CCTV Archives - Oruvan.com

கொழும்பில் மூன்றில் ஒரு பகுதி சிசிடிவி கெமராக்கள் செயற்படவில்லை!
பாதுகாப்பு நோக்கங்களுக்காக கொழும்பு முழுவதும் நிறுவப்பட்ட சிசிடிவி கெமராக்களில் மூன்றில் ஒரு பகுதி செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நகரின் கண்காணிப்ப, போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையான குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் சமீபத்திய தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி காணொளி கண்காணிப்புக்காகவும், போக்குவரத்து சட்ட மீறல்களைக் கண்டறியவும், வாகன இயக்கத்தை நிர்வகிக்கவும், பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் கொழும்பில் 33 முக்கிய இடங்களில் 108 கெமராக்கள் நிறுவப்பட்டன.

எனினும் அவற்றில் 23 இடங்களில் 37 கெமராக்காள் செயற்பட்டவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

14 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த அமைப்பை, காலாவதியான தொழில்நுட்பம் காரணமாக இனி சரிசெய்ய முடியாது என்று கணக்கியல் அதிகாரி தணிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் முழு கெமரா வலையமைப்பையும் நவீனமயமாக்குவதற்கான திட்டங்கள் மற்றும் செலவு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மைக்ரோசாப்ட் 2014 ஆம் ஆண்டில் அதற்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும், சிசிடிவி அமைப்பு விண்டோஸ் எக்ஸ்பி இயக்க முறைமையில் தொடர்ந்து இயங்குகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலாவதியான மென்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்துவது செயல்பாட்டு சிக்கல்களையும் அதிகரித்த பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்று தணிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே, கணினி இயக்க முறைமையை தாமதமின்றி நவீன தரத்திற்கு மேம்படுத்த வேண்டும் என்று தணிக்கை அறிக்கை செய்தது.

தற்போது பொலிஸார் சிசிடிவி கெமராக்களைப் பயன்படுத்தி போக்குவரத்து குற்றங்களைக் கண்காணித்து வருகின்றனர்.

2024ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் கொழும்பில் பிடிக்கப்படும் விதிமீறல்கள், சிசிடிவி பிரிவு மூலம் செயல்படுத்தப்பட்டு, அபராத பற்றுச்சீட்டு மற்றும் காட்சிகள் வாகன உரிமையாளருக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொழும்பில் மூன்றில் ஒரு பகுதி சிசிடிவி கெமராக்கள் செயற்படவில்லை! appeared first on Oruvan.com.

இங்கிலாந்தில் இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்
வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் வால்சால் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இன வெறி காரணமாக குறித்த இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் 30 வயதுடைய வெள்ளையர் எனவும், குறுகிய முடி மற்றும் கருநிற ஆடைகள் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இளம் பெண் மீதான மிகவும் கொடூரமான தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் சந்தேகநபரை கைது செய்யவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக  விசாரணை அதிகாரி  தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் தெரியும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

The post இங்கிலாந்தில்  இந்திய  பெண்  பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் appeared first on Oruvan.com.

அனுராதபுரத்தில் பொருத்தப்பட்ட CCTV கெமராக்கள் தொடர்பில் வெளியான தகவல்
அனுராதபுரம் நகரத்தின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள 47 கெமராக்களும் செயலிழந்துள்ளதாக பிரதேச மக்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நகரில் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கண்டறியும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் அனுராதபுரம், ஹபரணை மற்றும் பொலன்னறுவை ஆகிய நகரங்களின் பாதுகாப்பிற்காக 7 மில்லியன் ரூபா செலவில் CCTV அமைப்புகளை நிறுவ வடமத்திய மாகாணசபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து அங்கு 47 கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவற்றில் எதுவும் தற்போது செயல்படவில்லை எனவும், CCTV அமைப்பை நிறுவிய தனியார் நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தம் ஏப்ரல் 2024ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தமையே இதற்கு காரணமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , CCTV கெமரா அமைப்பின் செயலிழப்பானது அனுராதபுரம் நகரின் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள், சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post அனுராதபுரத்தில் பொருத்தப்பட்ட CCTV கெமராக்கள் தொடர்பில் வெளியான தகவல் appeared first on Oruvan.com.