ceasefire Archives - Oruvan.com

போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி
அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் முன்வந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் முயற்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் அண்டு ஒக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்தது.

இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக காசாவில் 65,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், “மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் அமைதி ஏற்பட வேண்டும். ரத்தம் தெறிக்கும் வன்முறை முற்று பெற வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.

அதில் உயிரிழந்தவர்களின் உடலையும் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக வொஷிங்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணிக்குள் அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் உடன்பட வேண்டும். அந்த ஒப்பந்தம் உலகத்தின் பார்வைக்கு பகிரப்படும்.

இதுவே ஹமாஸுக்கு இறுதி வாய்ப்பு. இதற்கு உடன்படவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக மிகவும் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அது இதுவரை யாரும் காணாத நரகமாக அமையும்.” என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கத் தயார் என்றும், உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தர்கள் மூலம் முன்னெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

The post போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி appeared first on Oruvan.com.

இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுல்
இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளதை துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டாம் பாரக் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கு துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன்படி, ஸ்வெய்டா மாகாணத்தில் சிரியாவின் குறிப்பிட்ட அளவிலான படையினர் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

எனினும், அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் கனடாவில் உள்ள சிரிய தூதரகம் இதற்கு உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் கடந்த புதன்கிழமை திடீரென இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதன்போது, ட்ரூஸ் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது.

பெண்கள், குழந்தைகள் என 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தெற்கு பகுதியில் குவிக்கப்பட்ட படைகள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன.

சிரியாவில் சிறுபான்மையினராக உள்ள ட்ரூஸ் மக்களை பாதுகாப்பதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

The post இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுல் appeared first on Oruvan.com.

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் இணக்கம்
இஸ்ரேலின் பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவது குறித்து  பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் முன்மொழியப்பட்ட காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசாவில் ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு, மத்தியஸ்தர்களின் அண்மைய திட்டம் தொடர்பாக பலஸ்தீன பிரிவுகளுடன் தமது இயக்கம் கலந்துரையாடல்களை

நிறைவுசெய்துள்ளதாக ஹமாஸ் தனது உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சுமார் 21 மாதங்களாக இடம்பெற்று வரும் மோதலில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கான இறுதி முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.

இந்த ஒப்பந்ததிற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்ததாக கூறிய ட்ரம்ப் ஹமாஸும் இணங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் இணக்கம் appeared first on Oruvan.com.

போர் நிறுத்தத்தை உறுதி செய்தது ஈரான்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் போர் தீவிரமடைந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30க்கு போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இஸ்ரேல் போர் நிறுத்த திட்டத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post போர் நிறுத்தத்தை உறுதி செய்தது ஈரான் appeared first on Oruvan.com.

போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு புடினுக்கு ஐரோப்பிய தலைவர்கள் அழுத்தம்
நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அழைப்பு விடுப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

புடின் இதற்கு மறுப்பு தெரிவித்தால் ரஷ்யா மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைனில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதன் ஒரு பகுதியாக 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள ரஷ்யா மீது அழுத்தம் கொடுத்துள்ளனர், மாஸ்கோ மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

ரஷ்யாவுடனான இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உக்ரைன் இணக்கம் தெரிவித்துள்ளது.

The post போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு புடினுக்கு ஐரோப்பிய தலைவர்கள் அழுத்தம் appeared first on Oruvan.com.

தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தி, பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில்,பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என கூறிய நெதன்யாகு காசாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இஸ்ரேலியப் படைகளை குவிக்க உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 76 பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோருகிறாரா, அல்லது இந்த சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ள மூவரை மட்டும் கோருகிறாரா என்பதை நெதன்யாகு தெரிவிக்கவில்லை.

அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒப்பந்தத்தின் பல கட்ட அணுகுமுறையை முற்றிலுமாக நிராகரித்து, அனைத்து பணயக்கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்க பரிந்துரைத்துள்ளார்.

The post தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை appeared first on Oruvan.com.