறேன்.

ஆகவே அது குறித்த தீர்மானம் பின்னர் எடுக்கப்படும். எட்டு வாரங்களுக்கு இதனை ஆய்வு செய்கிற ஒழுங்குகள் விசேடமாக அதற்கான நிதி ஒதுக்கீடுகள் சம்பந்தமான விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்கின்ற உத்தரவும் தற்பொழுது கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் 20 ஆம் திகதி இந்த இடம் மீள் சுத்தப்படுத்தபடுவதாகவும் அதற்குப் பின்னர் 22 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் நீதவான் கூறியிருக்கிறார்- என்றார்.

The post செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் ஆரம்பம் appeared first on Oruvan.com.

இலங்கையில் நிலத்துக்கீழ் தான் பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன – எம்.ஏ. சுமந்திரன்
இலங்கையில் நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை நேற்று திங்கட்கிழமை (04) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது.

அதனை பாவிப்பதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது அசைவுகள் இருந்தால் இந்த இயந்திரம் அதனை வெளிக்கொண்டு வரும் எனச் சொல்கிறார்கள்.

இந்த மனிதப் புதைகுழியில் இப்பொழுது 130 இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொருநாளும் இங்கு எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

இதனுடைய பின்னணியை நாங்கள் பார்ப்போமாக இருந்தால் 1999 ஆம் ஆண்டு சோமரட்ன ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சொன்ன கூற்றின் பிரகாரம் அக்கால பகுதியில் 15 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து தற்போது தற்செயலாக கண்டெடுக்கப்பட்ட எலும்புகூட்டினால் தொடரும் அகழ்வு பணியில் நூற்றுக்கணக்கான எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இப்போது கண்டெடுக்கப்படுகின்றவை அந்த வேளையில் சோமரட்ன ராஜபக்ஷ சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப் போகிறது.

அவர் 300 தொடக்கம் 400 வரையான உடல்கள் புதைக்கப்பட்டன என்றும் அதிலே இராணுவ மிக உயர் அதிகாரிகள் பங்காளர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் அப்போது சொன்ன விடயம் கால் நூற்றாண்டுக்கு மேலாக அதாவது, 25 வருடங்களுக்கு பின்னர் இப்போது அதனுடைய உண்மைத்தன்மை வெளிப்படுகிறது.

நான் பல தடவைகள் முன்னரே சொல்லி இருந்ததைப் போல உண்மை கண்டறியப்படுகிற பொறிமுறைமை குறித்து நாங்கள் பேசுகின்ற போது, இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் இந்த உண்மைகள் பல புதைக்கப்பட்டு இருக்கின்றன.

ஆகவே இந்த மனிதப் புதைகுழிகள் தோண்டப்படுகிற விடயம், உண்மை கண்டறியப்படுகிற செயன்முறையிலே மிகவும் முக்கியமான ஒரு பங்களிப்பைச் செலுத்துகிறது.

பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன. இது மூடி மறைக்கப்படும் அல்லது அப்பொழுது செம்மணியிலே செய்துவிட்டு கைவிட்டது போல அப்படியே இதுவும் கைவிடப்படுமா அல்லது மன்னாரில், கொக்குத்தொடுவாய் மற்றும் மாத்தறையில் நடந்ததை போல இருக்குமா என்று பலவிதமான சந்தேகங்கள், கேள்விகள் பலருக்கு இருக்கிறது.

வேண்டுமென்றே தமிழ் மக்கள் ஒரு இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தற்கால சான்றுகள் இங்கே இருந்து ஆரம்பமாகிறது போலவும் தோன்றுகிறது.

ஆகவே இதற்கான சான்றுகளை சேகரிக்கிற பொறிமுறைகள் விசேடமாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே தற்பொழுது ஒஸ்லெப் என்ற பொறிமுறை இருக்கிறது. அதாவது சான்று பதிவு செய்வதும் பாதுகாப்பதுமான பொறிமுறை. அவை எல்லாம் வரவழைக்கப்பட்டு இங்கே நடந்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே அரசாங்கத்திற்கு நாங்கள் சொல்வது இதிலே முழுமையான வெளிப்படைத் தன்மையோடும் சர்வதேச மேற்பார்வையோடும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். ஆகையினாலே திரும்பவும் ஒரு சர்வதேச பொறிமுறை இதற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மேலும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கும் செம்மணி வழக்கை இங்கே இடமாற்ற வேண்டும்.

இங்கே இருந்த வழக்கை அப்பொழுது சந்தேக நபர்களாக இருந்த இராணுவத்தினர் இங்கே பாதுகாப்பு போதாதென்று கூறி அனுராதபுரத்திற்கு மாற்றி பின்னர் கொழும்பிற்கு மாற்றப்பட்டு அங்கே வழக்கு நடைபெற்று வருகிறது.

ஆகையினாலே அந்த வழக்கு இங்கே திரும்பவும் கொண்டுவரப்பட்டு இந்த வழக்கோடு சேர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

The post இலங்கையில் நிலத்துக்கீழ் தான் பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன – எம்.ஏ. சுமந்திரன் appeared first on Oruvan.com.

செம்மணியில் ஸ்கேன் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை

அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்நடவடிக்கையை அடுத்து , இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் , மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சான்று பொருட்களை பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post செம்மணியில் ஸ்கேன் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் appeared first on Oruvan.com.

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டது மனித உரிமைகள் ஆணைக்குழு
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி அமைந்துள்ள பகுதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டிருந்தனர்.

இன்று காலை 10 மணிக்கு குறித்த பகுதிக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினரே இவ்வாறு மனித புதைகுழியை பார்வையிட்டிருந்தனர்.

The post செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டது மனித உரிமைகள் ஆணைக்குழு appeared first on Oruvan.com.

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மேலும் எழும்புக் கூட்டு தொகுதிகள் மீட்பு
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் மூன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 14 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 55 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 29 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 14 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் வரையில் 55 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 38 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 120 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 130 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நாளைய தினம் திங்கட்கிழமை மேலும் செம்மணியில் தற்போதுள்ள 2 மனித புதைகுழிகளை விட அயலில் மேலும் மனித புதைகுழிகள் உள்ளனவா என்பதனை ஆராயும் நோக்கில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காணும் வகையில் அவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மேலும் எழும்புக் கூட்டு தொகுதிகள் மீட்பு appeared first on Oruvan.com.

செம்மணிக்கு 11.7 மில்லின் ரூபாய் ஒதுக்கீடு, புதைகுழியில் 72வது எலும்புக்கூடு கண்டறியப்பட்டது
நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

10 நாள் இடைவேளைக்குப் பின்னர் அகழ்வாய்வின் முதல் நாளில் மேலும் ஏழு எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், அகழ்வாய்வுத் தளத்தில் வைத்து நேற்றைய தினம் (ஜூலை 21) ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“இன்றைய 16ஆம் அகழ்வில் முதலாவது ‘சைட் வன்’ புதைகுழியில் நான்கு மண்டையோட்டுத் தொகுதிகள் பகுதியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை இரண்டாவது புதைகுழியில் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு மொத்தமாக 7 அடையாளம் காணப்பட்டுள்ளன.”

யாழ்ப்பாண பொலிஸாரினால் நடத்தப்பட்ட நீதித்துறை நடவடிக்கைகள் குற்றவியல் விசாரணை பிரிவுக்கு (CID) மாற்றப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

ஜூலை 10 ஆம் திகதி அகழ்வாய்வுக் குழுவினருக்கு ஓய்வு அளிக்க தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டபோது, 15 நாட்களாக தொடர்ந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து 65 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட செம்மணி புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை 72 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

செம்மணி உள்ளிட்ட புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளின் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“மனித புதைகுழிகளில் இருந்து உடல்களை தோண்டி எடுக்கவும், சாட்சிகளைப் பாதுகாக்கவும், பயனுள்ள விசாரணைகளை நடத்தவும், இறந்தவர்களை அடையாளம் காணவும் போதுமான நிதி ஒத்துழைப்பு, நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்கவும்” அரசாங்கத்திற்கு பரிந்துரைக்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்படுகின்றவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்மணி அகழ்வுப் பணிக்காக 11.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தை வெளிப்படுத்திய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார “பணம் ஒரு பிரச்சினை அல்ல” என இந்தியாவின் தி இந்து ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், ஓகஸ்ட் 6 ஆம் திகதி அகழ்வாய்வுத்தளத்தில் வழக்கு விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post செம்மணிக்கு 11.7 மில்லின் ரூபாய் ஒதுக்கீடு, புதைகுழியில் 72வது எலும்புக்கூடு கண்டறியப்பட்டது appeared first on Oruvan.com.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் 21ஆம் திகதி ஆரம்பம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வில் முதலாவதாக எடுத்த புதைகுழியில் 63 எலும்புக்கூடுகளும் அதற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட புதைகுழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகளை செய்து தருமாறு நீதிமன்றினால் கூறப்பட்டதற்கு அமைவாக அது சம்பந்தமான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பான சுருக்கமான விபரங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது மூன்று விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளனர். மனித புதைகுழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

வழமையான சடலங்கள் தகனம் செய்யப்பட்ட தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்ற விடயமும் மூன்றாவது இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எஸ் 25 ,எஸ் 48 , எஸ் 56 என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் மிக முக்கியமானதாக காணப்பட்டது. உடைகள், எலும்பியல் சம்பந்தமான விடயங்களில் ஒருமித்த தன்மை இருந்ததாக கூறப்பட்டது.

அதிலும் குறிப்பாக நான்கு தொடக்கம் 5 உத்தேச வயதை கொண்ட சிறுமியின் உடைய எலும்புக்கூடாக இருக்கலாம் என்று சந்தேகத்தினை பேராசிரியர் வெளியிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை மன்றம் பரிசீலனைக்கு எடுத்தது.

ஏற்கனவே மன்று இட்ட கட்டளைக்கு அமைவாக அகழ்வு பகுதிக்கு விஜயம் செய்கின்ற போது விண்ணப்பம் செய்து விஜயத்திற்கான தன்னுடைய காரணத்தினை வெளிப்படுத்தி நடைமுறை ஏற்று பின்பற்றப்படுவதாக நீதிவான் எடுத்துச் சொல்லி இருந்தார்.

அதற்கு மேலதிகமாக யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் பிரதிநிதிகளை அனுப்புவதற்கும் பொறுப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் காலை, மாலையில் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு கிரமமான முறையில் ஏற்கனவே அகழ்வாய்வில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிபுணர்களுக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் ஈடுபடுத்துவதற்கும் மன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணியின் பிரசன்னத்துடன் விஜயம் செய்யவும் மன்று அனுமதித்திருக்கிறது

இப்படியாக அனுமதித்திருக்கிறபோதும் ஊடகவியலாளர்கள், நிபுணர்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் அனுமதித்திருக்கிறது.

தேவையில்லாத கட்டுக்கதைகளையும் புனைகதைகளையும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சான்றாதாரங்கள் சம்பந்தமான பொருள்களையும் மக்கள் மத்தியில் தேவையில்லாத விசனத்தையும் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்திருக்கிறார். ஆகவே 21ம் திகதி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – என்றார்.

குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.

The post செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் 21ஆம் திகதி ஆரம்பம் appeared first on Oruvan.com.

செம்மணி மனித புதைகுழியில் பொலித்தீனால் கட்டப்பட்ட எலும்புக் குவியல்!
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட – இலங்கையின் மிகப்பெரிய நான்காவது மனித புதைகுழி வளாகத்தின் அகழ்வாய்வு தளத்தின் இரண்டாவது பகுதியில் பொலித்தீனால் சுற்றப்பட்ட மனித எலும்புகளின் ஒரு குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து ஜூலை 10ஆம் திகதியான இன்று வரை அகழந்து எடுக்கப்பட்ட (சிறுவர்கள் உட்பட) மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 65 ஆகும்.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வு 15 நாட்கள் இடம்பெற்ற பின்னர், அகழ்வாராய்ச்சி குழுவினருக்கு ஓய்வு அளிக்கும் வகையில், இன்றைய தினம் அகழ்வாராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பொலித்தீனில் கட்டப்பட்ட எலும்புகள் அடங்கிய குவியல் தொடர்பில் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவுக்கு நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவினால் உத்தரவிடப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிட்டார்.

“அகழ்வுப்பணி பிரதேசம் இரண்டில் ஒரு பொலித்தீனினால் கட்டப்பட்ட எலும்புக் குவியல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த தொகுதியில் சிறிய மற்றும் பெரிய எலும்புப்துண்டுகள் காணப்பட்டதால், அந்த எலும்புகள் குறித்து ஆய்வு குறித்த அறிக்கை ஒன்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சடடத்தரணிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் தலைமையில் சட்ட வைத்திய அதிகாரிகள் குழு ஒன்றை உருவாக்கி, எடுக்கப்பட்ட அந்த எலும்புகளை ஆராய்ந்து ஆகக் குறைந்த மனித உடல்களின் எண்ணிக்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் அறிவித்தார்.”

இதுவரை, செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மூன்று இடங்களில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் அந்த இடங்கள் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் 1, 2 மற்றும் 3 என பெயரிடப்பட்டுள்ளன.

மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு குறித்த அறிக்கையை ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவுக்கு நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

நீல நிறப் பை, காலணிகள் மற்றும் சிறு பிள்ளையினுடையது என சந்தேகிக்கப்படும் பல மனித எச்சங்களுடன் கண்டெடுக்கப்பட்ட 25 ஆம் இலக்க மனித எலும்புக்கூடு குறித்த அறிக்கையை ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி, செல்லையா பிரணவனுக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதி அமைச்சு 45 நாட்களுக்கு அகழ்வாய்வுக்குத் பணிக்காக கோரப்பட்ட முழுத் தொகையையும் வழங்கியுள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்த சட்டத்தரணி ரணிதா, அந்தத் தொகையை வெளியிடவில்லை.

அகழ்வாய்வினை தடையின்றித் தொடர போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக உறுதியளித்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் சார்பான சட்டத்தரணி மிராக் ரஹீம், மனித புதைகுழி வளாகத்திற்கு 24 மணி நேரம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அகழ்வாய்வுக் குழுவினருக்கு ஓய்வளிக்கும் வகையில் இன்றைய தினம் (ஜூலை 10) தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் ஜூலை 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஊடகங்களிடம் தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு மாணவர்களுடன், வைத்தியத்துறை மாணவர்களும் இன்று அகழ்வுப் பணிகளில் பங்கேற்றதாக மேலும் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தால் குற்றம் இடம்பெற்ற இடமாக அறிவிக்கப்பட்டுள்ள செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் தற்போதுள்ள மூன்று சிசிடிவி கமராக்களுடன் மேலதிகமாக இரண்டு சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக அகழ்வாய்வுப் பணிகளை அறிக்கையிட்ட உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post செம்மணி மனித புதைகுழியில் பொலித்தீனால் கட்டப்பட்ட எலும்புக் குவியல்! appeared first on Oruvan.com.

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது!
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது.

2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடங்கும்.

முன்னர் அடையாளம் காணப்பட்ட நான்காவது பெரிய புதைகுழி, 52 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆகும்.

நீதிமன்றத்தால் குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கண்டறியப்பட்ட 56 மனித எலும்புக்கூடுகளில், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 13ஆவது நாளான இன்றைய தினம் (ஜூலை 8) வரையில் 50 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது புதைகுழியில் மூன்று இடங்களில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மனித எலும்புக்கூடுகள் இன்னும் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்ததை அடுத்து, ஜூன் 2 புதன்கிழமை இரண்டாவது இடத்தில் அகழ்வு ஆரம்பமானது.

இதற்கு ‘தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2’ என பெயரிடப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மூன்று என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.

“தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2 இல் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் 3 எலும்பு எச்சங்கள் இன்னும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை. நாளை அது அகழ்வுக்கு இலக்கமிடப்படும். அதன் பின்னர் அகழ்வு இடம்பெறும்.”

அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமான முதல் இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 1 எனவும், வரவிருக்கும் மழைக்காலத்தை சமாளிக்க வாய்க்கால் தோண்டும்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 3 எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக, தடயவியல், மானுடவியல் மற்றும் தடயவியல் தொல்பொருளியல் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற சட்டத்தரணி ரணிதா ஞானராஜா யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

முதல் தடயவியல் அகழாய்வுத்தளத்தில் 20 மீற்றர் தொலைவில் 11 மீற்றர் அகலமும் நீளமும் கொண்ட ஒரு புதிய கான் ஒன்று தோண்டப்பட்டுள்ளது, இது செம்மணி மனித புதைகுழியின் பரந்த தன்மையைப் பற்றிய ஒரு சிந்தனையை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு மேலதிகமாக, துணிகள், இரண்டு காலணிகள், ஒரு சிறு குழந்தையினுடையது என நம்பப்படும் இரண்டு வளையல்கள் மற்றும் ஒரு பொம்மை உள்ளிட்ட கருவிகளும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவனின் மேற்பார்வையின் கீழ் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சேமிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய மனித புதைகுழியின் அகழ்வாராய்ச்சி சர்வதேச தரத்திற்கு அமைய பாரபட்சமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் அங்கீகரித்தது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஜூன் 25 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு அருகில், மனித புதைகுழிகள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டுவர தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் விரிவான, வலுவான விசாரணை தேவை எனக் கூறியிருந்தார்.

மனித உரிமைகள் ஆணையாளரை மனித புதைகுழியை ஆய்வு செய்ய அனுமதிப்பதாக பகிரங்கமாக உறுதியளித்த அரசாங்கம், அதைத் தடுப்பதற்கான தோல்வியுற்ற, திட்டமிட்ட முயற்சி என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்கொள்கிறது.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இலங்கையில் மூன்றாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி ஆகும், அங்கு அதே ஆண்டில் 82 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன.

ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.

The post செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது! appeared first on Oruvan.com.