calls Archives - Oruvan.com

அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ பொறுப்பல்ல என்ற போதிலும், ஒரு தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்த மிக நீண்ட கலந்துரையாடலில் இணைந்து கொண்ட ஜனாதிபதி, அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் கூறினார்.

பாடசாலைகளில் பணியாற்றி அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், எனவே ஆசிரியர் சேவை யாப்பிற்கு இணங்க, போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுமாறு அவர்களுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, ஜனாதிபதி மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

The post அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி appeared first on Oruvan.com.

இலங்கைக்கான USAID நிதியுதவி குறித்து விசாரணை நடத்த வேண்டும் – நாமல் வலியுறுத்தல்
இலங்கையில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

தனது எக்ஸ் தளத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிதியிலிருந்து பயனடைந்த அரசு சாரா நிறுவனங்களின் கணக்கு உட்பட, விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது,

மனிதாபிமான உதவி எனும் போர்வையில் ஏனைய நாடுகளில் ஸ்திரமின்மையை உருவாக்க சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின்

நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அண்மைய ஆண்டுகளில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்திலிருந்து

மில்லியன் கணக்கான டொலர்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை, 100 இற்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகப் பிரமுகர்கள் இந்த மானியங்களிலிருந்து பயனடைகிறார்கள்.

இருப்பினும், இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தெளிவான கணக்கு இல்லை” என்றார்.

மேலும் வெளிநாட்டு நிதியுதவி பெறும் திட்டங்களில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தி, அரசு சாரா நிறுவனங்களின் நிதியுதவி குறித்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற அவர் அழைப்பு விடுத்தார்.

The post இலங்கைக்கான USAID நிதியுதவி குறித்து விசாரணை நடத்த வேண்டும் – நாமல் வலியுறுத்தல் appeared first on Oruvan.com.